Chapter 3

Thirukkannapuram 3 - (கரை எடுத்த)

திருக்கண்ணபுரம் 3
Thirukkannapuram 3 - (கரை எடுத்த)
The verses in this section are structured as if Sowriraja Perumal, the hero residing in Thirukannapuram, has departed, leaving the āzhvār, the heroine, in deep sorrow. The āzhvār sings these verses expressing the inner anguish of the heroine, lamenting the separation from the hero. Due to the separation from the hero, the heroine's body has become emaciated, + Read more
திருக்கண்ணபுரத்தல் எழுந்தருளிய சவுரிராஜப் பெருமாளாகிய தலைமகன் பிரிந்து சென்றுவிட்டது போலவும், அதனால் ஆழ்வாராகிய தலைமகள் இரங்கிக் கூறுதல் போலவும் ஈண்டுப் பாசுரங்கள் அமைத்துள்ளன. தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கிக் கூறும் அகப்பொருள் துறையில் பாடல்கள் இங்கே இருக்கின்றன. தலைமகன் பிரிவால் தலைமகளின் உடல் மெலிந்து வளைகள் கழன்று விட்டனவாம்!
Verses: 1668 to 1677
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will not get affected by the results of bad karma
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 8.3.1

1668 கரையெடுத்தசுரிசங்கும் கனபவளத்தெழுகொடியும் *
திரையெடுத்துவருபுனல்சூழ் திருக்கண்ணபுரத்துறையும் *
விரையெடுத்ததுழாயலங்கல் விறல்வரைத்தோள்புடைபெயர *
வரையெடுத்தபெருமானுக்கு இழந்தேன்என்வரிவளையே. (2)
1668 ## கரை எடுத்த சுரி சங்கும் * கன பவளத்து எழு கொடியும் *
திரை எடுத்து வரு புனல் சூழ் * திருக்கண்ணபுரத்து உறையும் **
விரை எடுத்த துழாய் அலங்கல் * விறல் வரைத் தோள் புடைபெயர *
வரை எடுத்த பெருமானுக்கு * இழந்தேன் என் வரி வளையே 1
1668 ## karai ĕṭutta curi caṅkum * kaṉa paval̤attu ĕzhu kŏṭiyum *
tirai ĕṭuttu varu puṉal cūzh * tirukkaṇṇapurattu uṟaiyum **
virai ĕṭutta tuzhāy alaṅkal * viṟal varait tol̤ puṭaipĕyara *
varai ĕṭutta pĕrumāṉukku * izhanteṉ-ĕṉ vari val̤aiye-1

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1668. She says, “My bangles grew loose and fell from my arms because of him who wears a fragrant thulasi garland, and carried Govardhanā mountain with his strong mountain-like arms. He stays in Thirukannapuram surrounded by the ocean where waves roll and bring curved conches, precious corals and creepers and leave them on the banks. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரை எடுத்த சப்திக்கும்; சுரி சங்கும் வளைந்த சங்குகளையும்; கன அடர்ந்த செழிப்பான; பவளத்து எழு பவளத்தின்; கொடியும் கொடிகளையும்; திரை எடுத்து வரு அலைகளடித்து எடுத்து வரும்; புனல் சூழ் நீர் சூழ்ந்த; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; விரை எடுத்த மணம் மிக்க; துழாய் அலங்கல் துளசி மாலை அணிந்த; விறல் மிடுக்கையுடைய; வரை மலை போன்ற; தோள் புடை பெயர தோள்கள் அசைய; வரை மலையை எடுத்து; எடுத்த குடையாகப் பிடித்த; பெருமானுக்கு பெருமானுக்கு; என் வரி எனது அழகிய; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்

PT 8.3.2

1669 அரிவிரவுமுகிற்கணத்தால் அகிற்புகையால்வரையோடும் *
தெரிவரியமணிமாடத் திருக்கண்ணபுரத்துறையும் *
வரியரவினணைத்துயின்று மழைமதத்தசிறுதறுகண் *
கரிவெருவமருப்பொசித்தாற்கு இழந்தேனென்கனவளையே.
1669 அரி விரவு முகில் கணத்தால் * அகில் புகையால் வரையோடும் *
தெரிவு அரிய மணி மாடத் * திருக்கண்ணபுரத்து உறையும் **
வரி அரவின் அணைத் துயின்று * மழை மதத்த சிறு தறு கண் *
கரி வெருவ மருப்பு ஒசித்தாற்கு * இழந்தேன் என் கன வளையே 2
1669 ari viravu mukil kaṇattāl * akil pukaiyāl varaiyoṭum *
tĕrivu ariya maṇi māṭat * tirukkaṇṇapurattu uṟaiyum **
vari araviṉ aṇait tuyiṉṟu * mazhai matatta ciṟu taṟu kaṇ *
kari vĕruva maruppu ŏcittāṟku * izhanteṉ-ĕṉ kaṉa val̤aiye-2

