Chapter 9

Parānkusa Nāyaki responds to her friends who are stopping her from going to Thiruvallavāzh - (மான் ஏய்)

திருவல்லவாழ் செல்லுதலைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல் (திருவல்லவாழ்)
Even though Āzhvār became frail in ThirukkudaNthai, he decided to travel to ‘Thiruvalla vāzh’ divyadesam located in Malai Nādu. But, obstacles such as several groves, the breeze, the buzzing of the bees and vaidIga (Vedic) celebrations prevented him from reaching ‘Thiruvalla vāzh’ causing distress for Āzhvār. These hymns are based on a girl venting her misery and despondency to her friend.
திருக்குடந்தையிலே தளர்ந்த ஆழ்வார், ‘திருவல்ல வாழ்’ என்ற மலைநாட்டுத் திருப்பதிக்குச் செல்ல நினைத்தார். ஆனால், அவ்வூருக்குப் போகமுடியாமல் சோலைகளும், தென்றலும், வண்டுகளின் இன்னிசையும், வைதிகச் செயல்களின் ஆரவாரமும் அவரைத் தடுத்துயர் விளைவித்தன. அவற்றால் ஏற்பட்ட நோவினை ஆழ்வார் ஈண்டுப் புலப்படுத்துகிறார். தோழியர்க்கு ஒரு தலைவி கூறும் கூற்றாக இப்பகுதி அமைந்துள்ளது.
Verses: 3321 to 3331
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: பஞ்சமம்
Timing: 4.49-6.00 PM
Recital benefits: will have happy lives
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 5.9.1

3321 மானேய்நோக்குநல்லீர்! வைகலும்வினையேன்மெலிய *
வானார்வண்கமுகும் மதுமல்லிகைகமழும் *
தேனார்சோலைகள்சூழ் திருவல்லவாழுறையும்
கோனாரை * அடியேன் அடிகூடுவதுஎன்றுகொலோ? (2)
3321 ## மான் ஏய் நோக்கு நல்லீர் * வைகலும் வினையேன் மெலிய *
வான் ஆர் வண் கமுகும் * மது மல்லிகை கமழும் **
தேன் ஆர் சோலைகள் சூழ் * திருவல்லவாழ் உறையும்
கோனாரை * அடியேன் அடிகூடுவது என்றுகொலோ? * (1)
3321 ## māṉ ey nokku nallīr * vaikalum viṉaiyeṉ mĕliya *
vāṉ ār vaṇ kamukum * matu mallikai kamazhum **
teṉ ār colaikal̤ cūzh * tiruvallavāzh uṟaiyum
koṉārai * aṭiyeṉ aṭikūṭuvatu ĕṉṟukŏlo? * (1)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Saranagathi

Reference Scriptures

BG. 9-1

Simple Translation

Oh, doe-eyed ladies, when will this vassal be blessed to join the Lord in Tiruvallavāḻ, with its orchards full of honey, where tall arecanut trees stand, and jasmine flowers shed honey and spread their fine fragrance, making this sinner thin down?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மான் ஏய் நோக்கு மான்போன்ற பார்வையுடைய; நல்லீர்! பெண்களே!; வினையேன் பாவியான நான்; வைகலும் மெலிய எப்போதும் மெலியும்படியாக; வான் ஆர் ஆகாசம் வரை உயர்ந்திருக்கும்; வண் கமுகும் அழகிய பாக்கு மரங்களும்; மது மல்லிகை தேன் பெருகும் மல்லிகை; கமழும் மணம் கமழும்; தேன் ஆர் தேன்பருகும் வண்டுகளால் நிறைந்த; சோலைகள் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருவல்ல வாழ் திருவல்ல வாழிலே; உறையும் இருக்கும்; கோனாரை அடி பெருமானின் திருவடிகளை; அடியேன் கூடுவது அடியேன் சேர்வது; என்று கொலோ? என்றைக்கோ?
nŏkku having eyes; nalleer those who are identified as well-wishers for me!; vinaiyĕn ī who am having sin (which stops me from interacting with him as desired); vaigalum always; meliya to weaken me; vān the sky; ār to cover; vaṇ generous (to offer its own body as support to the jasmine creeper [which is growing near it); kamugum areca tree; madhu with flowing honey (due to being with the areca tree); malligai jasmine [creeper]; kamazhum being fragrant; thĕn beetles which extract honey and the fragrant buds; ār filled with; sŏlaigal̤ gardens; sūzh surrounded; thiruvallavāzh in thiruvallavāzh; uṛaiyum eternally residing; kŏnārai unconditional lord; adiyĕn ī who am a servitor (captivated by his supremacy); adi his divine feet; kūduvadhu reach; enṛu kolŏ when?; thŏzhimīrgāl̤ ŏh friends (who share my joy and grief)!; emmai me (who am considering you all as companions for my desires)

