Chapter 3

Realizing the one who charmed her was the Lord of Thiruvinnagar - (நல்குரவும் செல்வும்)

தம்மை வசீகரித்தவன் ஸர்வே0வரன் என்று அருளிச் செய்தல் (திருவிண்ணகர்)
Āzhvār wonders, “I was stubborn not to unite with Him, but He forcefully united me.” emperumān declares His ability to do rare deeds and indicates His throne that is situated in Thiruvinnagar. Āzhvār rejoices in this new development. (Thiruvinnagar - Oppiliappan Temple)
“கூடேன் என்று இருந்த தம்மையும் எம்பிரான் வலிந்து கூட்டிக்கொண்டான்” என்பதை அறிந்த ஆழ்வார் வியக்கிறார். இவருக்கு எம்பெருமான் தனக்கே உரிய அரியன செய்யும் செயல் திறனை அறிவித்துக்கொண்டு, திருவிண்ணகரில் இருக்கும் இருப்பைக் காட்டினான். இந்நிலையைப் பேசி இன்பம் அடைகிறார் ஆழ்வார். (திருவிண்ணகர்-ஒப்பிலியப்பன் கோயில்)
Verses: 3365 to 3375
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நட்டராகம்
Timing: 12.00- 1.12 PM
Recital benefits: will become the gurus of the gods in the sky
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 6.3.1

3365 நல்குரவும்செல்வும் நரகும்சுவர்க்கமுமாய் *
வெல்பகையும்நட்பும் விடமும்அமுதமுமாய் *
பல்வகையும்பரந்தபெரு மானென்னையாள்வானை *
செல்வம்மல்குகுடித் திருவிண்ணகர்க்கண்டேனே. (2)
3365 ## நல்குரவும் செல்வும் * நரகும் சுவர்க்கமும் ஆய் *
வெல்பகையும் நட்பும் * விடமும் அமுதமும் ஆய் **
பல்வகையும் பரந்த * பெருமான் என்னை ஆள்வானை *
செல்வம் மல்கு குடித் * திருவிண்ணகர்க் கண்டேனே (1)
3365 ## nalkuravum cĕlvum * narakum cuvarkkamum āy *
vĕlpakaiyum naṭpum * viṭamum amutamum āy **
palvakaiyum paranta * pĕrumāṉ ĕṉṉai āl̤vāṉai *
cĕlvam malku kuṭit * tiruviṇṇakark kaṇṭeṉe (1)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

In Tiruviṇṇakar, filled with riches, I have witnessed my Liege-Lord, who encompasses within His vast universe pelf and penury, hell and Svarga, love and hatred, poison and nectar, and many such opposites.

Explanatory Notes

(i) The Āzhvār says that he has seen in Tiruviṇṇakar, the the Lord who composes within Himself all the incompatibles. It is He who kept kucela poor initially, then made him rich and again pushed him into penury. It is He that puts some people in the luxurious and delightful Svarga and consigns some others to the dismal hell; He engenders in us hatred as well as love for + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல்குரவும் செல்வும் வறுமையும் செல்வமும் ஆய்; நரகும் சுவர்க்கமும் ஆய் நரகமும் சுவர்க்கமும் ஆய்; வெல்பகையும் நட்பும் பகையும் நட்பும் ஆய்; விடமும் அமுதமும் ஆய் விஷமும் அமுதமும் ஆய்; பல்வகையும் பரந்த பலவகையாக விரிந்த; பெருமான் பெருமானை; என்னை ஆள்வானை என்னை ஆள்பவனை; செல்வம் மல்கு செல்வம் மிகுந்த; குடி மக்களை உடைய; திருவிண்ணகர் திருவிண்ணகரில்; கண்டேனே கண்டேன்
naragum hell which is the abode of sorrow; suvarggamum heaven which is the abode of joy; āy being [having as his form/attribute]; vel knocking down the opponents; pagaiyum hostility; natpum friendship which is the opposite of that; vidamum poison which finishes [the one who consumes it]; amudhamum amrutham (nectar, which gives immortality) which redeems the life; āy being [having as his form/attribute]; pal vagaiyum in many ways; parandha one who has permeated; perumān greater than all; ennai manifesting such forms to me; āl̤vānai the master (who accepted me as a servitor); selvam the wealth of experiencing bhagavān; malgu abundant; kudi having group of virtuous people; thiruviṇṇagar in thiruviṇṇagar [oppili appan temple]; kaṇdĕn ī have seen.; kaṇda seen in this world; inbam thunbam joy and sorrow

