Chapter 6

Āzhvār pleads to see the Lord driven by the Lord's beauty and qualities - (பா மரு)

எம்பெருமானது குணம் அழகு முதலியவற்றில் ஆழ்வார் ஈடுபட்டு அவனைக் காணுமாறு மனம் உருகி அழைத்தல்
Āzhvār due to his inability, cries out so loud to reach Bhagavān’s ears in the hope that He would come to his rescue.
தம்முடைய ஆற்றாமை எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டு, ஆழ்வார், பரமபாதநாதனின் செவியில் படும்படி குரலை உயர்த்திக் கூவி அழைக்கிறார்.

ஏழாம் பத்து -ஆறாந்திருவாய்மொழி-‘பாமரு’-பிரவேசம்-

இப்படித் தெளிந்தால், பின்னைச் செய்வது கூப்பிடுகை போலே காணும்; இல்லையாகில் ‘சம்சாரம் நன்று’ என்று கலங்கினார் + Read more
Verses: 3508 to 3518
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: பாலை யாழ்
Recital benefits: will be in heaven
  • TVM 7.6.1
    3508 ## பா மரு மூவுலகும் படைத்த * பற்பநாபா ஓ *
    பா மரு மூவுலகும் அளந்த * பற்ப பாதா ஓ **
    தாமரைக் கண்ணா ஓ! * தனியேன் தனி ஆளா ஓ *
    தாமரைக் கையா ஓ! * உன்னை என்றுகொல் சேர்வதுவே? (1)
  • TVM 7.6.2
    3509 என்றுகொல் சேர்வது அந்தோ! * அரன் நான்முகன் ஏத்தும் * செய்ய
    நின் திருப்பாதத்தை * யான்? நிலம் நீர் எரி கால் ** விண் உயிர்
    என்று இவை தாம் முதலா * முற்றும் ஆய் நின்ற எந்தாய் ஓ *
    குன்று எடுத்து ஆ நிரை மேய்த்து * அவை காத்த எம் கூத்தா ஓ! (2)
  • TVM 7.6.3
    3510 காத்த எம் கூத்தா ஓ! * மலை ஏந்திக் கல் மாரி தன்னை *
    பூத் தண் துழாய் முடியாய் * புனை கொன்றை அம் செஞ்சடையாய் **
    வாய்த்த என் நான்முகனே! * வந்து என் ஆர் உயிர் நீ ஆனால் *
    ஏத்து அரும் கீர்த்தியினாய்! * உன்னை எங்குத் தலைப்பெய்வனே? (3)
  • TVM 7.6.4
    3511 எங்குத் தலைப்பெய்வன் நான் * எழில் மூவுலகும் நீயே *
    அங்கு உயர் முக்கண் பிரான் * பிரம பெருமான் அவன் நீ **
    வெம் கதிர் வச்சிரக் கை * இந்திரன் முதலாத் தெய்வம் நீ; *
    கொங்கு அலர் தண் அம் துழாய் முடி * என்னுடைக் கோவலனே! (4)
  • TVM 7.6.5
    3512 என்னுடைக் கோவலனே! * என் பொல்லாக் கருமாணிக்கமே *
    உன்னுடை உந்தி மலர் * உலகம் அவை மூன்றும் பரந்து **
    உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால் * உன்னைக் கண்டு கொண்டிட்டு *
    என்னுடை ஆர் உயிரார் * எங்ஙனேகொல் வந்து எய்துவரே? (5)
  • TVM 7.6.6
    3513 வந்து எய்துமாறு அறியேன் * மல்கு நீலச் சுடர் தழைப்ப *
    செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து * ஒரு மாணிக்கம் சேர்வது போல் **
    அந்தரமேல் செம்பட்டோடு * அடி உந்தி கை மார்பு கண் வாய் *
    செஞ்சுடர்ச் சோதி விட உறை * என் திருமார்பனையே (6)
  • TVM 7.6.7
    3514 என் திருமார்பன் தன்னை * என் மலைமகள் கூறன் தன்னை *
    என்றும் என் நாமகளை அகம்பால் * கொண்ட நான்முகனை **
    நின்ற சசிபதியை * நிலம் கீண்டு எயில் மூன்று எரித்த *
    வென்று புலன் துரந்த * விசும்பு ஆளியைக் காணேனோ! (7)
  • TVM 7.6.8
    3515 ஆளியைக் காண் பரியாய் * அரி காண் நரியாய் * அரக்கர்
    ஊளை இட்டு அன்று இலங்கை கடந்து * பிலம் புக்கு ஒளிப்ப **
    மீளி அம் புள்ளைக் கடாய் * விறல் மாலியைக் கொன்று * பின்னும்
    ஆள் உயர் குன்றங்கள் செய்து * அடர்த்தானையும் காண்டும்கொலோ? (8)
  • TVM 7.6.9
    3516 காண்டும்கொலோ நெஞ்சமே! * கடிய வினையே முயலும் *
    ஆண் திறல் மீளி மொய்ம்பின் * அரக்கன் குலத்தைத் தடிந்து **
    மீண்டும் அவன் தம்பிக்கே * விரி நீர் இலங்கை அருளி *
    ஆண்டு தன் சோதி புக்க * அமரர் அரியேற்றினையே? (9)
  • TVM 7.6.10
    3517 ஏற்று அரும் வைகுந்தத்தை * அருளும் நமக்கு * ஆயர் குலத்து
    ஈற்று இளம் பிள்ளை ஒன்றாய்ப் புக்கு * மாயங்களே இயற்றி **
    கூற்று இயல் கஞ்சனைக் கொன்று * ஐவர்க்கு ஆய்க் கொடும் சேனை தடிந்து *
    ஆற்றல் மிக்கான் பெரிய * பரஞ்சோதி புக்க அரியே (10)
  • TVM 7.6.11
    3518 ## புக்க அரி உரு ஆய் * அவுணன் உடல் கீண்டு உகந்த *
    சக்கரச் செல்வன் தன்னைக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
    மிக்க ஓர் ஆயிரத்துள் * இவை பத்தும் வல்லார் அவரை *
    தொக்குப் பல்லாண்டு இசைத்துக் * கவரிசெய்வர் ஏழையரே (11)