TVM 5.9.2

3322 என்றுகொல்? தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந்தென் செய்தீரோ? *
பொன்திகழ்புன்னைமகிழ் புதுமாதவிமீதணவி *
தென்றல்மணங்கமழும் திருவல்லவாழ்நகருள்
நின்றபிரான் * அடிநீறு அடியோங்கொண்டுசூடுவதே.
3322 என்று கொல் தோழிமீர்காள் * எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ? *
பொன்திகழ் புன்னை மகிழ் * புது மாதவி மீது அணவி **
தென்றல் மணம் கமழும் * திருவல்லவாழ் நகருள்
நின்ற பிரான் * அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே? (2)
3322 ĕṉṟu kŏl tozhimīrkāl̤ * ĕmmai nīr nalintu ĕṉ cĕytīro? *
pŏṉtikazh puṉṉai makizh * putu mātavi mītu aṇavi **
tĕṉṟal maṇam kamazhum * tiruvallavāzh nakarul̤
niṉṟa pirāṉ * aṭinīṟu aṭiyom kŏṇṭu cūṭuvate? (2)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Saranagathi

Simple Translation

Friends, does it make sense to tease me like this? My mind is drawn to the Lord who stays in Tiruvallavāḻ, where the southern breeze carries the sweet fragrance from posh punnai trees. When will we indeed be anointed by the dust from His feet?

Explanatory Notes

(i) The mates who were critical of the Nāyakī’s attitude are reprimanded by her. She says that her mind is attracted by the Lord in Tiruvallavāḻ through the fragrance wafted from there. Having known her as well as they do they would do well to smear her head with the dust from the Lord’s feet instead of trying to pull her back.

(ii) The Āzhvār’s special fascination + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தோழிமீர்காள்! தோழிமார்களே!; எம்மை நீர் நலிந்து நீங்கள் எம்மை வருத்தப்படுத்தி; என் செய்தீரோ? என்ன காரியம் செய்தீர்கள்?; பொன் திகழ் பொன்னைப் போன்று திகழும்; புன்னை புன்னை மரங்களென்ன; மகிழ் மகிழ மரங்களென்ன; புது மாதவி புதிய குருக்கத்திகளென்ன; மீது அணவி இவற்றின் மலர்களைத் தழுவி; மணங்கமழும் மணங்கமழும்; தென்றல் தென்றல் காற்று; திருவல்ல வாழ் நகருள் திருவல்ல வாழ் நகரில்; நின்ற பிரான் நின்ற பெருமானின்; அடி நீறு அடியோம் திருவடித் துகள்களை; கொண்டு கொண்டு வந்து அதை; சூடுவதே அணிந்து கொள்வது; என்றுகொல்? என்றைக்கோ?
nalindhu torture (by stopping me from my pursuit); nīr you all; en what actions; seydhīr performing;; pon like gold; thigazh shining pollen; punnai punnai (a type of tree); magizh magizh (a type of tree); pudhu fresh; mādhavi kurukkaththi (a type of tree); mīdhu with their flowers on them; aṇavi embracing; thenṛal southerly breeśe; maṇam fragrance; kamazhum spreading; thiruvallavāzh thiruvallavāzh; nagarul̤ in the town of; ninṛa standing [residing]; pirān benefactor-s; adi nīṛu dust of the divine feet; adiyŏm we, the servitors who benefit out of his favour of being present here; koṇdu accepting as a servitor would do; sūduvadhu holding on our head with reverence; enṛu kol when?; sūdu worn; malar having flower

TVM 5.9.3

3323 சூடுமலர்க்குழலீர்! துயராட்டியேனைமெலிய *
பாடுநல்வேதவொலி பரவைத்திரைபோல்முழங்க *
மாடுயர்ந்தோமப்புகைகமழும் தண்திருவல்லவாழ் *
நீடுறைகின்றபிரான் கழல்காண்டுங்கொல்நிச்சலுமே.
3323 சூடு மலர்க்குழலீர்! துயராட்டியேன் மெலிய *
பாடும் நல் வேத ஒலி * பரவைத் திரை போல் முழங்க **
மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும் * தண் திருவல்லவாழ் *
நீடு உறைகின்ற பிரான் * கழல் காண்டும்கொல் நிச்சலுமே? (3)
3323 cūṭu malarkkuzhalīr! tuyarāṭṭiyeṉ mĕliya *
pāṭum nal veta ŏli * paravait tirai pol muzhaṅka **
māṭu uyarntu omap pukai kamazhum taṇ tiruvallavāzh *
nīṭu uṟaikiṉṟa pirāṉ * kazhal kāṇṭumkŏl niccalume? (3)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Saranagathi

Simple Translation

Ladies with flowers in your hair, when will I ever behold the feet of my Lord in the cool Tiruvallavāḻ? Amid the holy fires sending fumes high and Vedic chants resounding like the billows of the sea, thinning this miserable one down?