TVM 6.3.2

3366 கண்டவின்பம்துன்பம் கலக்கங்களும்தேற்றமுமாய் *
தண்டமும்தண்மையும் தழலும்நிழலுமாய் *
கண்டுகோள்தற்கரிய பெருமானென்னையாள்வானூர் *
தெண்டிரைப்புனல்சூழ் திருவிண்ணகர்நன்னகரே.
3366 கண்ட இன்பம் துன்பம் * கலக்கங்களும் தேற்றமும் ஆய் *
தண்டமும் தண்மையும் * தழலும் நிழலும் ஆய் **
கண்டுகோடற்கு அரிய * பெருமான் என்னை ஆள்வான் ஊர் *
தெண் திரைப் புனல் சூழ் * திருவிண்ணகர் நல் நகரே (2)
3366 kaṇṭa iṉpam tuṉpam * kalakkaṅkal̤um teṟṟamum āy *
taṇṭamum taṇmaiyum * tazhalum nizhalum āy **
kaṇṭukoṭaṟku ariya * pĕrumāṉ ĕṉṉai āl̤vāṉ ūr *
tĕṇ tiraip puṉal cūzh * tiruviṇṇakar nal nakare (2)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Tiruviṇṇakar, the beautiful city surrounded by clear waters, is where my Lord resides, whose vast possessions none can comprehend. He is simultaneously pleasure and pain, clarity and confusion, fury and favor, blistering heat and cool shade.

Explanatory Notes

This is just a follow-up of the theme mooted in the preceding song, the blending in Him of the opposites. Sensual pleasures, hankered after by many, are studiously eschewed by those blessed by Him, as a serious impediment in the way of attaining Him. Again, there are the book-worms, who despite their immense reading do not have clear ideas, suffering as they do from lack + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ட இன்பம் அநுபவிக்கும் இன்பமும்; துன்பம் துன்பமுமாய்; கலக்கங்களும் கலக்கங்களும்; தேற்றமும் ஆய் தெளிவுமாய்; தண்டமும் கோபமும்; தண்மையும் குளிர்ச்சியுமாய்; தழலும் நெருப்பும்; நிழலும் ஆய் நிழலும் ஆய்; கண்டுகோடற்கு கண்டு கொள்வதற்கு; அரிய அரியனான; பெருமான் பெருமானாய்; என்னை ஆள்வான் என்னை ஆள்கின்றவனின்; ஊர் தெண் திரை ஊர் தெளிந்த அலைகளையுடைய; புனல் சூழ் தண்ணீரால் சூழ்ந்த; திருவிண்ணகர் திருவிண்ணகர்; நல் நகரே என்னும் நகரமே ஆகும்
kalakkangal̤um the mental worries which arise from such sorrows; thĕṝamum āy being the serenities which arise from joy; thaṇdamum the anger (which arises from such worries); thaṇmaiyum clarity (which arises from such serenities); thazhalum fire (which has anger-like heat); nizhalum shadow (which has serene coolness); āy being; kaṇdukŏdaṛku to be seen similar to other species; ariya one who is difficult; perumān being sarvĕṣvaran (supreme lord); ennai me; āl̤vān one who accepted as servitor; ūr divine abode; theṇ pristine; thirai having rising tides; punal water; sūzh surrounded; thiruviṇṇagar thiruviṇṇagar; nal nagar beautiful town; nagaramum city which has many knowledgeable persons; nādugal̤um countryside which has many ordinary persons

TVM 6.3.3

3367 நகரமும்நாடுகளும் ஞானமும்மூடமுமாய் *
நிகரில்சூழ்சுடராயிருளாய் நிலனாய்விசும்பாய் *
சிகரமாடங்கள்சூழ் திருவிண்ணகர்ச்சேர்ந்தபிரான் *
புகர்கொள்கீர்த்தியல்லாலில்லை யாவர்க்கும்புண்ணியமே.
3367 நகரமும் நாடுகளும் * ஞானமும் மூடமும் ஆய் *
நிகர் இல் சூழ் சுடர் ஆய் இருள் * ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய் **
சிகர மாடங்கள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
புகர் கொள் கீர்த்தி அல்லால் * இல்லை யாவர்க்கும் புண்ணியமே (3)
3367 nakaramum nāṭukal̤um * ñāṉamum mūṭamum āy *
nikar il cūzh cuṭar āy irul̤ * āy nilaṉ āy vicumpu āy **
cikara māṭaṅkal̤ cūzh * tiruviṇṇakar cernta pirāṉ *
pukar kŏl̤ kīrtti allāl * illai yāvarkkum puṇṇiyame (3)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

For everyone, salvation lies solely in the radiant grace of the Lord in Tiruviṇṇakar, with its towering mansions, who is simultaneously hall and hamlet, intelligence and ignorance, the sky and Earth, profound darkness and unparalleled brilliance.