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1669. She says, “ My bangles grow loose and fall from my arms because I love him who rests on the ocean on the snake bed of Adisesha, and who terrified the elephant Kuvalayābeedam that had small heroic eyes and shed rut like rain and broke its tusks. He stays in Thirukannapuram filled with beautiful palaces where the smoke of fragrant akil wood rises up and touches the top of the hills where clouds float in the sky. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரி விரவு முகில் கறுத்த மேக; கணத்தால் கூட்டங்களாலும்; அகில் புகையால் அகில் புகைகளாலும்; வரையோடும் மலைகளுக்கும்; மணி மணிமயமான; மாட தெரிவு மாளிகைகளுக்கும் வித்யாசம்; அரிய பார்க்க முடியாத; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; வரி அரவின் வரியுடைய ஆதிசேஷன்; அணைத் துயின்ற மீது துயின்ற; மழை மதத்த சிறு மழைபோல் பெருகும்; தறுகண் மதஜலத்தையுடைய; கரி சீறிய கோபப் பார்வையுடைய; வெருவ குவலயாபீட யானை அஞ்சும்படி; மருப்பு அதன் தந்தத்தை; ஒசித்தாற்கு முறித்த பெருமானுக்கு; என் கன எனது அழகிய கனமான; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்

PT 8.3.3

1670 துங்கமாமணிமாட நெடுமுகட்டின்சூலிகை * போம்
திங்கள்மாமுகில்துணிக்கும் திருக்கண்ணபுரத்துறையும் *
பைங்கண்மால்விடையடர்த்துப் பனிமதிகோள்விடுத்துகந்த *
செங்கண்மாலம்மானுக்கு இழந்தேனென்செறிவளையே.
1670 துங்க மா மணி மாட * நெடு முகட்டின் சூலிகை போம் *
திங்கள் மா முகில் துணிக்கும் * திருக்கண்ணபுரத்து உறையும் **
பைங் கண் மால் விடை அடர்த்துப் * பனி மதி கோள் விடுத்து உகந்த *
செங் கண் மால் அம்மானுக்கு * இழந்தேன் என் செறி வளையே 3
1670 tuṅka mā maṇi māṭa * nĕṭu mukaṭṭiṉ cūlikai pom *
tiṅkal̤ mā mukil tuṇikkum * tirukkaṇṇapurattu uṟaiyum **
paiṅ kaṇ māl viṭai aṭarttup * paṉi mati kol̤ viṭuttu ukanta *
cĕṅ kaṇ māl ammāṉukku * izhanteṉ-ĕṉ cĕṟi val̤aiye-3

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1670. She says, “My tight bangles grow loose and fall from my arms because I love the lovely-eyed lord who fought and killed the seven strong-eyed bulls to marry Nappinnai and who was happy to remove the curse of the cool moon. He stays in Thirukannapuram where the moon rises and moves through the thick clouds above the decorations on the tall tops of the beautiful palaces studded with shining jewels. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துங்க மா விலை மதிக்க முடியாத; மணி ரத்னமயமான; மாட நெடு மாடங்களின்; முகட்டின் உச்சியில்; சூலிகை சூலமானது; போம் திங்கள் ஸஞ்சரிக்கும் சந்திரனையும்; மா முகில் பெரிய மேகங்களையும்; துணிக்கும் துளைக்கும்படியான; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; பைங்கண் பசுமையான கண்களையுடைய; மால் பெரிய வடிவை உடைய; விடை அடர்த்து எருதுகளை அடக்கியவனும்; பனி மதி குளிர்ந்த சந்திரனின்; கோள் விடுத்து ரோகத்தை போக்கி; உகந்த உகந்தவனுமான; செங் கண் மால் தாமரை போன்ற கண்களையுடைய; அம்மானுக்கு பெருமானுக்கு; என் செறி எனது அழகிய கழற்றமுடியாத; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்