Explanatory Notes

The mates, happily bedecked with flowers on their long locks, would expect the Parāṅkuśa Nāyakī to fall in line with them. But the Nāyakī is inclined otherwise; drawn towards Tiruvallavāḻ, with its sacred setting as above, she longs to behold the Lord’s feet there for ever and anon. If the mates can tell her when and how she can realise her ambition, well and good; otherwise, they would do well to desist from criticising and pulling her up.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
சூடு மலர் மலர்கள் அணிந்த; குழலீர்! கூந்தலையுடைய பெண்களே!; துயராட்டியேனை பிரிவின் துயரத்தால் நான்; மெலிய மேன்மேலும் மெலியும்படியாக; பாடும் நல் பாடுகின்ற நல்ல சிறந்த; வேத ஒலி வேதத்தின் ஒலியானது; பரவைத் திரை கடலின் அலைகள் முழங்குவது; போல் முழங்க போல் முழங்க; மாடு உயர்ந்து பக்கங்களிலே ஓங்கி உயர்ந்து எழுகின்ற; ஓமப் புகை கமழும் ஹோமப் புகை கமழ; தண் திருவல்லவாழ் குளிர்ந்த திருவல்லவாழில்; நீடு உறைகின்ற நிரந்தரமாக இருக்கும்; பிரான் கழல் பெருமானின் திருவடிகளை; நிச்சலுமே தினமும்; காண்டும் கொல்? காணப்பெறுவோமா?
kuzhaleer oh those who are having hair!; thuyarāttiyĕnai me who is suffering in separation; meliya to weaken; pādu being sung; nal noble (as said in -sāmavĕdhŏsmi #, similar to the divine form for sarvĕṣvavan who is residing there); vĕdha oli the sound of the sāma vĕdham chanting; paravai the ocean-s; thirai pŏl like the rising of the tides; muzhanga tumultous; mādu in the close vicinity; uyarndhu rising from the yāgam (sacrificial fire); ŏmap pugai the smoke from the hŏmam (sacrificial altar); kamazhum spreading the fragrance of the sacrificial offerings; thaṇ invigorating; thiruvallavāzh in thiruvallavāzh; nīduṛaiginṛa eternally residing; pirān great benefactor; kazhal divine feet; nichchalum kāṇdum kol will ī be able to eternally enjoy?; thŏzhimīrgāl̤ ŏh friends (who always care for my likes)!; emmai us (who have not fulfilled your desire)

TVM 5.9.4

3324 நிச்சலும்தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந்தென் செய்தீரோ? *
பச்சிலைநீள்கமுகும் பலவும்தெங்கும்வாழைகளும் *
மச்சணிமாடங்கள்மீதணவும் தண்திருவல்லவாழ் *
நச்சரவினணைமேல் நம்பிரானதுநன்னலமே.
3324 நிச்சலும் தோழிமீர்காள் * எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ? *
பச்சிலை நீள் கமுகும் * பலவும் தெங்கும் வாழைகளும் **
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் * தண் திருவல்லவாழ் *
நச்சு அரவின் அணைமேல் * நம்பிரானது நல் நலமே (4)
3324 niccalum tozhimīrkāl̤ * ĕmmai nīr nalintu ĕṉ cĕytīro? *
paccilai nīl̤ kamukum * palavum tĕṅkum vāzhaikal̤um **
maccu aṇi māṭaṅkal̤ mītu aṇavum * taṇ tiruvallavāzh *
naccu araviṉ aṇaimel * nampirāṉatu nal nalame (4)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Saranagathi

Simple Translation

Oh, mates, why do you keep teasing me? Know that my soul belongs to the Lord who rests on the serpent-bed and now stays in Tiruvallavāḻ, a cool and lovely place with tall arecanut trees, plantains, jackfruit, and coconut trees hanging over the huge mansions.

Explanatory Notes

The Nāyakī tells her mates point-blank that she belongs to the Lord in Tiruvallavāḷ with its enchanting scenery and is, therefore, not free to respond to their wishes. It is no use trying to veer her round to their way of thinking and all their attempts will only prove futile. It was by revealing the charming setting in which He reposed on Ādiśeṣa (Serpent-bed) that the Lord initially attracted the Āzhvār. Therefore it is the Nāyakī pines for intimate service unto the Lord, emulating Ādi-Śeṣa.;

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தோழிமீர்காள்! தோழிமார்களே!; எம்மை நீர் நிச்சலும் நீங்கள் எம்மை எப்போதும்; நலிந்து துன்புறுத்தி; என் செய்தீரோ? என்ன காரியம் செய்தீர்கள்?; பச்சிலை நீள் பச்சை இலைகளையுடைய நீண்ட; கமுகும் பாக்கு மரங்களும்; பலவும் பலாமரங்களும்; தெங்கும் தென்னை மரங்களும்; வாழைகளும் வாழை மரங்களும்; மாடங்கள் மீது மாடங்கள் மீது; மச்சு அணி மச்சுக்களைத் தொடும்படி; அணவும் தண் நிழல் தரும்படி குளிர்ந்த; திருவல்லவாழ் திருவல்லவாழில்; நச்சு அரவின் விஷமுடைய ஆதிசேஷன்; அணைமேல் மீது அணைந்திருக்கும்; நம்பிரானது எம்பெருமானிடம்; நல் நலமே என் உயிர் சென்றுவிட்டது
nīr you; nichchalum always; nalindhu stopping me and torturing me; en what actions; seydhīr are you doing?; pasu green; ilai having leaves; nīl̤ tall; kamugum areca tree; pachchilai nīl̤ similar; palavum jack fruit tree; thengum coconut tree; vāzhaigal̤um plantain trees; machchu upper storeys; aṇi being complete; mādangal̤ on the mansions; mīdhu on top of; aṇavum spread (giving shade for those lands); thaṇ cool; thiruvallavāzh in thiruvallavāzh; nanju spitting poison (to stop the non-devotees); aravin aṇai mĕl reclining on the divine serpent bed; nam revealed for us; pirānadhu the great benefactor-s; nal abundance; nalam goodness.; nannalam more caring towards me than myself; thŏzhimīrgāl̤ ŏh friends!