Explanatory Notes

There are some, enjoying the luxuries of life in big cities with extra amenities while there are others, toiling hard and eking out a miserable existence in the villages with no amenities whatsoever. Well, these are all controlled and regulated by the Lord. The correct perception of things, with due intelligence as well as misconception resulting from ignorance, light + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நகரமும் நகரத்தில் உள்ளவர்களும்; நாடுகளும் நாட்டிலுள்ளவர்களுமாய்; ஞானமும் அறிவும்; மூடமும் ஆய் அறியாமையுமாய்; நிகர் இல் சூழ் சுடர் ஆய் ஒப்பற்ற பரந்த ஒளியும்; இருளாய் இருளுமாய்; நிலன் ஆய் நிலமும்; விசும்பு ஆய் ஆகாசமுமாய்; சிகர சிகரங்களையுடைய; மாடங்கள் சூழ் மாடங்கள் சூழ்ந்த; திருவிண்ணகர் திருவிண்ணகரை; சேர்ந்த பிரான் சேர்ந்த ஸ்வாமியின்; புகர் கொள் ஒளி பொருந்திய; கீர்த்தி அல்லால் குணகீர்த்தியைத் தவிர; யாவர்க்கும் எவருக்கும்; புண்ணியமே உய்வதற்குரிய புண்ணியம்; இல்லை வேறு இல்லை
gyānamum knowledge; mūdamum foolishness; āy being; nigar match; il not having; sūzh expansive; sudar radiance; āy being; irul̤ darkness (which is lacking such radiance); āy being; nilan (abode of such darkness) earth; āy being; visumbu (abode of radiance) sky; āy being; sigaram having peaks; mādangal̤ mansions; sūzh surrounded; thiruviṇṇagar in thiruviṇṇagar; sĕrndha one who is residing well; pirān sarvĕṣvaran-s; pugar radiance; kol̤ having; kīrththi glorious qualities; allāl other than; yāvarkkum for everyone; puṇṇiyam fortune which leads to uplifting; illai not there; puṇṇiyam pāvam puṇyam and pāpam which lead to desirable and undesirable results respectively; puṇarchchi pirivu the union and separation with such results

TVM 6.3.4

3368 புண்ணியம்பாவம் புணர்ச்சிபிரிவென்றிவையாய்
எண்ணமாய்மறப்பாய் உண்மையாயின்மயாயல்லனாய் *
திண்ணமாடங்கள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *
கண்ணனின்னருளே கண்டுகொண்மின்கள்கைதவமே.
3368 புண்ணியம் பாவம் * புணர்ச்சி பிரிவு என்று இவை ஆய் *
எண்ணம் ஆய் மறப்பு ஆய் * உண்மை ஆய் இன்மை ஆய் அல்லன் ஆய் **
திண்ண மாடங்கள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
கண்ணன் இன் அருளே * கண்டுகொள்மின்கள் கைதவமே? (4)
3368 puṇṇiyam pāvam * puṇarcci pirivu ĕṉṟu ivai āy *
ĕṇṇam āy maṟappu āy * uṇmai āy iṉmai āy allaṉ āy **
tiṇṇa māṭaṅkal̤ cūzh * tiruviṇṇakar cernta pirāṉ *
kaṇṇaṉ iṉ arul̤e * kaṇṭukŏl̤miṉkal̤ kaitavame? (4)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Understand, all is the sweet and spontaneous grace of Kaṇṇaṉ, enshrined in Tiruviṇṇakar with its sturdy mansions. He combines within Himself merit and demerit, unity and division, remembrance and forgetfulness, truth and falsehood, yet remains detached from them all. Should this solid truth be questioned at all?

Explanatory Notes

(i) ‘Puṇya’, giving rise to happiness and ‘Pāpa’ leading to misery, the corresponding pleasure of enjoying the coveted things and pain of privation from them, are directed and regulated by the Supreme Lord.

(ii) Again, remembrance and forgetfulness, the truth revealing His existence and the falsehood denying it, are also controlled by him, as the Internal Controller + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புண்ணியம் புண்ணியமும்; பாவம் பாபமுமாய்; புணர்ச்சி சேர்க்கையும்; பிரிவு என்று இவை ஆய் பிரிவுமாய்; எண்ணம் ஆய் நினைவும்; மறப்புஆய் மறதியுமாய்; உண்மை ஆய் உண்மைப் பொருளும்; இன்மைஆய் பொருள் இல்லாமையுமாய்; அல்லன் ஆய் பாப புண்யங்களை நியமிப்பவனாய்; திண்ண உறுதியான; மாடங்கள் சூழ் மாடங்கள் சூழ்ந்த; திருவிண்ணகர் திருவிண்ணகரை; சேர்ந்த பிரான் சேர்ந்த ஸ்வாமியான; கண்ணன் கண்ணனின்; இன் அருளே இனிய அருளே; கைதவமே உய்வதற்கு வழி என்று; கண்டு கொண்மின்கள் கண்டு கொள்ளுங்கள்
enṛu that; ivai āy being these; eṇṇam thoughts about such union and separation; āy being; maṛappāu āy being the forgetful state about the same; uṇmai āy inmai āy being the existence and non-existence of those aspects; allan āy being free from bondage of such aspects; thiṇṇam firm; mādangal̤ mansions; sūzh surrounded; thiruviṇṇagar in thiruviṇṇagar; sĕrndha reached [descended]; pirān supreme lord; kaṇṇan krishṇa-s; in greatly enjoyable, without any expectation; arul̤ĕ mercy only; kaṇdu koṇmingal̤ know that this is the glorious means which was explained previously.; kaithavamĕ is there any mischief in this?; kaithavam (inferior) dishonesty; semmai (superior) honesty

