Chapter 1

Thirunaraiyur 8 - (கறவா மட)

திருநறையூர் 8
Thirunaraiyur 8 - (கறவா மட)
The āzhvār beseeches Thirunaraiyur Nambi to remove the great sorrow of worldly existence and bestow His grace upon him. How could the āzhvār ever forget such a merciful Lord?
பிறவிப் பெருந்துயரை நீக்கித் தமக்கு அருள் புரியுமாறு திருநறையூர் நம்பியை ஆழ்வார் ஈண்டு வேண்டுகிறார். அப்பெருமானை ஆழ்வார் எப்படி மறப்பார்?
Verses: 1548 to 1557
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and be happy with the Gods
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 7.1.1

1548 கறவாமடநாகுதன் கன்றுஉள்ளினாற்போல் *
மறவாதுஅடியேன் உன்னையே அழைக்கின்றேன் *
நறவார்பொழில்சூழ் நறையூர்நின்றநம்பி! *
பிறவாமைஎனைப்பணி எந்தைபிரானே! (2)
1548 ## கறவா மட நாகு * தன் கன்று உள்ளினால் போல் *
மறவாது அடியேன் * உன்னையே அழைக்கின்றேன் **
நறவு ஆர் பொழில் சூழ் * நறையூர் நின்ற நம்பி *
பிறவாமை எனைப் பணி * எந்தை பிரானே 1
1548 ## kaṟavā maṭa nāku * taṉ kaṉṟu ul̤l̤iṉāl pol *
maṟavātu aṭiyeṉ * uṉṉaiye azhaikkiṉṟeṉ **
naṟavu ār pŏzhil cūzh * naṟaiyūr niṉṟa nampi *
piṟavāmai ĕṉaip paṇi * ĕntai pirāṉe-1

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1548. Like a young calf that craves its mother’s milk I call you unceasingly. You, our Nambi, stay in Naraiyur surrounded with groves dripping with honey. Give me your grace so I will not be born again, my father and my god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நறவு ஆர் தேன்மிக்க; பொழில் சூழ் சோலைகளால் சூழ்ந்த; நறையூர் திருநறையூரில்; நின்ற நம்பி! இருக்கும் பெருமானே!; கறவா மட நாகு பால்சுரவாத இளம்பசு; தன் கன்று அதன் கன்றை; உள்ளினாற்போல் நினைத்து கத்துமாப்போல்; மறவாது அடியேன் அடியேன் மறவாமல்; உன்னையே உன்னையே; அழைக்கின்றேன் அழைக்கின்றேன்; எந்தை பிரானே! என் தந்தையான பெருமானே!; பிறவாமை எனைப் என்னை பிறவாதபடி; பணி செய்தருள்வாய்

PT 7.1.2

1549 வற்றாமுதுநீரொடு மால்வரையேழும் *
துற்றாமுன்துற்றிய தொல்புகழோனே! *
அற்றேன்அடியேன் உன்னையேஅழைக்கின்றேன் *
பெற்றேன்அருள்தந்திடு என்எந்தைபிரானே!
1549 வற்றா முதுநீரொடு * மால் வரை ஏழும் *
துற்று ஆக முன் துற்றிய * தொல் புகழோனே **
அற்றேன் அடியேன் * உன்னையே அழைக்கின்றேன் *
பெற்றேன் அருள் தந்திடு * என் எந்தை பிரானே 2
1549 vaṟṟā mutunīrŏṭu * māl varai ezhum *
tuṟṟu āka muṉ tuṟṟiya * tŏl pukazhoṉe **
aṟṟeṉ aṭiyeṉ * uṉṉaiye azhaikkiṉṟeṉ *
pĕṟṟeṉ arul̤ tantiṭu * ĕṉ ĕntai pirāṉe-2

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1549. Ancient and famous Lord of Naraiyur, you swallowed all the oceans that never dry and the seven hills. I have no one—I am your slave. I call you, I come to you. Give me your grace, my father and lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வற்றா முதுநீரொடு வற்றாத கடல்களையும்; மால் வரை ஏழும் பெரிய ஏழு மலைகளையும்; முன் முன்பொருசமயம்; துற்று ஆக துற்றிய ஒரு கபளமாக வாரி விழுங்கிய; தொல் புகழோனே! கீர்த்தியையுடையவனே!; என் எந்தை பிரானே! என் தந்தையே!; அற்றேன் அடியேன் உனக்கே தாஸனான அடியேன்; உன்னையே அழைக்கின்றேன் உன்னையே அழைக்கும்; பெற்றேன் இப்பெரும் பேற்றைப் பெற்றேன்; அருள் தந்திடு அருள் தந்திடவேண்டும்

