Receiving Divine Grace Everywhere, You Shall Rejoice
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவாய்

503 வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனைத் *
திங்கள்திருமுகத்துச் சேயிழையார்சென்றிறைஞ்சி *
அங்கப்பறைகொண்டவாற்றை * அணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன *
சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே *
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள் *
செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால் *
எங்கும்திருவருள்பெற்று இன்புறுவரெம்பாவாய். (2)