TCV 40

ஆனை காத்து ஓரானை கொன்ற மாயம்

791 ஆனைகாத்துஓரானைகொன்று அதன்றி, ஆயர்பிள்ளையாய்
ஆனைமேய்த்தியானெயுண்டி அன்றுகுன்றமொன்றினால் *
ஆனைகாத்து, மையரிக்கண் மாதரார்திறத்து * முன்
ஆனையன்று சென்றடர்த்த மாயமென்னமாயமே?
791 āṉai kāttu ŏr āṉai kŏṉṟu * atu aṉṟi āyar-pil̤l̤aiyāy *
āṉai meytti āṉĕy uṇṭi * aṉṟu kuṉṟam ŏṉṟiṉāl **
āṉai kāttu mai-arik kaṇ * mātarār tiṟattu muṉ *
āṉai aṉṟu cĕṉṟu aṭartta * māyam ĕṉṉa māyame (40)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

791. You saved the elephant Gajendra from the crocodile and you killed the elephant Kuvalayabeedam, You were raised as a cowherd child, grazed the cows and protected them from the storm with Govardhanā mountain. You fought with the seven bulls to marry Nappinnai. What is all this magic?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆனைகாத்து கஜேந்திரனை காத்து; அது அன்றி அது அல்லாது; ஆயர் இடையர் குலத்துக்கே; பிள்ளையாய் ஓர் ஒப்பற்ற பிள்ளையாய் பிறந்து; ஓர் ஆனை கொன்று குவலயாபீட யானையைக்கொன்று; ஆனை மேய்த்து பசுக்களை மேய்த்து; ஆ நெய் உண்டி பசு நெய்யை அமுது செய்து; அன்று இந்திரன் கல்மாரிபொழிந்தபோது; குன்றம் ஒன்றினால் மலை ஒன்றினால்; ஆனை காத்து பசுக்களை காத்து; அன்று முன்பு ஒரு நாள்; மை மையிட்ட; அரிக்கண் செவ்வரி படர்ந்துள்ள கண்களையுடைய; மாதரார் திறத்து முன் நப்பின்னைக்காக; முன் சென்று அவள் முன்பு; ஆனை அடர்த்த ஏழு எருதுகளைக்கொன்ற; மாயம் என்ன மாயமே ஆச்சர்யம் என்ன ஆச்சர்யமோ!