O Mind! Let Us Worship at Tirumāliruñcōlai.
மனமே! மாலிருஞ்சோலையை வணங்குவோம்
1818 முந்துறஉரைக்கேன்விரைக்குழல்மடவார்
கலவியைவிடு தடுமாறல் *
அந்தரமேழும்அலைகடலேழும்
ஆய எம்மடிகள்தம்கோயில் *
சந்தொடுமணியும்அணிமயில்தழையும்
தழுவிவந்தருவிகள்நிரந்து *
வந்திழிசாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே! (2)