PT 8.3.8

Due to His Separation, My Tightly-fitted Bracelets Slipped Off

அவன் பிரிவால் என் செறிவளைகள் கழன்றன

1675 கொங்குமலிகருங்குவளைகண்ணாகத் * தெண்கயங்கள்
செங்கமலமுகமலர்த்தும் திருக்கண்ணபுரத்துறையும் *
வங்கமலிதடங்கடலுள் வரியரவினணைத்துயின்ற *
செங்கமலநாபனுக்கு இழந்தேன்என்செறிவளையே.
1675 kŏṅku mali karuṅ kuval̤ai * kaṇ ākat tĕṇ kayaṅkal̤ *
cĕṅ kamalam mukam alarttum * tirukkaṇṇapurattu uṟaiyum **
vaṅkam mali taṭaṅ kaṭalul̤ * vari araviṉ aṇait tuyiṉṟa *
cĕṅkamalanāpaṉukku * izhanteṉ-ĕṉ cĕṟi val̤aiye-8

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1675. She says, “My tight bangles grow loose and fall from my arms because I love the lord who rests on the snake bed Adisesha on the wide ocean rolling with waves and created Nānmuhan on a lotus on his navel. He stays in Thirukkannapuram where beautiful lotuses bloom like lovely faces and dark kuvalai flowers dripping with honey bloom like eyes. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கொங்கு மலி மணம் மிக்க; கருங் குவளை கரு நெய்தற்பூக்களை; கண் ஆக கண்களாகவும்; செங்கமலம் செந்தாமரைப் பூக்கள்; முகம் அலர்த்தும் பெண்களின் முகங்களையும் மலர்த்தும்; தெண் கயங்கள் தெளிந்த தடாகங்கள்; திருக்கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில்; உறையும் இருக்கும்; வங்கம் மலி அலைகள் நிறைந்த; தடங் கடலுள் பெரிய கடலில்; வரி அரவின் ஆதிசேஷனாகிய; அணை பாம்புப் படுக்கையில்; துயின்ற துயின்ற; செங்கமலநாபனுக்கு செங்கமலநாபனுக்கு; என் செறி எனது அழகிய ஒளிமயமான; வளையே வளையல்களை; இழந்தேன் இழந்தேன்