Chapter 3
Āzhvār's fear is appeased on realizing that those loyal to the Lord are everywhere - (அங்கும் இங்கும்)
எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்
Contemplating upon the beauty and elegance of Bhagavān’s physical attributes, Āzhvār, riddled with worry, says, “In this place where hostile people live, emperumAn parades around displaying His exquisite beauty! What if something untoward happens to Him?” Bhagavān responds saying, “Don’t fret Āzhveer. Mukthar, Nithyar and Mumukshu(s) are here to show their loyalty to me.” These divine hymns expound on how Āzhvār’s worry was soothed.
ஆழ்வார், பகவானின் எழில்மிகு சுகுமாரமான வடிவழகை நினைத்து “எம்பெருமான், அனுகூலர்களாக இல்லாதவர்கள் வாழும் இந்நிலத்தில் தன் வடிவழகைக் காட்டிக் கொண்டு உலாவுகிறானே! இவனுக்கு என்ன தீங்கு நேருமோ?” என்று அஞ்சினார். பகவான் “ஆழ்வீர், நீர் அஞ்ச வேண்டாம். என்மீது பரிவு காட்ட முக்தர், நித்யர், + Read more
Verses: 3585 to 3595
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will not be born in this wide world
- TVM 8.3.1
3585 ## அங்கும் இங்கும் * வானவர் தானவர் * யாவரும்
எங்கும் இணையை என்று * உன்னை அறியகிலாது அலற்றி **
அங்கம் சேரும் * பூமகள் மண்மகள் ஆய்மகள் *
சங்கு சக்கரக் கையவன் என்பர் * சரணமே (1) - TVM 8.3.2
3586 சரணம் ஆகிய * நான்மறை நூல்களும் சாராதே *
மரணம் தோற்றம் * வான்பிணி மூப்பு என்று இவை மாய்த்தோம் **
கரணப் பல் படை * பற்று அற ஓடும் கனல் ஆழி *
அரணத் திண் படை ஏந்திய * ஈசற்கு ஆளாயே (2) - TVM 8.3.3
3587 ஆளும் ஆளார் ஆழியும் * சங்கும் சுமப்பார் தாம் *
வாளும் வில்லும் கொண்டு * பின் செல்வார் மற்று இல்லை **
தாளும் தோளும் * கைகளை ஆரத் தொழக் காணேன் *
நாளும் நாளும் நாடுவன் * அடியேன் ஞாலத்தே (3) - TVM 8.3.4
3588 ஞாலம் போனகம் பற்றி * ஓர் முற்றா உரு ஆகி *
ஆலம் பேர் இலை * அன்னவசம் செய்யும் அம்மானே **
காலம் பேர்வது ஓர் * கார் இருள் ஊழி ஒத்து உளதால் * உன்
கோலம் கார் எழில் * காணலுற்று ஆழும் கொடியேற்கே (4) - TVM 8.3.5
3589 கொடியார் மாடக் * கோளூர் அகத்தும் புளியங்குடியும் *
மடியாது இன்னே * நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் **
அடியார் அல்லல் தவிர்த்த * அசைவோ? அன்றேல் * இப்
படி தான் நீண்டு தாவிய * அசைவோ? பணியாயே (5) - TVM 8.3.6
3590 பணியா அமரர் * பணிவும் பண்பும் தாமே ஆம் *
அணி ஆர் ஆழியும் * சங்கமும் ஏந்தும் அவர் காண்மின் **
தணியா வெம் நோய் * உலகில் தவிர்ப்பான் * திருநீல
மணி ஆர் மேனியோடு * என் மனம் சூழ வருவாரே (6) - TVM 8.3.7
3591 வருவார் செல்வார் * வண்பரிசாரத்து இருந்த * என்
திருவாழ் மார்வற்கு * என் திறம் சொல்லார் செய்வது என் **
உரு ஆர் சக்கரம் * சங்கு சுமந்து இங்கு உம்மோடு *
ஒருபாடு உழல்வான் * ஓர் அடியானும் உளன் என்றே? (7) - TVM 8.3.8
3592 என்றே என்னை * உன் ஏர் ஆர் கோலத் திருந்து அடிக்கீழ் *
நின்றே ஆட்செய்ய * நீ கொண்டருள நினைப்பதுதான்? **
குன்று ஏழ் பார் ஏழ் * சூழ் கடல் ஞாலம் முழு ஏழும் *
நின்றே தாவிய * நீள் கழல் ஆழித் திருமாலே (8) - TVM 8.3.9
3593 திருமால் நான்முகன் * செஞ்சடையான் என்று இவர்கள் * எம்
பெருமான் தன்மையை * யார் அறிகிற்பார்? பேசி என்? **
ஒரு மா முதல்வா * ஊழிப் பிரான் என்னை ஆளுடை *
கரு மா மேனியன் என்பன் * என் காதல் கலக்கவே (9) - TVM 8.3.10
3594 கலக்கம் இல்லா * நல் தவ முனிவர் கரை கண்டோர் *
துளக்கம் இல்லா * வானவர் எல்லாம் தொழுவார்கள் **
மலக்கம் எய்த * மா கடல் தன்னைக் கடைந்தானை *
உலக்க நாம் புகழ்கிற்பது * என் செய்வது? உரையீரே? (10) - TVM 8.3.11
3595 ## உரையா வெம் நோய் தவிர * அருள் நீள் முடியானை *
வரை ஆர் மாடம் * மன்னு குருகூர்ச் சடகோபன் **
உரை ஏய் சொல்தொடை * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
நிரையே வல்லார் * நீடு உலகத்துப் பிறவாரே (11)