Tirumāliruñcōlai is the Abode of Him Who Slew Tāṭakā.
தாடகையை வதைத்தவர் இடம் மாலிருஞ்சோலை
1821 சூர்மயிலாயபேய்முலைசுவைத்துச்
சுடுசரமடுசிலைத்துரந்து *
நீர்மையிலாததாடகைமாள
நினைந்தவர்மனம்கொண்டகோயில் *
கார்மலிவேங்கைகோங்கலர்புறவில்
கடிமலர்குறிஞ்சியின்நறுந்தேன் *
வார்புனல்சூழ்தண்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!