O Foolish Mind! Let Us Go and Worship Tirumāliruñcōlai.
மூட மனமே! மாலிருஞ்சோலையை வணங்கலாம்
1824 தேனுகனாவிபோயுகஅங்கு ஓர்
செழுந்திரள்பனங்கனியுதிர *
தானுகந்தெறிந்ததடங்கடல்வண்ணர்
எண்ணிமுன்இடங்கொண்டகோயில் *
வானகச்சோலைமரதகச்சாயல்
மாமணிக்கல்லதர்நிறைந்து *
மானுகர்சாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!