PT 7.1.3

1550 தாரேன்பிறர்க்கு உன்னருள்என்னிடைவைத்தாய் *
ஆரேன் அதுவேபருகிக்களிக்கின்றேன் *
காரேய்கடலேமலையே திருக்கோட்டி
யூரே * உகந்தாயை உகந்தடியேனே.
1550 தாரேன் பிறர்க்கு * உன் அருள் என்னிடை வைத்தாய் *
ஆரேன் அதுவே * பருகிக் களிக்கின்றேன் **
கார் ஏய் கடலே மலையே * திருக்கோட்டி
ஊரே * உகந்தாயை * உகந்து அடியேனே 3
1550 tāreṉ piṟarkku * uṉ arul̤ ĕṉṉiṭai vaittāy *
āreṉ atuve * parukik kal̤ikkiṉṟeṉ **
kār ey kaṭale malaiye * tirukkoṭṭi
ūre * ukantāyai * ukantu aṭiyeṉe-3

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1550. You, the Lord of Naraiyur, gave me your grace and I will not give it away to anyone else. I drink your grace and relish it—it is never enough for me. You have the dark color of the ocean and are like a mountain, O god of Thirukkottiyur. You are happy to have me as your devotee and I, your slave, have received you with joy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உன் அருள் உன் அருளை; என்னிடைவைத்தாய் என்னிடம் வைத்தாய்; தாரேன் வேறொருவர்க்கும்; பிறர்க்கு கொடுக்கமாட்டேன்; அடியேனே உகந்து அடியேனை உகந்து; கார் ஏய் மேகங்கள் படிந்திருக்கும்; கடலே பாற்கடலையும்; மலையே திருமலையையும்; திருக்கோட்டி ஊரே திருக்கோட்டியூரையும்; உகந்தாய் உகந்து அருளினாய்; அதுவே பருகிக் அந்த அருளையே அனுபவித்து; ஆரேன் திருப்தியடையாதவனாகவும் அதேசமயம்; களிக்கின்றேன் திருப்தியாகவும் களிக்கின்றேன்

PT 7.1.4

1551 புள்வாய்பிளந்த புனிதா! என்றுஅழைக்க *
உள்ளேநின்று என்னுள்ளம்குளிரும்ஒருவா! *
கள்வா! கடன்மல்லைக்கிடந்தகரும்பே! *
வள்ளால்! உன்னை எங்ஙனம்நான்மறக்கேனே?
1551 புள் வாய் பிளந்த * புனிதா என்று அழைக்க *
உள்ளே நின்று * என் உள்ளம் குளிரும் ஒருவா! **
கள்வா! * கடல்மல்லைக் கிடந்த கரும்பே *
வள்ளால் உன்னை * எங்ஙனம் நான் மறக்கேனே? 4
1551 pul̤ vāy pil̤anta * puṉitā ĕṉṟu azhaikka *
ul̤l̤e niṉṟu * ĕṉ ul̤l̤am kul̤irum ŏruvā! **
kal̤vā! * kaṭalmallaik kiṭanta karumpe *
val̤l̤āl uṉṉai * ĕṅṅaṉam nāṉ maṟakkeṉe?-4

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1551. When I called you, the Lord of Naraiyur and said, “O faultless one, you split open the beak of the bird, ” you entered my heart and gave me peace. You are unique, you are a thief, you are sweet as sugarcane like in Kadalmallai, you are generous, you rest on the ocean in Thirumāllai. How could I forget you?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புள் வாய் பகாஸுரனின் வாயை; பிளந்த புனிதா! பிளந்த புனிதனே!; என்று அழைக்க என்று நான் அழைத்தவுடன்; உள்ளே நின்று என் உள்ளத்திலிருந்து; என் உள்ளம் என் மனம்; குளிரும் குளிரும்படி இருக்கும்; ஒருவா! கள்வா! ஒப்பற்றவனே! கள்வனே!; கடல் மல்லை திருக்கடல் மல்லையில்; கிடந்த கரும்பே! இருக்கும் இனியவனே!; வள்ளால்! வள்ளலே!; உன்னை எங்ஙனம் உன்னை எப்படி; நான் மறக்கேனே நான் மறப்பேன்

