TNT 2.20

பெருந்தவம் செய்தவள் என் மகள்

2071 தேராளும்வாளரக்கன்செல்வம்மாளத்
தென்னிலங்கைமுன்மலங்கச்செந்தீயொல்கி *
போராளனாயிரந்தோள்வாணன்மாளப்
பொருகடலைஅரண்கடந்துபுக்குமிக்க
பாராளன் * பாரிடந்துபாரையுண்டு
பாருமிழ்ந்துபாரளந்து பாரையாண்ட
பேராளன் * பேரோதும்பெண்ணைமண்மேல்
பெருந்தவத்தளென்றல்லால்பேசலாமே?
2071 தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாளத் *
தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி *
போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாளப் *
பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க
பார் ஆளன் ** பார் இடந்து பாரை உண்டு
பார் உமிழ்ந்து பார் அளந்து * பாரை ஆண்ட
பேர் ஆளன் * பேர் ஓதும் பெண்ணை மண்மேல் *
பெருந்தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே? 20
2071 ter āl̤um vāl̤ arakkaṉ cĕlvam māl̤at *
tĕṉ ilaṅkai muṉ malaṅkac cĕntī ŏlki *
por āl̤aṉ āyiran tol̤ vāṇaṉ māl̤ap *
pŏru kaṭalai araṇ kaṭantu pukku mikka
pār āl̤aṉ ** pār iṭantu pārai uṇṭu
pār umizhntu pār al̤antu * pārai āṇṭa
per āl̤aṉ * per otum pĕṇṇai maṇmel *
pĕrun tavattal̤ ĕṉṟu allāl pecal āme?-20

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2071. Her mother says, “He, the generous lord, burned the southern Lankā and destroyed the wealth of the Rakshasā Rāvana who carried a shining sword and drove his chariot heroically. He cut off the thousand arms of Vānāsuran, and as a dwarf, he measured the world with one foot and crossed the earth with the other. He, ruler of the world, swallowed the earth, spat it out and kept it again in his stomach and protects it. My daughter praises his divine names always and we can only say that she must have done marvellous tapas to praise his names always on this earth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
முன் முன்பொரு சமயம்; தேர் ஆளும் தேர் வீரனும்; வாள் அரக்கன் வாட்படைவல்லவனுமான அரக்கனின்; செல்வம் மாள செல்வம் மாள; தென் இலங்கை அழகான இலங்கையை; முன் மலங்க கலங்க வைத்து அனுமனைக் கொண்டு; செந்தீ ஒல்கி சிவந்த நெருப்புக்கு இறையாக்கி; போராளன் போர் புரிந்தவனும்; ஆயிரம்தோள் ஆயிரம் தோள்களையுடைய; வாணன் மாள பாணாசுரனை வென்றவனும்; பொரு கடலை அலை கடலையுடைய; அரண் கடந்து கோட்டையைக் கடந்து; புக்கு; மிக்க பாணபுரத்தில் புகுந்து; பார் ஆளன் வீரலக்ஷ்மியைப் பெற்றவனும்; பார் வராஹாவதாரத்தில்; இடந்து பூமியைக் குத்தியெடுத்தவனும்; பாரை பிரளயத்தில் பூமியை வயிற்றில்; உண்டு அடக்கியவனும்; பார் உமிழ்ந்து பின் உமிழ்ந்து படைத்தவனும்; பார் அளந்து திருவிக்கிரமனாய் பூமி அளந்தவனும்; பாரை ஆண்ட இவ்வுலகத்தை காத்தவனுமான; பேர் ஆளன் பெருமானின் பெருமையுடைய; பேர் ஓதும் திருநாமங்களை ஓதும்; பெண்ணை மண்மேல் இப்பெண்ணை உலகில்; பெருந் தவத்தள் பெரும் பாக்கிய முடையவள்; என்று அல்லால் என்று சொல்வதைத் தவிர; பேசலாமே? வேறு என்ன சொல்லமுடியும்?
mun ŏnce upon a time; thĕr ālum vāl̤ arakkan for rāvaṇan who is a chariot warrior and an able fighter of sword,; selvam māl̤a to lose all his wealth, and; then ilangai malanga (his) beautiful lankā to be disturbed,; sem thee olgi (emperumān) burned it with fire that is red; vāṇan (for) bāṇāsuran; pŏr āl̤an who is having the nature of waging war; āyiram thŏl̤ and having thousand shoulders; māl̤a to be defeated,; poru kadal araṇai kadandhu (emperumān) crossing the fort that is like an ocean with strong waves; pukku entering bāṇapuram; mikka (emperumān who is) having in excess the lakshmi for victory,; pārāl̤an and is the ruler of the earth and; pār idandhu who pried and lifted up the earth (in varāha avathāram),; pārai uṇdu and kept the earth in ḥis divine stomach (during pral̤ayam (annihilation of the world)),; pār umizhndhu then letting out the earth; pārai āṇda rules the world and protects it,; pĕr āl̤an that is the glorious emperumān;; peṇṇai ṭhis girl; ŏdhum reciting without break; pĕr ḥis divine names,; maṇ mĕl̤ in this world; perum thavaththal̤ enṛu allāl pĕsalāmĕ? can only say that she is having real blessing; is it possible to say by any other way?

Detailed WBW explanation

thērāḷum – Proclaiming His magnificence now, primarily to manifest the supreme prowess of Emperumān in effortlessly vanquishing Rāvaṇan. The term 'thēr' (chariot) symbolizes not only the chariot but also the formidable strength of Rāvaṇan's varied military forces, including horses, elephants, and more. In descriptions of martial prowess, terms such as athi-rathar

+ Read more