O Gem-hued Lord! Without Refusal, Accept Me.
மணிவண்ணா! மறுக்காமல் என்னை ஏற்றுக்கொள்
3215 வாங்குநீர்மலருலகில் நிற்பனவும்திரிவனவும் *
ஆங்குயிர்கள்பிறப்பிறப்புப் பிணிமூப்பால்தகர்ப்புண்ணும் *
ஈங்கிதன்மேல்வெந்நரகம் இவையென்ன உலகியற்கை? *
வாங்கெனைநீமணிவண்ணா! அடியேனை மறுக்கேலே.