PT 7.1.5

1552 வில்லேர்நுதல் வேல்நெடுங்கண்ணியும்நீயும் *
கல்லார்கடுங்கானம் திரிந்தகளிறே! *
நல்லாய்! நரநாரணனே! எங்கள்நம்பி! *
சொல்லாய்உன்னை யான்வணங்கித்தொழுமாறே.
1552 வில் ஏர் * நுதல் நெடுங் கண்ணியும் நீயும் *
கல் ஆர் கடுங் கானம் * திரிந்த களிறே *
நல்லாய் நர நாரணனே! * எங்கள் நம்பி *
சொல்லாய் உன்னை * யான் வணங்கித் தொழும் ஆறே 5
1552 vil er * nutal nĕṭuṅ kaṇṇiyum nīyum *
kal ār kaṭuṅ kāṉam * tirinta kal̤iṟe *
nallāy nara nāraṇaṉe! * ĕṅkal̤ nampi *
cŏllāy-uṉṉai * yāṉ vaṇaṅkit tŏzhum āṟe-5

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1552. As if you were a strong elephant, you wandered in the cruel mountainous forest with Sita, your wife with long spear-like eyes and a beautiful forehead like a bow. You are good, you are Nārāyanān and you took the form of a man-lion. Tell me, how can I bow to you, the Lord of Naraiyur and worship you?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வில் ஏர் வில் போன்ற; நுதல் வேல் நெற்றியும் வேல் போன்ற; நெடும் நீண்ட; கண்ணியும் கண்களையுமுடைய மஹாலக்ஷ்மியும்; நீயும் அவளுக்கு நாதனான நீயும்; கல் ஆர் கற்கள் நிறைந்த; கடுங் கானம் காட்டிலே; திரிந்த ஸஞ்சரித்த; களிறே! யானை போன்றவனே!; நல்லாய்! நன்மை அருள்பவனே!; நர நாரணனே! நர நாரணனே!; எங்கள் நம்பி! எங்கள் குண்பூர்ணனே!; உன்னை யான் உன்னை நான்; வணங்கி வணங்கி தொழும்; தொழும் ஆறே முறையை எனக்கு; சொல்லாய் சொல்லி அருள வேண்டும்

PT 7.1.6

1553 பனியேய்பரங்குன்றின் பவளத்திரளே! *
முனியே! திருமூழிக்களத்துவிளக்கே! *
இனியாய்தொண்டரோம் பருகுஇன்னமுதாய
கனியே! * உன்னைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
1553 பனி ஏய் பரங் குன்றின் * பவளத் திரளே *
முனியே * திருமூழிக்களத்து விளக்கே **
இனியாய் தொண்டரோம் * பருகும் இன் அமுது ஆய
கனியே * உன்னைக் கண்டுகொண்டு * உய்ந்தொழிந்தேனே 6
1553 paṉi ey paraṅ kuṉṟiṉ * paval̤at tiral̤e *
muṉiye * tirumūzhikkal̤attu vil̤akke **
iṉiyāy tŏṇṭarom * parukum iṉ amutu āya
kaṉiye * uṉṉaik kaṇṭukŏṇṭu * uyntŏzhinteṉe-6

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1553. You are a treasure of coral, a sage, you are the light of Thirumuzhikkalam and you stay in the divine hills of Thirpuprithi surrounded with snow. You are a fruit sweet as nectar, and a sweet drink for your devotees. I found you my Lord of Naraiyur and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பணி ஏய் பனி நிறைந்த; பரங் குன்றின் பெரிய மலையிலிருக்கும்; பவளத் திரளே! பவளத் திரள் போன்றவனே!; முனியே! முனியே!; திருமூழிக்களத்து திருமூழிக்களம் என்னுமிடத்து; விளக்கே! இனியாய்! விளக்கே! இனியவனே!; தொண்டரோம் தொண்டர்களான நாங்கள்; பருகு பருகும்படி; இன் அமுதாய இனிமையான அம்ருதம் போன்ற; கனியே! கனியே!; உன்னை உன்னை; கண்டு கொண்டு கண்டு கொண்டு; உய்ந்தொழிந்தேனே உய்ந்து போனேனே

PT 7.1.7

1554 கதியேலில்லை நின்னருளல்லதுஎனக்கு *
நிதியே! திருநீர்மலைநித்திலத்தொத்தே! *
பதியே! பரவித்தொழும் தொண்டர்தமக்குக்
கதியே! * உனைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
1554 கதியேல் இல்லை * நின் அருள் அல்லது எனக்கு *
நிதியே! * திருநீர்மலை நித்திலத் தொத்தே *
பதியே பரவித் தொழும் * தொண்டர் தமக்குக்
கதியே * உன்னைக் கண்டுகொண்டு * உய்ந்தொழிந்தேனே 7
1554 katiyel illai * niṉ arul̤ allatu ĕṉakku *
nitiye! * tirunīrmalai nittilat tŏtte *
patiye paravit tŏzhum * tŏṇṭar-tamakkuk
katiye * uṉṉaik kaṇṭukŏṇṭu * uyntŏzhinteṉe-7