PT 8.3.4

1671 கணமருவுமயிலகவு கடிபொழில்சூழ்நெடுமறுகில் *
திணமருவுகனமதிள்சூழ் திருக்கண்ணபுரத்துறையும் *
மணமருவுதோளாய்ச்சி ஆர்க்கப்போய் * உரலோடும்
புணர்மருதம்இறநடந்தாற்குஇழந்தேன்என்பொன்வளையே.
1671 கணம் மருவும் மயில் அகவு * கடி பொழில் சூழ் நெடு மறுகின் *
திணம் மருவு கன மதிள் சூழ் * திருக்கண்ணபுரத்து உறையும் **
மணம் மருவு தோள் ஆய்ச்சி * ஆர்க்க போய் உரலோடும் *
புணர் மருதம் இற நடந்தாற்கு * இழந்தேன் என் பொன் வளையே 4
1671 kaṇam maruvum mayil akavu * kaṭi pŏzhil cūzh nĕṭu maṟukiṉ *
tiṇam maruvu kaṉa matil̤ cūzh * tirukkaṇṇapurattu uṟaiyum **
maṇam maruvu tol̤ āycci * ārkka poy uraloṭum *
puṇar marutam iṟa naṭantāṟku * izhanteṉ-ĕṉ pŏṉ val̤aiye-4

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1671. She says, “My golden bangles grow loose and fall from my arms because I love the lord who was tied to a grinding stone by the lovely-armed cowherdess Yashodā when she became angry with him. He pulled that stone, going through and destroying the marudam trees whose form the Asurans had assumed. He stays in Thirukannapuram with long streets surrounded by strong walls and fragrant groves where groups of beautiful peacocks dance. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கணம் மருவும் கூட்டம் கூட்டமாக; மயில் அகவு மயில்கள் ஆட; கடி மணம் மிக்க; பொழில் சூழ் சோலைகளால் சூழ்ந்த; நெடு மறுகின் பெரிய வீதிகளையுடைய; திணம்மருவு திடமான அடர்ந்த; கன மதிள் சூழ் கனமான மதிள்களால் சூழ்ந்த; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; மணம் மருவு மணம் மிக்க; தோள் ஆய்ச்சி தோள்களையுடைய ஆய்ச்சி; ஆர்க்க கட்டி வைக்க; உரலோடும் போய் உரலோடு போய்; புணர் மருதம் இரட்டை மருதமரங்கள்; இற இற்று விழும்படி; நடந்தாற்கு நடந்த பெருமானுக்கு; என் பொன் எனது அழகிய பொன்; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்

PT 8.3.5

1672 வாயெடுத்தமந்திரத்தால் அந்தணர்தம்செய்தொழில்கள் *
தீயெடுத்துமறைவளர்க்கும் திருக்கண்ணபுரத்துறையும் *
தாயெடுத்தசிறுகோலுக்கு உளைந்தோடி * தயிருண்ட
வாய்துடைத்தமைந்தனுக்கு இழந்தேன்என்வரிவளையே.
1672 வாய் எடுத்த மந்திரத்தால் * அந்தணர் தம் செய் தொழில்கள் *
தீ எடுத்து மறை வளர்க்கும் * திருக்கண்ணபுரத்து உறையும் **
தாய் எடுத்த சிறு கோலுக்கு * உளைந்து ஓடி தயிர் உண்ட *
வாய் துடைத்த மைந்தனுக்கு * இழந்தேன் என் வரி வளையே 5
1672 vāy ĕṭutta mantirattāl * antaṇar tam cĕy tŏzhilkal̤ *
tī ĕṭuttu maṟai val̤arkkum * tirukkaṇṇapurattu uṟaiyum **
tāy ĕṭutta ciṟu kolukku * ul̤aintu oṭi tayir uṇṭa *
vāy tuṭaitta maintaṉukku * izhanteṉ-ĕṉ vari val̤aiye-5

