Chapter 4
Complaining about the length of the night - (ஊர் எல்லாம்)
தலைவி இரவு நீட்டிப்புக்கு வருந்திக் கூறல்
In order to engage in the act of madal (pursuing Him by going against Āzhvār’s nature), nAyaki has to sketch her nAyakan’s (paramour) image. But, the disappearance of the sun giving way to the darkness hampered her attempt. Āzhvār immediately attributed this impediment to thinking that Bhagavān used His divine discus to conceal the sun and bring in + Read more
மடலூர வேண்டுமாயின், தான் விரும்புகின்ற நாயகனை ஒரு படத்தில் எழுதவேண்டும். ஆனால், சூரியன் மறைந்து இருள் வந்து அவரது முயற்சியைத் தடுத்துவிட்டது. “இவள் மடலூர்வது தனக்குக் கவுரவக் குறைவு” என்று பகவானே ஆழியால் சூரியனை மறைத்து இருள் வரச்செய்துவிட்டானோ என்றும் அவர் நினைத்தார்.
நள்ளிரவு + Read more
Verses: 3266 to 3276
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: புறநீர்மை
Timing: 6.00- 7.12. AM
Recital benefits: will go to Vaikuntam
- TVM 5.4.1
3266 ## ஊர் எல்லாம் துஞ்சி * உலகு எல்லாம் நள் இருள் ஆய் *
நீர் எல்லாம் தேறி * ஓர் நீள் இரவு ஆய் நீண்டதால் **
பார் எல்லாம் உண்ட * நம் பாம்பு அணையான் வாரானால் *
ஆர் எல்லே வல்வினையேன் * ஆவி காப்பார் இனியே? (1) - TVM 5.4.2
3267 ஆவி காப்பார் இனி யார்? * ஆழ் கடல் மண் விண் மூடி *
மா விகாரம் ஆய் * ஓர் வல் இரவு ஆய் நீண்டதால் **
காவி சேர் வண்ணன் * என் கண்ணனும் வாரானால் *
பாவியேன் நெஞ்சமே * நீயும் பாங்கு அல்லையே. (2) - TVM 5.4.3
3268 நீயும் பாங்கு அல்லைகாண் * நெஞ்சமே நீள் இரவும் *
ஓயும் பொழுது இன்றி * ஊழி ஆய் நீண்டதால் *
காயும் கடும் சிலை * என் காகுத்தன் வாரானால் *
மாயும் வகை அறியேன் * வல்வினையேன் பெண் பிறந்தே * (3) - TVM 5.4.4
3269 பெண் பிறந்தார் எய்தும் * பெரும் துயர் காண்கிலேன் என்று *
ஒண் சுடரோன் * வாராது ஒளித்தான் ** இம் மண் அளந்த
கண் பெரிய செவ்வாய் * எம் கார் ஏறு வாரானால் *
எண் பெரிய சிந்தை நோய் * தீர்ப்பார் ஆர் என்னையே? (4) - TVM 5.4.5
3270 ஆர் என்னை ஆராய்வார்? * அன்னையரும் தோழியரும் *
நீர் என்னே என்னாதே * நீள் இரவும் துஞ்சுவரால் **
கார் அன்ன மேனி * நம் கண்ணனும் வாரானால் *
பேர் என்னை மாயாதால் * வல்வினையேன் பின் நின்றே (5) - TVM 5.4.6
3271 பின்நின்று காதல் நோய் * நெஞ்சம் பெரிது அடுமால் *
முன்நின்று இரா ஊழி * கண் புதைய மூடிற்றால் **
மன் நின்ற சக்கரத்து * எம் மாயவனும் வாரானால் *
இந் நின்ற நீள் ஆவி * காப்பார் ஆர் இவ் இடத்தே? * (6) - TVM 5.4.7
3272 காப்பார் ஆர் இவ் இடத்து? * கங்கு இருளின் நுண் துளி ஆய் *
சேண் பாலது ஊழி ஆய் * செல்கின்ற கங்குல்வாய் **
தூப் பால வெண் சங்கு * சக்கரத்தன் தோன்றானால் *
தீப் பால வல்வினையேன் * தெய்வங்காள் என் செய்கேனோ? (7) - TVM 5.4.8
3273 தெய்வங்காள் என் செய்கேன்? * ஓர் இரவு ஏழ் ஊழி ஆய் *
மெய் வந்து நின்று * எனது ஆவி மெலிவிக்கும் **
கைவந்த சக்கரத்து * என் கண்ணனும் வாரானால் *
தைவந்த தண் தென்றல் * வெம் சுடரில் தான் அடுமே * (8) - TVM 5.4.9
3274 வெம் சுடரில் தான் அடுமால் * வீங்கு இருளின் நுண் துளி ஆய் *
அம் சுடர வெய்யோன் * அணி நெடும் தேர் தோன்றாதால் **
செஞ் சுடர்த் தாமரைக்கண் * செல்வனும் வாரானால் *
நெஞ்சு இடர் தீர்ப்பார் இனி யார்? நின்று உருகுகின்றேனே * (9) - TVM 5.4.10
3275 நின்று உருகுகின்றேனே போல * நெடு வானம் *
சென்று உருகி நுண் துளி ஆய்ச் * செல்கின்ற கங்குல்வாய் **
அன்று ஒருகால் வையம் * அளந்த பிரான் வாரான் என்று *
ஒன்று ஒருகால் சொல்லாது * உலகோ உறங்குமே (10) * - TVM 5.4.11
3276 ## உறங்குவான் போல் * யோகுசெய்த பெருமானை *
சிறந்த பொழில் சூழ் * குருகூர்ச் சடகோபன் சொல் **
நிறம் கிளர்ந்த அந்தாதி * ஆயிரத்துள் இப் பத்தால் *
இறந்து போய் வைகுந்தம் * சேராவாறு எங்ஙனேயோ? * (11)