Kaṇṇaṉ Will Grant Us Vaikuṇṭham.
கண்ணனே நமக்கு வைகுந்தம் தருவான்
3517 ஏற்றரும்வைகுந்தத்தை அருளும்நமக்கு * ஆயர்குலத்து
ஈற்றிளம்பிள்ளையொன்றாய்ப்புக்கு மாயங்களேயியற்றி *
கூற்றியல்கஞ்சனைக்கொன்று ஐவர்க்காயக்கொடுஞ்சேனை தடிந்து *
ஆற்றல்மிக்கான் பெரியபரஞ்சோதிபுக்கவரியே.