TVM 5.9.5

3325 நன்னலத்தோழிமீர்காள்! நல்லஅந்தணர்வேள்விப்புகை *
மைந்நலங்கொண்டுயர்விண்மறைக்கும் தண்திருவல்லவாழ் *
கன்னலங்கட்டிதன்னைக் கனியைஇன்னமுதந்தன்னை *
என்னலங்கொள்சுடரை என்றுகொல்கண்கள் காண்பதுவே?
3325 நல் நலத் தோழிமீர்காள் * நல்ல அந்தணர் வேள்விப் புகை *
மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும் * தண் திருவல்லவாழ் **
கன்னல் அம் கட்டி தன்னைக் * கனியை இன் அமுதம் தன்னை *
என் நலம் கொள் சுடரை * என்றுகொல் கண்கள் காண்பதுவே? (5)
3325 nal nalat tozhimīrkāl̤ * nalla antaṇar vel̤vip pukai *
main nalam kŏṇṭu uyar viṇ maṟaikkum * taṇ tiruvallavāzh **
kaṉṉal am kaṭṭi taṉṉaik * kaṉiyai iṉ amutam taṉṉai *
ĕṉ nalam kŏl̤ cuṭarai * ĕṉṟukŏl kaṇkal̤ kāṇpatuve? (5)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Saranagathi

Simple Translation

My dear friends, when will I, behold the radiant Lord, the flawless candy, the nectar, the delicious fruit, who stole my heart, residing in cool Tiruvallavāḻ, where dense, inky fumes rise from the holy fires of Vedic Brahmins and obscure the sky?

Explanatory Notes

Unlike the Mother and other elders who cannot see eye to eye with the Nāyakī, the mates know her mind well enough, although, now and then, they too try to get her round, seeing her extremely critical condition. That is why the Nāyakī finds the mates friendly and addresses them as such. She would want them to tell her when she could behold the Lord in Tiruvallavāḻ of ravishing + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நல் நல சிறந்த அன்புடைய; தோழிமீர்காள்! தோழிமார்களே!; நல்ல அந்தணர் நல்ல வைதிகர்கள் செய்யும்; வேள்விப் புகை வேள்விப் புகை; மைந் நலம் மை போன்ற கருத்த நிறம்; கொண்டு உயர் விண் கொண்டு உயர்ந்த ஆகாசத்தை; மறைக்கும் தண் மறைக்கும் குளிர்ந்த; திருவல்லவாழ் திருவல்லவாழில்; கன்னல் கரும்பிலிருந்து தோன்றிய; அம் கட்டி தன்னை வெல்லக்கட்டி போன்றவனும்; கனியை கனியைப் போன்றவனும்; இன் அமுதம் இனிய அமுதம் போன்றவனுமான; எந் நலம் கொள் என் நலம் கொண்ட; சுடரை தன்னை ஒளி பொருந்திய பெருமானை; கண்கள் காண்பதுவே எனது கண்கள் காணப்பெறுவது; என்றுகொல்? என்றைக்கோ?
nalla being exclusively devoted without any expectations and greatly attached [to emperumān]; andhaṇar vaidhika (follower of vĕdham); vĕl̤vi karmas (rituals) such as agnihŏthram etc which are part of worshipping bhagavān; pugai smoke; mai dark pigment; nalam good colour; koṇdu taking; uyar rise; viṇ sky; maṛaikkum covers and makes it appear dark, providing shade; thaṇ cool; thiruvallavāzh residing in thiruvallavāzh; kannal sugarcane; am without pulp; katti thannai like a block [of sugar] which is sweet inside and outside; kaniyai sweet like a ripened fruit which is to be enjoyed immediately; in on top of that sweetness; amudham thannai being the nectar which gives back the lost life; en my; nalam qualities of āthmā (self) and rūpam (form); kol̤ consumed [enjoyed]; sudarai one who is having a form which acquired radiance due to that; kaṇgal̤ my eyes which are suffering more than me; kāṇbadhu enjoy to its full satisfaction; enṛu kol when?; pāṇ in the form of song; kural having rhythmic sound from the throat

TVM 5.9.6

3326 காண்பதெஞ்ஞான்றுகொலொ? வினையேன்கனிவாய் மடவீர்! *
பாண்குரல்வண்டினொடு பசுந்தென்றலுமாகியெங்கும் *
சேண்சினையோங்குமரச் செழுங்கானல்திருவல்லவாழ் *
மாண்குறள்கோலப்பிரான் மலர்த்தாமரைப்பாதங்களே.
3326 காண்பது எஞ்ஞான்றுகொலோ * வினையேன் கனிவாய் மடவீர் *
பாண் குரல் வண்டினொடு * பசுந் தென்றலும் ஆகி எங்கும் **
சேண் சினை ஓங்கு மரச் * செழுங் கானல் திருவல்லவாழ் *
மாண் குறள் கோலப் பிரான் * மலர்த் தாமரைப் பாதங்களே? (6)
3326 kāṇpatu ĕññāṉṟukŏlo * viṉaiyeṉ kaṉivāy maṭavīr *
pāṇ kural vaṇṭiṉŏṭu * pacun tĕṉṟalum āki ĕṅkum **
ceṇ ciṉai oṅku marac * cĕzhuṅ kāṉal tiruvallavāzh *
māṇ kuṟal̤ kolap pirāṉ * malart tāmaraip pātaṅkal̤e? (6)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Saranagathi

Simple Translation

Oh, charming friends, when can this sinner behold the lotus feet of the lovely Midget, who resides in Tiruvallavāḷ on the seashore, full of fine orchards, where the cool southerly breeze blows and tuneful bees drone?