TVM 6.3.5

3369 கைதவம்செம்மை கருமைவெளுமையுமாய் *
மெய்பொய் இளமைமுதுமை புதுமைபழமையுமாய் *
செய்ததிண்மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *
பெய்தகாவுகண்டீர் பெருந்தேவுடைமூவுலகே.
3369 கைதவம் செம்மை * கருமை வெளுமையும் ஆய் *
மெய் பொய் இளமை * முதுமை புதுமை பழமையும் ஆய் **
செய்த திண் மதிள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
பெய்த காவு கண்டீர் * பெரும் தேவு உடை மூவுலகே (5)
3369 kaitavam cĕmmai * karumai vĕl̤umaiyum āy *
mĕy pŏy il̤amai * mutumai putumai pazhamaiyum āy **
cĕyta tiṇ matil̤ cūzh * tiruviṇṇakar cernta pirāṉ *
pĕyta kāvu kaṇṭīr * pĕrum tevu uṭai mūvulake (5)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

The triple worlds where the exalted Devas (like Brahmā and others) reside are merely orchards raised by the benevolent Lord in Tiruviṇṇakar, with its sturdy and beautiful ramparts. He governs truth and falsehood, the cunning and the righteous, the young and the old, the ancient and the new, the dark and the light.

Explanatory Notes

(i) From Brahmā down to the smallest insect, all are His wards, without distinction of high and low. Some are forthright and straightforward while there are others who are nothing but crooked and who can never be erect in word, deed or thought. Well, all these are controlled by the Supreme Lord who also combines in Himself these contrary traits. For instance, as Kṛṣṇa, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கைதவம் வஞ்சனையும்; செம்மை நேர்மையுமாய்; கருமை கருமையும்; வெளுமையும் ஆய் வெண்மையுமாய்; மெய் பொய் உண்மையும் பொய்யுமாய்; இளமை முதுமை இளமையும் முதுமையுமாய்; புதுமை புதுமையும்; பழமையும் ஆய் பழமையும் ஆய்; செய்த திண் வேலைப்பாடுகளுடன் திடமான; மதிள் சூழ் மதிள்களால் சூழ்ந்த; திருவிண்ணகர் திருவிண்ணகரை; சேர்ந்த பிரான் சேர்ந்த ஸ்வாமி; பெய்த காவு வைத்து வளர்க்கின்ற சோலைகளை; பெரும் தேவு உடை பெரும் தேவர்களை உடைய; மூவுலகே இந்த மூன்று உலகங்களையும்; கண்டீர் பாருங்கள்
karumai vel̤umaiyum āy being [having as his forms] black and white colours; mey poy the truth which is form for superior and lie which is form for inferior; il̤amai mudhumai youth and old-age; pudhumai pazhamai āy being modern and ancient; seydha well crafted; thiṇ firm; madhil̤ fort; sūzh surrounded by; thiruviṇṇagar in thiruviṇṇagar; sĕrndha descended; pirān sarvĕṣvaran; peydha placed; kāvu kaṇdīr this is the garden where he enjoys his sport; perum dhĕvu dhĕvathās starting with the great brahmā; udai inhabited by; mūvalugu the three layered world; mū ulagangal̤um āy being [having as form] the three layered world (this samsāram, material realm, which is having inferior attributes such as being created, being bound by karma and having the three qualities viś sathva (goodness), rajas (passion) and thamas (ignorance)); allan āy being with nithya vibhūthi (spiritual realm) which is opposite of the aforementioned samsāram

TVM 6.3.6

3370 மூவுலகங்களுமாயல்லனாய் உகப்பாய்முனிவாய் *
பூவில்வாழ்மகளாய்த்தவ்வையாய்ப் புகழாய்ப்பழியாய் *
தேவர்மேவித்தொழும் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *
பாவியேன்மனத்தே உறைகின்றபரஞ்சுடரே.
3370 மூவுலகங்களும் ஆய் * அல்லன் ஆய் உகப்பு ஆய் முனிவு * ஆய்
பூவில் வாழ் மகள் ஆய் * தவ்வை ஆய்ப் புகழ் ஆய்ப் பழி ஆய் **
தேவர் மேவித் தொழும் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
பாவியேன் மனத்தே * உறைகின்ற பரஞ்சுடரே (6)
3370 mūvulakaṅkal̤um āy * allaṉ āy ukappu āy muṉivu * āy
pūvil vāzh makal̤ āy * tavvai āyp pukazh āyp pazhi āy **
tevar mevit tŏzhum * tiruviṇṇakar cernta pirāṉ *
pāviyeṉ maṉatte * uṟaikiṉṟa parañcuṭare (6)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

The radiant Supreme Lord, who resides in this sinner's mind, combines within Him the eternal SriVaikuntam and the fleeting material worlds, along with likes and dislikes, the Goddess of affluence and her contrasting counterpart, fame and infamy. He resides in Tiruviṇṇakar, the favored resort of the Nithyasuris.

Explanatory Notes

(i) The three worlds, with their strange admixture of Satva, Rajas and Tamas, with their inhabitants, bound down by their actions, past and present, liable to dissolution, as well as the Eternal Land (spiritual world) in contra-distinction to the Sportive Universe, referred to above, are controlled by the Supreme Lord.