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1672. She says, “ My curved bangles grow loose and fall from my arms, for the lord who, as a little boy Kannan, ran around wiping his mouth when his mother Yashodā chased him with a small stick because he has stolen yogurt and eaten it. He stays in Thirukkannapuram where Vediyars make fires, perform sacrifices and recite the mantras of the Vedās. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அந்தணர் வேதவித்பன்னர்கள்; வாய் எடுத்த பாராயணம் பண்ணும்; மந்திரத்தால் மந்திரங்களோடு; தம் செய் தாங்கள் செய்யும்; தொழில்கள் அநுஷ்டானங்களையும்; தீ அக்நி காரியங்களையும்; எடுத்து குறையறச் செய்து; மறை வளர்க்கும் வேதங்களை வளர்க்கும்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; தாய் எடுத்த தாய் யசோதை கையிலெடுத்த; சிறு கோலுக்கு சிறு கோலுக்கு; உளைந்து ஓடித் அஞ்சி ஓடி; தயிர் உண்ட தயிர் உண்ட; வாய் துடைத்த வாயைத் துடைத்துக்கொள்ளும்; மைந்தனுக்கு பெருமானுக்கு; என் பொன் எனது அழகிய பொன்; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்

PT 8.3.6

1673 மடலெடுத்தநெடுந்தாழை மருங்கெல்லாம்வளர்பவளம் *
திடலெடுத்துச்சுடரிமைக்கும் திருக்கண்ணபுரத்துறையும் *
அடலடர்த்தன்றிரணியனை முரணழிய, அணியுகிரால் *
உடலெடுத்தபெருமானுக்கு இழந்தேன்என்னொளிவளையே.
1673 மடல் எடுத்த நெடுந் தாழை * மருங்கு எல்லாம் வளர் பவளம் *
திடல் எடுத்து சுடர் இமைக்கும் * திருக்கண்ணபுரத்து உறையும் **
அடல் அடர்த்து அன்று இரணியனை * முரண் அழிய அணி உகிரால் *
உடல் எடுத்த பெருமானுக்கு * இழந்தேன் என் ஒளி வளையே 6
1673 maṭal ĕṭutta nĕṭun tāzhai * maruṅku ĕllām val̤ar paval̤am *
tiṭal ĕṭuttu cuṭar imaikkum * tirukkaṇṇapurattu uṟaiyum **
aṭal aṭarttu aṉṟu iraṇiyaṉai * muraṇ azhiya aṇi ukirāl *
uṭal ĕṭutta pĕrumāṉukku * izhanteṉ-ĕṉ ŏl̤i val̤aiye-6

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1673. She says, “My shining bangles grow loose and fall from my arms, because I love the dear lord who fought with Hiranyan, split open his chest with his strong nails and destroyed his strength. He stays in Thirukkannapuram where tall fragrant petaled thāzai flowers grow on the dunes and the corals left by the river shine like blinking eyes. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மடல் எடுத்த மடல்களையுடைய; நெடுந் தாழை தாழம்பூ செடிகளின்; மருங்கு எல்லாம் பக்கங்களில் எல்லாம்; வளர் பவளம் வளரும் பவளங்கள்; திடல் எடுத்து மேடுகளிலே படர்ந்து; சுடர் இமைக்கும் ஒளியுடன் பிரகாசிக்கும்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும் பெருமான்; அடல் அன்று அன்று போரில்; இரணியனை இரணியனை; அடர்த்து நெருக்கி; முரண் அழிய மிடுக்கு அழியும் படியாக அடக்கி; அணிஉகிரால் அழகிய நகங்களால்; உடல் எடுத்த அவன் உடலைப் பிளந்த; பெருமானுக்கு பெருமானுக்கு; என் ஒளி எனது அழகிய ஒளிமயமான; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்

PT 8.3.7

1674 வண்டமரும்மலர்ப்புன்னை வரிநீழல்அணிமுத்தம் *
தெண்திரைகள்வரத்திரட்டும் திருக்கண்ணபுரத்துறையும் *
எண்திசையும்எழுசுடரும் இருநிலனும்பெருவிசும்பும் *
உண்டுமிழ்ந்தபெருமானுக்கு இழந்தேன்என்னொளிவளையே.
1674 வண்டு அமரும் மலர்ப் புன்னை * வரி நீழல் அணி முத்தம் *
தெண் திரைகள் வரத் திரட்டும் * திருக்கண்ணபுரத்து உறையும் **
எண் திசையும் எழு சுடரும் * இரு நிலனும் பெரு விசும்பும் *
உண்டு உமிழ்ந்த பெருமானுக்கு * இழந்தேன் என் ஒளி வளையே 7
1674 vaṇṭu amarum malarp puṉṉai * vari nīzhal aṇi muttam *
tĕṇ tiraikal̤ varat tiraṭṭum * tirukkaṇṇapurattu uṟaiyum **
ĕṇ ticaiyum ĕzhu cuṭarum * iru nilaṉum pĕru vicumpum *
uṇṭu umizhnta pĕrumāṉukku * izhanteṉ-ĕṉ ŏl̤i val̤aiye-7