Explanatory Notes

Although the Lord stays in this holy place as Vāmana of bewitching beauty, with a happy blend of beauty and bounty (easy accessibility), yet His feet hold out a special charm to the Nāyakī who covets the lovely pair all the time, repeatedly mentioning them song after song.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
கனி வாய் கோவைக் கனிபோன்ற வாயையுடைய; மடவீர் தோழிகளே!; பாண் குரல் பண் பாடும் குரலுடைய; வண்டினோடு வண்டுகளோடும்; பசுந்தென்றலும் இளம் தென்றலும்; ஆகி எங்கும் ஆக எங்கும் நிறைந்திருக்கும்; சேண் ஓங்கு மிக உயர்ந்து வளர்ந்த; சினை மர பனை மரங்களோடு கூடின; செழும் சோலைகள் நிறைந்த; கானல் கடற்கரையுடைய; திருவல்லவாழ் திருவல்லவாழில் இருக்கும்; கோலப் பிரான் அழகிய பெருமானான; மாண் குறள் வாமனனின்; மலர்த் தாமரை தாமரை மலரைப் போன்ற; பாதங்களே திருவடிகளை; வினையேன் பாவியான நான்; காண்பது கண்டு வணங்குவது; எஞ்ஞான்றுகொலோ? என்றைக்கோ?
vaṇdinodu with the beetles; pasum thenṛalum fresh southerly breeśe; āgi be; engum in all places; sĕṇ tall; sinai having branches; ŏngu rising; maram having trees; sezhu attractive; kānal having seaside gardens; thiruvallavāzh in thiruvallavāzh; māṇ celibacy (which highlights his seeking aspect); kuṛal̤ and having dwarfness; kŏlam having attractive form; pirān great benefactor-s; malar blossomed; thāmarai enjoyable like lotus; pādhangal̤ divine feet; kani ripened like a fruit; vāy having bright face with beautiful lips; madavīr ŏh friends who are obedient towards me!; vinaiyĕn having sin (to not interact with emperumān as much as ī desired); kāṇbadhu seeing him; engyānṛu kolŏ when will the day be?; ŏdham like ocean; nedu vast

TVM 5.9.7

3327 பாதங்கள்மேலணி பூத்தொழக்கூடுங்கொல்? பாவை நல்லீர்! *
ஓதநெடுந்தடத்துள் உயர்தாமரைசெங்கழுநீர் *
மாதர்கள்வாண்முகமும் கண்ணுமேந்தும்திருவல்லவாழ் *
நாதனிஞ்ஞாலமுண்டநம்பிரான்தன்னைநாள்தொறுமே.
3327 பாதங்கள்மேல் அணி * பூந் தொழக் கூடுங்கொல்? பாவை நல்லீர் *
ஓத நெடுந் தடத்துள் * உயர் தாமரை செங்கழுநீர் **
மாதர்கள் வாள் முகமும் * கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ் *
நாதன் இஞ் ஞாலம் உண்ட * நம் பிரான் தன்னை நாள்தொறுமே? (7)
3327 pātaṅkal̤mel aṇi * pūn tŏzhak kūṭuṅkŏl? pāvai nallīr *
ota nĕṭun taṭattul̤ * uyar tāmarai cĕṅkazhunīr **
mātarkal̤ vāl̤ mukamum * kaṇṇum entum tiruvallavāzh *
nātaṉ iñ ñālam uṇṭa * nam pirāṉ taṉṉai nāl̤tŏṟume? (7)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Saranagathi

Simple Translation

Friends, shall I daily worship the flowers at the feet of the great benefactor, who sustained the worlds during deluge and now presides over Tiruvallavāḻ, where the ponds are huge and studded with fine flowers, and the women wear bright faces?

Explanatory Notes

(i) The bright faces and bewitching eyes of the womenfolk compete with the high class flowers in the ponds, lotus etc., and it is hardly possible to distinguish the one from the other.

(ii) The Lord’s sustenance of the worlds, during the Deluge, is not merely a matter of past history but one of personal experience of the Āzhvār who has been redeemed by the Lord from the deluge of ‘Saṃsāra’ and elevated to the present pitch of devotion.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பாவை பாவை போலே அழகிய; நல்லீர் தோழிகளே!; ஓத நெடும் கடல் போன்று பெரிய; தடத்துள் தடாகங்களுக்குள்ளே; உயர் தாமரை உயர்ந்த தாமரைப் பூக்களும்; செங் கழுநீர் செங் கழுநீர் மலர்களும்; மாதர்கள் வாள் பெண்களின் ஒளி பொருந்தி; முகமும் முகத்தழகையும்; கண்ணும் கண்ணழகையும்; ஏந்தும் பறிக்கும்படி இருக்கும்; திருவல்லவாழ் திருவல்லவாழில் இருக்கும்; நாதன் எம்பெருமான்; இஞ்ஞாலம் இந்த உலகங்களை; உண்ட பிரளய காலத்தில் உண்ட; நம்பிரான் தன்னை நம்பிரானின்; பாதங்கள் திருவடிகளின் மீது; அணி மேல் அலங்கரிக்கப்பட்ட; பூந்தொழ மலர்களையாவது வணங்க; நாள் தொறுமே நாள் தோறும்; கூடுங்கொல்? கூடுமோ?
thadaththul̤ in ponds; uyar tall; thāmarai lotus; sengazhunīr red lily; mādhargal̤ women; vāl̤ having radiance; mugamum beauty of the face; kaṇṇum beauty of eyes; ĕndhum reflecting; thiruvallavāzh for thiruvallavāzh; nādhan being the lord; i this; gyālam world; uṇda with the incident of his consuming and protecting from total deluge; nam for us; pirān thannai appearing as our benefactor; nāl̤ thoṛum eternally; pāvai like a doll; nalleer oh beautiful ladies who are having features!; pādhangal̤ divine feet; mĕl on; aṇi wearing; at least the flower; thozha to worship; kūdum kol will it be possible?; engum everywhere; ādu swaying