(ii) A thing, liked by some, is disliked by some + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூ உலகங்களும் ஆய் மூன்று லோகங்களுமாய்; அல்லன் ஆய் அதைத்தவிர பரமபதத்தை உடையவனாய்; உகப்பு ஆய் மகிழ்ச்சியாயும்; முனிவு ஆய் கோபமாயும்; பூவில் வாழ் மகள் ஆய் பூவிலிருக்கும் திருமகளாயும்; தவ்வை ஆய் மூதேவியாயும்; புகழ் ஆய் புகழாயும்; பழி ஆய் பழியாயும்; தேவர் மேவி தேவர்கள் விரும்பி; தொழும் தொழும்; திருவிண்ணகர் திருவிண்ணகரை; சேர்ந்த பிரான் சேர்ந்த ஸ்வாமி; பாவியேன் பாவியான என்; மனத்தே உறைகின்ற மனத்தில் உறையும்; பரஞ்சுடரே ஒளியுள்ள எம்பெருமான் ஆவான்
ugappu āy munivu āy being such liking and hatred of such fantastic and inferior entities respectively; pūvil vāzh magal̤āy being the desirable lakshmi [ṣrī dhĕvi]; thavvai āy being the undesirable jyĕshtā (elder sister of lakshmi [who is popularly known as mūdhĕvi]); pugazh āy being the fame; pazhi āy having blame as his form too; dhĕvar nithyasūris (eternal residents of paramapadham); mĕvi fitting well; thozhum praying; thiruviṇṇagar in thiruviṇṇagar; sĕrndha descended; pirān sarvĕṣvaran; pāviyĕn ī who am having sins which make me turn away from him even when he pursues me rigorously, my; manaththĕ in the heart; uṛaiginṛa residing eternally; param sudar having great radiance due to that; param sudar udambu āy ḍivine form which is enjoyed by his devotees; azhukku to be rejected

TVM 6.3.7

3371 பரஞ்சுடருடம்பாய் அழுக்குப்பதித்தவுடம்பாய் *
கரந்தும்தோன்றியும்நின்றும் கைதவங்கள்செய்தும் * விண்ணோர்
சிரங்களால்வணங்கும் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *
வரங்கொள்பாதமல்லாலில்லை யாவர்க்கும்வன்சரணே.
3371 பரம் சுடர் உடம்பு ஆய் * அழுக்குப் பதித்த உடம்பு ஆய் *
கரந்தும் தோன்றியும் நின்றும் * கைதவங்கள் செய்தும் ** விண்ணோர்
சிரங்களால் வணங்கும் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
வரம் கொள் பாதம் அல்லால் இல்லை * யாவர்க்கும் வன் சரணே (7)
3371 param cuṭar uṭampu āy * azhukkup patitta uṭampu āy *
karantum toṉṟiyum niṉṟum * kaitavaṅkal̤ cĕytum ** viṇṇor
ciraṅkal̤āl vaṇaṅkum * tiruviṇṇakar cernta pirāṉ *
varam kŏl̤ pātam allāl illai * yāvarkkum vaṉ caraṇe (7)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

The safe and sound refuge for each and every one lies solely in the glorious feet of the enigmatic Lord, who is both the worldly and the transcendent, concealed and revealed, residing in Tiruviṇṇakar where even the Devas come and bow their heads.

Explanatory Notes

The entire Universe is the Lord’s body. He also possesses His own unique form (Divya maṅgala vigraha), the aprākṛta (ultra mundane) and Śuddha Satva (impeccable purity).

He sustains all things and beings, hidden inside them as their Internal Controller; He also comes out in the open as Śrī Rāma and Kṛṣṇa. He is transparent to the devotees and hidden to the rest. His + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பரஞ்சுடர் பிரக்ருதி சம்பந்தமில்லாத; உடம்பு ஆய் திருமேனி உடையவனாயும்; அழுக்கு பதித்த உலகத்தையே; உடம்பாய் உடலாக உடையவனாயும்; கரந்தும் மறைந்தவனாயும்; தோன்றியும் வெளிப்பட்டவனாயும்; நின்றும் ராமன் கண்ணன் போன்றவனாய் அவதரித்தும்; கைதவங்கள் கண்களுக்குத் தோன்றாமல்; செய்தும் வஞ்சிப்பவனும்; விண்ணோர் தேவர்கள்; சிரங்களால் வணங்கும் சிரங்களால் வணங்கும்; திருவிண்ணகர் திருவிண்ணகரை; சேர்ந்த பிரான் சேர்ந்த ஸ்வாமியின்; வரம் கொள் சிறப்புப் பொருந்திய; பாதம் அல்லால் திருவடிகளைத் தவிர; யாவர்க்கும் எவருக்கும்; வன் சரணே வலிய புகலிடம்; இல்லை வேறு இல்லை
padhiththa complete; udambu āy having the form of this material universe; karandhum (for the non-devotees) not shining; thŏnṛiyum (for the devotees) shining; ninṛum being firm (where he is shining); kaidhavangal̤ seydhum being uncertain (in other places); āy being; viṇṇŏr brahmā rudhra et al; sirangal̤āl with their heads; vaṇangum to bow down; thiruviṇṇagar in thiruviṇṇagar; sĕrndha descended; pirān sarvĕṣvaran-s; varam greatness of not having any thing equal or greater; kol̤ having; pādham divine feet; allāl other than; yāvarkkum for every sentient being; van very strong, to give protection; saraṇ refuge; illai not there; surarkku for the dhĕvas (celestial beings) who are favourable; van indestructible

