O Lord Who Rests upon the Banyan Leaf! Bestow Your Grace.
ஆலினிலையாய்! அருள்

499 மாலே! மணிவண்ணா! மார்கழிநீராடுவான் *
மேலையார் செய்வனகள் வேண்டுவனகேட்டியேல் *
ஞாலத்தையெல்லாம் நடுங்கமுரல்வன *
பாலன்னவண்ணத்து உன்பாஞ்சசன்னியமே *
போல்வனசங்கங்கள் போய்ப்பாடுடையனவே *
சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே *
கோலவிளக்கே கொடியேவிதானமே *
ஆலினிலையாய்! அருளேலோரெம்பாவாய்.