TVM 5.9.8

3328 நாள்தொறும்வீடின்றியே தொழக்கூடுங்கொல்? நன்னுதலீர்! *
ஆடுறுதீங்கரும்பும் விளைசெந்நெலுமாகியெங்கும் *
மாடுறுபூந்தடஞ்சேர் வயல்சூழ்தண்திருவல்லவாழ் *
நீடுறைகின்றபிரான் நிலந்தாவியநீள்கழலே.
3328 நாள்தொறும் வீடு இன்றியே * தொழக் கூடுங்கொல் நல் நுதலீர் *
ஆடு உறு தீங் கரும்பும் * விளை செந்நெலும் ஆகி எங்கும் **
மாடு உறு பூந் தடம் சேர் * வயல் சூழ் தண் திருவல்லவாழ் *
நீடு உறைகின்ற பிரான் * நிலம் தாவிய நீள் கழலே? (8)
3328 nāl̤tŏṟum vīṭu iṉṟiye * tŏzhak kūṭuṅkŏl nal nutalīr *
āṭu uṟu tīṅ karumpum * vil̤ai cĕnnĕlum āki ĕṅkum **
māṭu uṟu pūn taṭam cer * vayal cūzh taṇ tiruvallavāzh *
nīṭu uṟaikiṉṟa pirāṉ * nilam tāviya nīl̤ kazhale? (8)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Saranagathi

Simple Translation

Friends with bright foreheads, shall I forever worship the feet of the Lord who once spanned the worlds and now resides in cool Tiruvallavāḻ, with sweet sugar canes all over, ponds packed with lovely flowers, and rich paddy fields alongside?

Explanatory Notes

(i) Reference to the bright foreheads of the mates is but wishful thinking on the part of the Nāyakī who expects the Lord in Tiruvallavāḻ to come down where she is, through the good offices of the mates. On the Lord’s arrival the faces of the mates will naturally brighten up by way of expressing their gratitude to Him.

(ii) The Nāyakī pines for the continual worship of the feel of the Lord of loving condescension gracing Tiruvallavāḻ, cool and exhilarating.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நல் நுதலீர் அழகிய நெற்றியை உடையவர்களே!; எங்கும் எல்லா இடங்களிலும்; ஆடு உறு ஆலைகளில் அறைக்கப்படுகின்ற; தீங் கரும்பும் இனிமையான கரும்புகளும்; விளை முதிர்ந்து விளைந்த; செந்நெலும் ஆகி செந்நெற் பயிர்களுமாய்; மாடு உறு பக்கங்களில் அடர்ந்து; பூந் தடஞ்சேர் பூத்த தடாகங்களோடு கூடின; வயல் சூழ் வயல்களால் சூழ்ந்த; தண் திருவல்லவாழ் குளிர்ந்த திருவல்லவாழில்; நீடு உறைகின்றபிரான் இருக்கும் எம்பெருமானின்; நிலம் தாவிய பூமி முழுவதையும் அளந்த; நீள் கழலே நீண்ட திருவடிகளை; நாள்தொறும் நாள்தோறும்; வீடு இன்றியே இடைவிடாமல்; தொழ கூடுங்கொல்? வணங்கக் கூடுமோ?
uṛu having; thī sweet; karumbum sugarcane; vil̤ai well grown; sennelum fresh paddy; āgi becoming; mādu proximity; uṛu having; pūm thadam ponds with blossomed flowers; sĕr together; vayal fields; sūzh surrounded; thaṇ cool; thiruvallavāzh in thiruvallavāzh; nīduṛaiginṛa eternally residing; pirān great benefactor-s; nilam earth; thāviya measured and accepted; nīl̤ growing to reach everyone-s head; kazhal divine feet; nal being attractive due to such worship; nudhaleer having forehead!; nāl̤ thoṛum everyday; vīdu a momentary break; inṛiyĕ without; thozhak kūdum kol will it be possible to worship?; kul̤ir cool; sŏlaiyul̤ in the garden