TVM 6.3.8

3372 வன்சரண்சுரர்க்காய் அசுரர்க்குவெங்கூற்றமுமாய் *
தன்சரண்நிழற்கீழ் உலகம்வைத்தும்வையாதும் *
தென்சரண்திசைக்குத் திருவிண்ணகர்சேர்ந்தபிரான் *
என்சரணென்கண்ணன் என்னையாளுடையென்னப்பனே.
3372 வன் சரண் சுரர்க்கு ஆய் * அசுரர்க்கு வெம் கூற்றமும் ஆய் *
தன் சரண் நிழற்கீழ் * உலகம் வைத்தும் வையாதும் **
தென் சரண் திசைக்குத் * திருவிண்ணகர் சேர்ந்த பிரான் *
என் சரண் என் கண்ணன் * என்னை ஆளுடை என் அப்பனே (8)
3372 vaṉ caraṇ curarkku āy * acurarkku vĕm kūṟṟamum āy *
taṉ caraṇ nizhaṟkīzh * ulakam vaittum vaiyātum **
tĕṉ caraṇ ticaikkut * tiruviṇṇakar cernta pirāṉ *
ĕṉ caraṇ ĕṉ kaṇṇaṉ * ĕṉṉai āl̤uṭai ĕṉ appaṉe (8)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

In Tiruviṇṇakar, the Refuge of the southerly direction, resides Kaṇṇaṉ, my Liege-Lord, my sole Refuge, the safe haven of the Devas, the fierce opponent of the Asuras. He caresses under His feet and shelters the devout while leaving others in scorching heat.

Explanatory Notes

(i) The Lord is known to be absolutely impartial and yet, whenever the Devas are tormented by the Asuras, the former seek refuge in Him and He engages Himself in a pitched battle against the Asuras and vanquishes them. There is, however, no inconsistency, if looked at in the manner indicated below.

(ii) In the tanks dug by charitable men, one man allays his thirst, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுரர்க்கு ஆய் தேவர்களுக்கு; வன் சரண் சிறந்த புகலிடமாயும்; அசுரர்க்கு வெம் அஸுரர்களுக்குக் கொடிய; கூற்றமும் ஆய் யமனாயும்; உலகம் உலகத்து அடியார்களை; தன்சரண் தன் திருவடி; நிழற் கீழ் நிழலின் கீழ்; வைத்தும் வைத்துக் காப்பாற்றியும்; வையாதும் மற்றவரை அவ்வாறு காப்பாற்றாமலும்; தென் திசைக்கு தென்திசைக்குள்ளே; சரண் புகலிடமான; திருவிண்ணகர் திருவிண்ணகரை; சேர்ந்த பிரான் சேர்ந்த ஸ்வாமி; என் கண்ணன் என் கண்ணன்; என்னை ஆளுடை என்னை ஆட்கொண்ட; என் அப்பனே என் அப்பனே; என் சரண் எனக்குப் புகலிடமானவன்
saraṇ refuge; āy being; asurarkku for the asuras (demoniac) who are unfavourable; vem cruel; kūṝamum mruthyu (death); āy being; ulagam worldly humans who are classified in this manner; than his; saraṇ nizhal kīzh in the shadow of his divine feet; vaiththum placing; vaiyādhum not placing; āy being; then thisaikku for the southern direction; saraṇ refuge; thiruviṇṇagar in thiruviṇṇagar; sĕrndha descended; pirān being sarvĕṣvaran; en to accept me; kaṇṇan as krishṇa; ennai me; āl̤ udai accepting my service; ennappan my lord; en for me; saraṇ natural refuge; enakku being distinguished for me; en the cause for my sustenance

TVM 6.3.9

3373 என்னப்பனெனக்காயிகுளாய் என்னைப்பெற்றவளாய் *
பொன்னப்பன்மணியப்பன்முத்தப்பன் என்னப்பனுமாய் *
மின்னப்பொன்மதிள்சூழ் திருவிண்ணகர்சேர்ந்தவப்பன் *
தன்னொப்பாரில்லப்பன் தந்தனன்தனதாள்நிழலே.
3373 என் அப்பன் எனக்கு ஆய் * இகுள் ஆய் என்னைப் பெற்றவள் ஆய் *
பொன் அப்பன் மணி அப்பன் * முத்து அப்பன் அன் அப்பனும் ஆய் **
மின்னப் பொன் மதிள் சூழ் * திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் *
தன் ஒப்பார் இல் அப்பன் * தந்தனன் தன தாள் நிழலே (9)
3373 ĕṉ appaṉ ĕṉakku āy * ikul̤ āy ĕṉṉaip pĕṟṟaval̤ āy *
pŏṉ appaṉ maṇi appaṉ * muttu appaṉ aṉ appaṉum āy **
miṉṉap pŏṉ matil̤ cūzh * tiruviṇṇakar cernta appaṉ *
taṉ ŏppār il appaṉ * tantaṉaṉ taṉa tāl̤ nizhale (9)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

The unmatched Lord, who is to me Father, Mate, and Mother all in one, like gold, ruby, and pearl combined, resides in Tiruviṇṇakar with its golden ramparts encircling. He has grounded me under the cool shade of His feet.