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1674. She says, “My shining bangles grow loose and fall from my arms because I love the dear lord who swallowed all the eight directions, the sun and moon, the large earth and the wonderful sky and spat them all out. He stays in Thirukkannapuram where clear waves bring beautiful pearls and pile them up in the shadow of Punnai trees blooming with blossoms where bees swarm. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு அமரும் வண்டு அமரும்; மலர் மலர்களையுடைய; புன்னை புன்னை மரத்தின்; வரி நீழல் இருண்ட நிழலில்; அணி முத்தம் அழகிய முத்துக்களை; தெண் திரைகள் தெளிந்த அலைகள்; வரத் திரட்டும் கொண்டு வந்து சேர்க்கும்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; எண் திசையும் எட்டு திசைகளையும்; எழு சுடரும் ஒளிமயமான ஏழு சூரியனையும்; இரு நிலனும் பரந்த பூமியையும்; பெரு விசும்பும் பெரிய ஆகாசத்தையும்; உண்டு பிரளயத்தில் உண்டு; உமிழ்ந்த பின்பு ச்ருஷ்ட்டியில் உமிழ்ந்த; பெருமானுக்கு பெருமானுக்கு; என் ஒளி எனது அழகிய ஒளிமயமான; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்

PT 8.3.8

1675 கொங்குமலிகருங்குவளைகண்ணாகத் * தெண்கயங்கள்
செங்கமலமுகமலர்த்தும் திருக்கண்ணபுரத்துறையும் *
வங்கமலிதடங்கடலுள் வரியரவினணைத்துயின்ற *
செங்கமலநாபனுக்கு இழந்தேன்என்செறிவளையே.
1675 கொங்கு மலி கருங் குவளை * கண் ஆகத் தெண் கயங்கள் *
செங் கமலம் முகம் அலர்த்தும் * திருக்கண்ணபுரத்து உறையும் **
வங்கம் மலி தடங் கடலுள் * வரி அரவின் அணைத் துயின்ற *
செங்கமலநாபனுக்கு * இழந்தேன் என் செறி வளையே 8
1675 kŏṅku mali karuṅ kuval̤ai * kaṇ ākat tĕṇ kayaṅkal̤ *
cĕṅ kamalam mukam alarttum * tirukkaṇṇapurattu uṟaiyum **
vaṅkam mali taṭaṅ kaṭalul̤ * vari araviṉ aṇait tuyiṉṟa *
cĕṅkamalanāpaṉukku * izhanteṉ-ĕṉ cĕṟi val̤aiye-8

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1675. She says, “My tight bangles grow loose and fall from my arms because I love the lord who rests on the snake bed Adisesha on the wide ocean rolling with waves and created Nānmuhan on a lotus on his navel. He stays in Thirukkannapuram where beautiful lotuses bloom like lovely faces and dark kuvalai flowers dripping with honey bloom like eyes. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொங்கு மலி மணம் மிக்க; கருங் குவளை கரு நெய்தற்பூக்களை; கண் ஆக கண்களாகவும்; செங்கமலம் செந்தாமரைப் பூக்கள்; முகம் அலர்த்தும் பெண்களின் முகங்களையும் மலர்த்தும்; தெண் கயங்கள் தெளிந்த தடாகங்கள்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; வங்கம் மலி அலைகள் நிறைந்த; தடங் கடலுள் பெரிய கடலில்; வரி அரவின் ஆதிசேஷனாகிய; அணை பாம்புப் படுக்கையில்; துயின்ற துயின்ற; செங்கமலநாபனுக்கு செங்கமலநாபனுக்கு; என் செறி எனது அழகிய ஒளிமயமான; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்