TVM 5.9.9

3329 கழல்வளைபூரிப்பயாம்கண்டு கைதொழக்கூடுங்கொலோ? *
குழலென்னயாழுமென்னக் குளிர்சோலையுள்தேனருந்தி *
மழலைவரிவண்டுகளிசைபாடும் திருவல்லவாழ் *
சுழலின்மலிசக்கரப்பெருமானது தொல்லருளே.
3329 கழல் வளை பூரிப்ப யாம் கண்டு * கைதொழக் கூடுங்கொலோ *
குழல் என்ன யாழும் என்னக் * குளிர் சோலையுள் தேன் அருந்தி **
மழலை வரி வண்டுகள் இசை பாடும் * திருவல்லவாழ் *
சுழலின் மலி சக்கரப் பெருமானது * தொல் அருளே? (9)
3329 kazhal val̤ai pūrippa yām kaṇṭu * kaitŏzhak kūṭuṅkŏlo *
kuzhal ĕṉṉa yāzhum ĕṉṉak * kul̤ir colaiyul̤ teṉ arunti **
mazhalai vari vaṇṭukal̤ icai pāṭum * tiruvallavāzh *
cuzhaliṉ mali cakkarap pĕrumāṉatu * tŏl arul̤e? (9)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Saranagathi

Simple Translation

Will the Lord, who wields the dynamic discus, shed His natural grace on me? I long to joyously behold Him with well-set bangles and adore Him in Tiruvallavāḻ, where pretty bees hum like a flute or lyre, fed on honey from the cool orchards.

Explanatory Notes

The Nāyakī invokes the Lord’s spontaneous grace for her to behold Him with great joy, her bangles well set on her wrist in the process and continually adore Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
குளிர்சோலையுள் குளிர்ந்த சோலைகளிலே; தேன் அருந்தி தேன் பருகி; மழலை மழலை போன்ற இனிய பண் உடைய; வரி வண்டுகள் அழகிய வரி வண்டுகள்; குழல் என்ன வேணு கானமோ; யாழும் என்ன வீணா கானமோ என்னும்படியாக; இசை பாடும் இசையை பாடுகின்ற; திருவல்லவாழ் திருவல்லவாழில்; சுழலின் மலி ஒளிமயமான; சக்கர சக்கரத்தை உடைய; பெருமானது பெருமானின்; தொல் அருளே ஸ்வாபாவிகமான அருளாலே; கழல் வளை கழலுகிற வளைகள்; பூரிப்ப யாம் தங்கும்படியாக நாம்; கண்டு கை தொழ கண்டு தொழ வணங்க; கூடுங்கொலோ? கூடுமோ?
thĕn honey; arundhi drink; mazhalai young; vari having stripes; vaṇdugal̤ beetles; kuzhalenna to be said as flute; yāzhumenna to be said as yāzh (a string instrument); isai music; pādum sing; thiruvallavāzh one who is standing in thiruvallavāzh; suzhalil due to radiance of self; mali greatly shining; chakkaram one who is having the divine chakra (disc); perumānadhu sarvĕṣvaran-s; thol natural; arul̤ mercy; kazhal slipping from hands; val̤ai bangles; pūrippa to become complete (and remain on the hands); yām us; kaṇdu see him; kai thozha to worship him with our hands; kūdum kolŏ will it be possible?; thol natural; arul̤ his benefactorship

TVM 5.9.10

3330 தொல்லருள்நல்வினையால்சொல்லக்கூடுங்கொல்? தோழிமீர்காள்! *
தொல்லருள்மண்ணும்விண்ணும் தொழநின்றதிருநகரம் *
நல்லருளாயிரவர் நலனேந்துந்திருவல்லவாழ் *
நல்லருள்நம்பெருமான் நாராயணன்நாமங்களே.
3330 தொல் அருள் நல் வினையால் * சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள் *
தொல் அருள் மண்ணும் விண்ணும் * தொழ நின்ற திருநகரம் **
நல் அருள் ஆயிரவர் * நலன் ஏந்தும் திருவல்லவாழ் *
நல் அருள் நம் பெருமான் * நாராயணன் நாமங்களே? (10)
3330 tŏl arul̤ nal viṉaiyāl * cŏlak kūṭuṅkŏl tozhimīrkāl̤ *
tŏl arul̤ maṇṇum viṇṇum * tŏzha niṉṟa tirunakaram **
nal arul̤ āyiravar * nalaṉ entum tiruvallavāzh *
nal arul̤ nam pĕrumāṉ * nārāyaṇaṉ nāmaṅkal̤e? (10)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Saranagathi

Simple Translation

Friends, shall the grace of Nārāyaṇaṉ descend upon us so we may recite His holy names? By His grand grace, He resides in gracious Tiruvallavāḻ, adored by SriVaikuntam and Earth, where thousands of pious and gracious brahmins have their abode.

Explanatory Notes

(i) Tiruvallavāḻ is described here as the city of grace, adored alike by those on Earth and in spiritual world. Actually, mis description holds good in respect of all the pilgrim centres on Earth, where the Lord of limitless grace makes Himself visible and easily accessible to one and all, in His iconic (worshipable) Form, adored best of all His five manifestations.