Explanatory Notes

(i) The great Sages have proclaimed: “Vāsudeva tharucchāyā nāthi śīthā na gharmadhā...,” that is, the shade of Vāsudeva, the gigantic tree, is most soothing and refreshing, it prevents entry into hell and is, therefore, worth getting into. Such a shade has been granted to Saint Nammāḻvār by the Lord of His own accord in His spontaneous Grace. This great benefaction of + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் எனக்கு; அப்பன் ஆய் தந்தையாயும்; எனக்கு இகுளாய் எனக்கு செவிலித்தாயாயும்; என்னை என்னை; பெற்றவளாய் பெற்ற தாயாயும்; பொன்அப்பன் பொன்அப்பன் போன்றவனும்; மணிஅப்பன் மணிஅப்பன் போன்றவனும்; முத்துஅப்பன் முத்துஅப்பன் போன்றவனும்; என் அப்பனும் ஆய் என் அப்பனும் ஆய் இருக்கும்; மின்னப் பொன் ஒளியுள்ள பொன்மயமான; மதிள் சூழ் மதிள்களாலே சூழ்ந்த; திருவிண்ணகர் திருவிண்ணகரை; சேர்ந்த பிரான் சேர்ந்த ஸ்வாமி; தன்னொப்பாரில் தனக்கு ஒப்பானவர் இல்லாத; அப்பன் என் தந்தையான ஸ்வாமி; தனதாள் நிழலே எனக்குத் தனது திருவடி நிழலை; தந்தனன் தந்து அருளினான்
appan father; āy being; igul̤ the step mother, who is having the femininity which is opposite to such masculinity; āy being; ennaip peṝaval̤ āy being my distinguished, real mother who is unlike the step mother who just raises the child; pon appan manifesting his attractive nature which resembles gold; maṇi appan manifesting his radiant nature resembling a precious gem (which is greater than gold in radiance and great worth); muththu appan manifesting the coolness resembling a pearl (which is greater than precious gem in the coolness); en appan um the benefactor for me (in many ways); āy being; minna to shine; pon golden; madhil̤ by fort; sūzh surrounded; thiruviṇṇagar in thiruviṇṇagar; sĕrndha living; appan being the lord of all; than for him; oppār il having no match; appan great benefactor; than his; thāl̤ divine feet-s; nizhal shadow; thandhanan mercifully bestowed.; nizhal shade which reduces the heat; veyyil sunshine which causes heat

TVM 6.3.10

3374 நிழல்வெய்யில்சிறுமைபெருமை குறுமைநெடுமையுமாய் *
சுழல்வனநிற்பன மற்றுமாயவையல்லனுமாய் *
மழலைவாய்வண்டுவாழ் திருவிண்ணகர்மன்னுபிரான் *
கழல்களன்றி மற்றோர்களைகணிலம்காண்மின்களே.
3374 நிழல் வெய்யில் சிறுமை பெருமை * குறுமை நெடுமையும் ஆய் *
சுழல்வன நிற்பன * மற்றும் ஆய் அவை அல்லனும் ஆய் **
மழலை வாய் வண்டு வாழ் * திருவிண்ணகர் மன்னு பிரான் *
கழல்கள் அன்றி * மற்றோர் களைகண் இலம் காண்மின்களே (10)
3374 nizhal vĕyyil ciṟumai pĕrumai * kuṟumai nĕṭumaiyum āy *
cuzhalvaṉa niṟpaṉa * maṟṟum āy avai allaṉum āy **
mazhalai vāy vaṇṭu vāzh * tiruviṇṇakar maṉṉu pirāṉ *
kazhalkal̤ aṉṟi * maṟṟor kal̤aikaṇ ilam kāṇmiṉkal̤e (10)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

I swear, we have no savior but the feet of the Lord, who dwells in Tiruviṇṇakar where the bees hum joyfully. He is both short and tall, shade and heat, stationary and mobile, and all else is simply attached to Him, in no other way.

Explanatory Notes

In every centum of this great work, there is a decad which is addressed by the Saint to the world at large, wherein he preaches the Supremacy of God, His amazing simplicity etc. So then, this is the crucial decad in this centum, conveying the golden message to the people that the feet of the Lord, enshrined in Tiruviṇṇakar constitute our sole Refuge.

