Bhaktavatsala is He Who is All Things
எல்லாப் பொருள்களுமாக இருப்பவன் பக்தவத்சலன்
1639 மெய்ந்நலத்தவத்தைத்திவத்தைத்தரும்
மெய்யைப்பொய்யினை கையில்ஓர்சங்குடை *
மைந்நிறக்கடலைக்கடல்வண்ணனை மாலை
ஆலிலைப்பள்ளிகொள்மாயனை *
நென்னலைப்பகலைஇற்றைநாளினை
நாளையாய்வரும்திங்களைஆண்டினை *
கன்னலைக்கரும்பினிடைத்தேறலைக்
கண்ணமங்கையுள்கண்டுகொண்டேனே.