Your browser does not support the audio element.
audio
1818 முந்துறஉரைக்கேன்விரைக்குழல்மடவார்
கலவியைவிடு தடுமாறல் *
அந்தரமேழும்அலைகடலேழும்
ஆய எம்மடிகள்தம்கோயில் *
சந்தொடுமணியும்அணிமயில்தழையும்
தழுவிவந்தருவிகள்நிரந்து *
வந்திழிசாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே! (2)
1819 இண்டையும்புனலும்கொண்டிடையின்றி
எழுமினோதொழுதுமென்று * இமையோர்
அண்டரும்பரவஅரவணைத்துயின்ற
சுடர்முடிக்கடவுள்தம்கோயில் *
விண்டலர்தூளிவேய்வளர்புறவில்
விரைமலர்க்குறிஞ்சியின்நறுந்தேன் *
வண்டமர்சாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!
1820 பிணிவளராக்கைநீங்கநின்றேத்தப்
பெருநிலமருளின்முன்னருளி *
அணிவளர்குறளாய்அகலிடம்முழுதும்
அளந்தஎம்மடிகள்தம்கோயில் *
கணிவளர்வேங்கைநெடுநிலமதனில்
குறவர்தம்கவணிடைத்துரந்த *
மணிவளர்சாரல்மாலிருஞ்சோலை
1821 சூர்மயிலாயபேய்முலைசுவைத்துச்
சுடுசரமடுசிலைத்துரந்து *
நீர்மையிலாததாடகைமாள
நினைந்தவர்மனம்கொண்டகோயில் *
கார்மலிவேங்கைகோங்கலர்புறவில்
கடிமலர்குறிஞ்சியின்நறுந்தேன் *
வார்புனல்சூழ்தண்மாலிருஞ்சோலை
1822 வணங்கலிலரக்கன்செருக்களத்தவிய
மணிமுடிஒருபதும்புரள *
அணங்கெழுந்தவன்றன்கவந்தம்நின்றாட
அமர்செய்தஅடிகள்தம்கோயில் *
பிணங்கலில்நெடுவேய்நுதிமுகம்கிழிப்பப்
பிரசம்வந்திழிதர * பெருந்தேன்
மணங்கமழ்சாரல்மாலிருஞ்சோலை
1823 விடங்கலந்தமர்ந்தஅரவணைத்துயின்று
விளங்கனிக்கிளங்கன்றுவிசிறி *
குடங்கலந்தாடிக்குரவைமுன்கோத்த
கூத்தஎம்மடிகள்தம்கோயில் *
தடங்கடல்முகந்துவிசும்பிடைப்பிளிறத்
தடவரைக்களிறென்றுமுனிந்து *
மடங்கல்நின்றதிரும்மாலிருஞ்சோலை
1824 தேனுகனாவிபோயுகஅங்கு ஓர்
செழுந்திரள்பனங்கனியுதிர *
தானுகந்தெறிந்ததடங்கடல்வண்ணர்
எண்ணிமுன்இடங்கொண்டகோயில் *
வானகச்சோலைமரதகச்சாயல்
மாமணிக்கல்லதர்நிறைந்து *
மானுகர்சாரல்மாலிருஞ்சோலை
1825 புதமிகுவிசும்பில்புணரிசென்றணவப்
பொருகடல்அரவணைத்துயின்று *
பதமிகுபரியின்மிகுசினம்தவிர்த்த
பனிமுகில்வண்ணர்தம்கோயில் *
கதமிகுசினத்தகடதடக்களிற்றின்
கவுள்வழிக்களிவண்டுபருக *
மதமிகுசாரல்மாலிருஞ்சோலை
1826 புந்தியில்சமணர்புத்தரென்றிவர்கள்
ஒத்தனபேசவும்உகந்திட்டு *
எந்தைபெம்மானார்இமையவர்தலைவர்
சந்தனப்பொழிலின்தாழ்சினைநீழல்
தாழ்வரைமகளிர்கள்நாளும் *
மந்திரத்திறைஞ்சும்மாலிருஞ்சோலை
1827 வண்டமர்சாரல்மாலிருஞ்சோலை
மாமணிவண்ணரைவணங்கும் *
தொண்டரைப்பரவும்சுடரொளிநெடுவேல்
சூழ்வயல்ஆலிநன்னாடன் *
கண்டல்நல்வேலிமங்கையர்தலைவன்
கலியன்வாயொலிசெய்தபனுவல் *
கொண்டுஇவைபாடும்தவமுடையார்கள்
ஆள்வர்இக்குரைகடலுலகே. (2)