(ii) + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தோழிமீர்காள்! தோழிமார்களே!; மண்ணும் மண்ணுலகமும்; விண்ணும் விண்ணுலகமும்; தொழ நின்ற அநுபவித்துத் தொழும்படி நிற்கும்; திரு நகரம் திரு நகரம் திருவல்லவாழ்; நல் அடியார்கள் விஷயத்தில்; அருள் மகா தயாளுவான; நலன் எம்பெருமானின் கல்யாண குணங்களை; ஏந்தும் கொண்டாடிப் பேசுகின்ற; ஆயிரவர் ஆயிரகணக்கானவர்கள் உள்ளனர்; திருவல்லவாழ் திருவல்லவாழில் இருக்கும்; நல் அருள் நல்ல அருளை உடைய; நம் பெருமான் நம் பெருமானான; நாராயணன் நாராயணனின்; நாமங்களே நாமங்களை; தொல் அருள் ஸ்வாபாவிகமான அருளால்; நல்வினையால் உண்டான புண்ணியத்தால்; தொல் அருள் பல முறை சொல்லும் அருள் கூடுமோ?
maṇṇum residents of samsāram (material realm); viṇṇum residents of paramapadham (spiritual realm); thozha to worship and enjoy; ninṛa where he descended to and stood in; thiru having prosperity; nagaram town; nal caring towards his devotees even more than himself; arul̤ having mercy; āyiravar thousand devotees; nalan goodness in the form of knowledge about him, love towards him etc; ĕndhum beholding; thiruvallavāzh in thiruvallavāzh; nal well; arul̤ having mercy; nam making us enjoy; perumān being lord; nārāyaṇan nārāyaṇan who is with all auspicious qualities and wealth, his; nāmangal̤ divine names which express those qualities, wealth etc; thŏzhimīrgāl̤ ŏh friends (who are joyful to recite such divine names)!; thol natural; arul̤ mercy; nal vinaiyāl virtuous aspects; solak kūdum kol will we be able to recite?; nāmangal̤ āyiram udaiya having thousand names (which are amṣam (representation) of the priamary name -nārāyaṇan-, as said in -pĕrāyiram koṇdadhŏr pīdudaiyan nārāyaṇan-); nam perumān sarvĕṣvaran who can be surrendered by everyone claiming -our lord-, his

TVM 5.9.11

3331 நாமங்களாயிரமுடைய நம்பெருமானடிமேல் *
சேமங்கொள்தென்குருகூர்ச் சடகோபன்தெரிந்துரைத்த *
நாமங்களாயிரத்துள் இவைபத்தும்திருவல்லவாழ் *
சேமங்கொள்தென்னகர்மேல் செப்புவார்சிறந்தார் பிறந்தே. (2)
3331 ## நாமங்கள் ஆயிரம் உடைய * நம் பெருமான் அடிமேல் *
சேமம் கொள் தென் குருகூர்ச் * சடகோபன் தெரிந்து உரைத்த **
நாமங்கள் ஆயிரத்துள் * இவை பத்தும் திருவல்லவாழ் *
சேமம் கொள் தென் நகர்மேல் * செப்புவார் சிறந்தார் பிறந்தே (11)
3331 ## nāmaṅkal̤ āyiram uṭaiya * nam pĕrumāṉ aṭimel *
cemam kŏl̤ tĕṉ kurukūrc * caṭakopaṉ tĕrintu uraitta **
nāmaṅkal̤ āyirattul̤ * ivai pattum tiruvallavāzh *
cemam kŏl̤ tĕṉ nakarmel * cĕppuvār ciṟantār piṟante (11)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Saranagathi

Simple Translation

Those who can recite these ten songs, praising the glory of Tiruvallavāḻ, the beautiful walled city, out of the thousand composed by Caṭakōpaṉ of Teṉkurukūr, will gain fame and distinction, even if they are born in this land.

Explanatory Notes

Those that recite this decad will indeed gain fame and distinction, not attainable by other householders. They will not suffer from the disability the Āzhvār suffered and they can thus freely move round and visit the pilgrim centres. The thousand names (Sahasranāma), which actually connote not a mere thousand names but many more without number, depict the auspicious traits + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நாமங்கள் நாராயண சப்தத்தின்; ஆயிரம் உடைய ஆயிரம் நாமங்களையுடைய; நம் பெருமான் எம்பெருமானின்; அடிமேல் திருவடிகளை; சேமங் கொள் தமக்கு ரக்ஷகமாகப் பற்றின; தென் குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; தெரிந்து உரைத்த ஆராய்ந்து அருளிச் செய்த; நாமங்கள் அவன் திருநாமங்கள் போன்ற; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; திருவல்லவாழ் திருவல்லவாழாகிற; சேமங் கொள் க்ஷேமமுடைய; தென் நகர்மேல் தெற்கு நகரத்தைக் குறித்து; செப்புவார் ஓத வல்லவர்கள்; பிறந்தே பிறந்தவர்களில் பகவத் குணாநுபவத்தாலே; சிறந்தார் சிறந்தவராவர்
adi mĕl on divine feet; sĕmam the firm faith in the form of intelligence of being the bestower of tranquillity; kol̤ having; then orderly; kurugūr the leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; therindhu analysed and determined (that -these divine feet are the refuge-); uraiththa mercifully spoke; nāmangal̤ like divine names which describe him; āyiraththul̤ among the thousand pāsurams; ivai these; paththum ten pāsurams; thiruvallavāzh thiruvallavāzh; sĕmam kol̤ protective; then beautiful; nagar mĕl on this town; seppuvār those who can recite; piṛandhu being connected with the material body; siṛandhār having the greatness of being able to enjoy bhagavān; piṛandha (as said in -ajāyamāna:-, -nārāyaṇāth- and -ajŏpisan-, though being not bound by karma and having unfailing nature, born for the sake of protecting his devotees as one amongst the [worldly] species) born; āṛum way