This is the Temple of the One Who Reclines on the Serpent Couch.
பாம்பணைப் பள்ளிகொண்டவன் கோயில் இது
1819 இண்டையும்புனலும்கொண்டிடையின்றி
எழுமினோதொழுதுமென்று * இமையோர்
அண்டரும்பரவஅரவணைத்துயின்ற
சுடர்முடிக்கடவுள்தம்கோயில் *
விண்டலர்தூளிவேய்வளர்புறவில்
விரைமலர்க்குறிஞ்சியின்நறுந்தேன் *
வண்டமர்சாரல்மாலிருஞ்சோலை
வணங்குதும்வாமடநெஞ்சே!