The Lord is said + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிழல் வெயில் நிழலாயும் வெய்யிலாயும்; சிறுமை பெருமை சிறுமையும் பெருமையுமாய்; குறுமை குறுகுதலும்; நெடுமையும் ஆய் நீளுதலுமாய்; சுழல்வன சுழன்று திரிபவனும்; நிற்பன ஓரிடத்தில் நிற்பவனுமாய்; மற்றும் ஆய் மற்றும் உள்ள பொருள்கள் ஆய்; அவை அல்லனும் ஆய் அவை அல்லாதவனும் ஆய்; மழலை வாய் இசைபாடும் இளம்; வண்டுவாழ் வண்டுகள் வாழும்; திருவிண்ணகர் திருவிண்ணகரில்; மன்னு பிரான் இருக்கும் எம்பெருமானின்; கழல்கள் அன்றி திருவடிகளைத் தவிர; மற்றோர் களைகண் வேறு ஒரு பற்றுக்கோடு; இலம் இல்லை என்பதை; காண்மின்களே நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்
siṛumai atomic form which is the ultimate state of smallness; perumai universal form which is the ultimate state of largeness; kuṛumai shortness; nedumaiyum longness; āy being; suzhalvana niṛpana movable and immovable; maṝum all other entities; āy being (sarvaṣarīri #having everything as his body); avai their qualities; allanum not having [unaffected]; āy being; mazhalai babyish; vāy having sounds; vaṇdu beetles; vāzh living due to the enjoyment; thiruviṇṇagar in thiruviṇṇagar; mannu eternally residing; pirān sarvĕṣvaran-s; kazhalgal̤ divine feet; anṛi than; maṝu other; ŏr one; kal̤aigaṇ protection; ilam we are not having;; kāṇmingal̤ you can determine (this) for yourself.; ulagīr ŏh people of this world!; kāṇmingal̤ see this

TVM 6.3.11

3375 காண்மின்களுலகீர்! என்று கண்முகப்பேநிமிர்ந்த *
தாளிணையன்தன்னைக் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
ஆணையாயிரத்துத் திருவிண்ணகர்ப்பத்தும்வல்லார் *
கோணையின்றிவிண்ணோர்க்கு என்றுமாவர்குரவர்களே. (2)
3375 ## காண்மின்கள் உலகீர் என்று * கண்முகப்பே நிமிர்ந்த *
தாள் இணையன் தன்னைக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
ஆணை ஆயிரத்துத் * திருவிண்ணகர்ப் பத்தும் வல்லார் *
கோணை இன்றி விண்ணோர்க்கு * என்றும் ஆவர் குரவர்களே (11)
3375 ## kāṇmiṉkal̤ ulakīr ĕṉṟu * kaṇmukappe nimirnta *
tāl̤ iṇaiyaṉ taṉṉaik * kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
āṇai āyirattut * tiruviṇṇakarp pattum vallār *
koṇai iṉṟi viṇṇorkku * ĕṉṟum āvar kuravarkal̤e (11)

Ragam

Usēni / உசேனி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Upadesam

Divya Desam

Simple Translation

Those who are familiar with these ten songs out of the thousand composed by Caṭakōpaṉ of Kurukūr, under the Lord's command, directing the worldlings straight to the Lord's towering feet, will become worthy of unreserved admiration by the Nithyasuris.

Explanatory Notes

(i) The Dramiḍa (Tamil) Vedas, like the Sanskrit Vedas convey the Lord’s command—‘Śrutis Smṛtir mamaivājñā.’

(ii) Those that are well-versed in these ten songs will compel the unreserved admiration of the ‘Nitya Sūrīs’ (the Ever-free Angels) in spiritual world and command their respect, that even these people, dwelling in the dark land of nescience, are enjoying the Lord so well.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகீர்! உலகத்திலுள்வர்களே!; காண்மின்கள் இதனைப் பாருங்கள்; என்று என்று சொல்வது போன்று; கண் முகப்பே கண்ணெதிரே; நிமிர்ந்த நிமிர்ந்து வளர்ந்த; தாள் திருவடிகளை உடைய; இணையன் தன்னை எம்பெருமானைக் குறித்து; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச் செய்த; ஆணை பெருமான் கட்டளை ரூபமாக இருக்கும்; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுக்குள்; திருவிண்ணகர் திருவிண்ணகரைப் பற்றிய; பத்தும் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லார்; கோணை இன்றி குற்றமின்றி; விண்ணோர்க்கு நித்யஸூரிகளுக்கு; என்றும் எப்போதும்; குரவர்களே கௌரவிக்கத் தகுந்தவர்கள்; ஆவர் ஆவர்கள்.
enṛu saying that; kaṇ mugappĕ in front of those who are contrary to each other; nimirndha grew; thāl̤iṇaiyin thannai sarvĕṣvaran who permeated into contrary entities in many ways, as he did during the incarnation as thrivikrama, who has the divine feet; kurugūr the leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sonna mercifully spoke; āṇai in the form of bhagavath āgyā (bhagavān-s commandments); āyiraththu among the thousand pāsurams; thiruviṇṇagar for thiruviṇṇagar; paththum decad; vallār experts; kŏṇai difficulty; inṛi without; viṇṇŏrkku for nithyasūris; enṛum always; kuravargal̤ admirable; āvar will become; āychchiyarŏdu with the cowherd girls; kuravai in thirkkuravai (rāsa krīdā in vrindhāvanam)