PT 8.3.9

1676 வாராளும்இளங்கொங்கை நெடும்பணைத்தோள்மடப்பாவை *
சீராளும்வரைமார்பன் திருக்கண்ணபுரத்துறையும் *
பேராளன்ஆயிரம்பேர் ஆயிரவாயரவணைமேல் *
பேராளர்பெருமானுக்கு இழந்தேன்என்பெய்வளையே.
1676 வார் ஆளும் இளங் கொங்கை * நெடும் பணைத் தோள் மடப் பாவை *
சீர் ஆளும் வரை மார்வன் * திருக்கண்ணபுரத்து உறையும் **
பேராளன் ஆயிரம் பேர் * ஆயிர வாய் அரவு அணைமேல் *
பேராளர் பெருமானுக்கு * இழந்தேன் என் பெய் வளையே 9
1676 vār āl̤um il̤aṅ kŏṅkai * nĕṭum paṇait tol̤ maṭap pāvai *
cīr āl̤um varai mārvaṉ * tirukkaṇṇapurattu uṟaiyum **
perāl̤aṉ āyiram per * āyira vāy aravu-aṇaimel *
perāl̤ar pĕrumāṉukku * izhanteṉ-ĕṉ pĕy val̤aiye-9

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1676. She says, “My bangles grow loose and fall from my arms because I love the generous lord with a thousand names who rests on the thousand-tongued Adisesha. He stays in Thirukannapuram embracing on his mountain-like chest the beautiful Lakshmi with arms like bamboo and young breasts secured with a band. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார் ஆளும் கச்சோடு கூடின; இளம் கொங்கை மார்பகங்களையுடைய; நெடும்பணை நீண்ட மூங்கில் போன்ற; தோள் தோள்களையுடைய; மட பவ்யமான பதுமை போன்றவளான; பாவை திருமகள் இருக்கும்; சீர் ஆளும் சீர்மையான செல்வத்தை உடைய; வரை மலைபோன்ற; மார்வன் மார்பையுடையவன்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; பேராளன் பெருமையுடையவன்; ஆயிரம் பேர் ஆயிரம் நாமங்களையுடையவன்; ஆயிரவாய் ஆயிரம் முகங்களுடைய; அரவணை ஆதிசேஷன்; மேல் மேல் சயனித்திருக்கும்; பேர் ஆளர் பெருமையுடைய; பெருமானுக்கு பெருமானுக்கு; என் பெய் எனது அழகிய ஒளிமயமான; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்

PT 8.3.10

1677 தேமருவுபொழில்புடைசூழ் திருக்கண்ணபுரத்துறையும்
வாமனனை * மறிகடல்சூழ் வயலாலிவளநாடன் *
காமருசீர்க்கலிகன்றி கண்டுரைத்ததமிழ்மாலை *
நாமருவிஇவைபாட வினையாயநண்ணாவே. (2)
1677 ## தே மருவு பொழில் புடை சூழ் * திருக்கண்ணபுரத்து உறையும்
வாமனனை * மறி கடல் சூழ் * வயல் ஆலி வள நாடன் **
காமரு சீர்க் கலிகன்றி * கண்டு உரைத்த தமிழ் மாலை *
நா மருவி இவை பாட * வினை ஆய நண்ணாவே 10
1677 ## te maruvu pŏzhil puṭai cūzh * tirukkaṇṇapurattu uṟaiyum
vāmaṉaṉai * maṟi kaṭal cūzh * vayal āli val̤a nāṭaṉ **
kāmaru cīrk kalikaṉṟi * kaṇṭu uraitta tamizh-mālai *
nā maruvi ivai pāṭa * viṉai āya naṇṇāve-10

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1677. Thirumangai, the famous king of Thiruvāli with its flourishing fields composed ten beautiful Tamil pāsurams on Vāmanān the god of Thirukannapuram surrounded by the ocean with rolling waves and groves where honey drips from flowers. If devotees learn and recite these pāsurams their bad karmā will have no results.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தே மருவு தேன் நிறைந்த; பொழில் புடை சூழ் சோலைகளால் சூழ்ந்த; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; வாமனனை வாமநப் பெருமானைக் குறித்து; மறி கடல் சூழ் அலைகளால் சூழ்ந்த கடலால்; வயல் வயல் வளங்களையுடைய; ஆலி வள நாடன் ஆலி நாடன் என்னும்; காமரு விரும்பத்தக்க; சீர் குணங்களையுடையவருமான; கலிகன்றி திருமங்கையாழ்வார்; கண்டு உரைத்த ஆராய்ந்து அருளிச்செய்த; தமிழ் மாலை இவை இத்தமிழ்ப் பாசுரங்களை; நா மருவி பாட நாவினால் மனமுருகி பாட; வினையாய நண்ணாவே பாபங்கள் அணுகாதே