1647 கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனென்று
காதலால்கலிகன்றியுரைசெய்த *
வண்ணவொண்தமிழொன்பதோடொன்றிவை
வல்லராய்உரைப்பார் மதியம்தவழ் *
விண்ணில்விண்ணவராய்மகிழ்வெய்துவர்
மெய்ம்மைசொல்லில்வெண்சங்கமொன்றேந்திய
கண்ண! * நின்தனக்கும்குறிப்பாகில்
கற்கலாம் கவியின்பொருள்தானே. (2)