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1554. You are a treasure, you are a garland of pearls on Thiruneermalai and I have no other refuge but your grace. If your devotees praise and worship you, you give them refuge. I found you the Lord of Naraiyur and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின் அருள் உன் அருள்; அல்லது எனக்கு இல்லை எனில் எனக்கு; கதியேல் இல்லை வேறு கதி இல்லை; நிதியே! நிதி போன்றவனே!; திருநீர் மலை திருநீர் மலையிலிருக்கும்; நித்தில முத்து; தொத்தே! மாலை போன்றவனே!; பதியே! எம்பெருமானே!; பரவித் தொழும் வணங்கித் தொழும்; தொண்டர் தமக்குக் பக்தர்களுக்கு; கதியே! நீயே கதி; உன்னை உன்னை; கண்டு கொண்டு கண்டு கொண்டு; உய்ந்தொழிந்தேனே உய்ந்தொழிந்தேன்

PT 7.1.8

1555 அத்தா! அரியே! என்று உன்னை அழைக்க *
பித்தாவென்றுபேசுகின்றார் பிறர்என்னை *
முத்தே! மணிமாணிக்கமே! முளைக்கின்ற
வித்தே! உன்னைஎங்ஙனம்நான்விடுகேனே!
1555 அத்தா அரியே என்று * உன்னை அழைக்க *
பித்தா என்று பேசுகின்றார் * பிறர் என்னை **
முத்தே மணி மாணிக்கமே * முளைக்கின்ற
வித்தே * உன்னை எங்ஙனம் நான் விடுகேனே 8
1555 attā ariye ĕṉṟu * uṉṉai azhaikka *
pittā ĕṉṟu pecukiṉṟār * piṟar ĕṉṉai **
mutte maṇi māṇikkame * mul̤aikkiṉṟa
vitte * uṉṉai ĕṅṅaṉam nāṉ viṭukeṉe-8

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1555. If I call you saying, “You are my lord. You are Hari, ” others mock me and say I am crazy. You are a pearl, a precious diamond, a tender shoot that sprouts up. How could I leave you, the Lord of Naraiyur?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அத்தா! அரியே! என்று அத்தனே! அரியே! என்று; உன்னை அழைக்க உன்னை நான் அழைக்க; பிறர் என்னை பிறர் என்னை; பித்தா என்று பித்தனென்று; பேசுகின்றார் பேசுகின்றார்கள்; முத்தே! மணி முத்தே! மணியே!; மாணிக்கமே! மாணிக்கமே!; முளைக்கின்ற வித்தே! முளைக்கின்ற வித்தே!; உன்னை எங்ஙனம் உன்னை எப்படி; நான் விடுகேனே நான் விடுவேன்

PT 7.1.9

1556 தூயாய்! சுடர்மாமதிபோல்உயிர்க்கெல்லாம் *
தாயாயளிக்கின்ற தண்தாமரைக்கண்ணா *
ஆயா! அலைநீருலகேழும் முன்னுண்ட
வாயா! * உனைஎங்ஙனம் நான்மறக்கேனே?
1556 தூயாய் சுடர் மா மதிபோல் * உயிர்க்கு எல்லாம் *
தாய் ஆய் அளிக்கின்ற * தண் தாமரைக் கண்ணா! **
ஆயா அலை நீர் உலகு ஏழும் * முன் உண்ட
வாயா * உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே 9
1556 tūyāy cuṭar mā matipol * uyirkku ĕllām *
tāy āy al̤ikkiṉṟa * taṇ tāmaraik kaṇṇā! **
āyā alai nīr ulaku ezhum * muṉ uṇṭa
vāyā * uṉṉai ĕṅṅaṉam nāṉ maṟakkeṉe-9

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1556. You are pure, you have cool lotus eyes, you are like the beautiful shining moon, and like a mother you give your love to all creatures. O cowherd, you swallowed all the worlds surrounded with seven ocean roaring with waves. How could I forget you, the Lord of Naraiyur?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூயாய்! சுடர் தூயவனே! ஒளியுள்ள; மா மதிபோல் குளிர்ந்த சந்திரன் போல்; உயிர்க்கு உயிரினங்களுக்கு; எல்லாம் எல்லாம்; தாய் ஆய் தாய் போன்று; அளிக்கின்ற அருள் புரிபவனே!; தண் தாமரை குளிர்ந்த தாமரைப்; கண்ணா பூப்போன்ற கண்ணா; ஆயா! கோபாலனே!; அலை நீர் அலைகடல் சூழ்ந்த; உலகு ஏழும் ஏழு உலகங்களையும்; முன் உண்ட வாயா! முன்பு உண்டவனே!; உன்னை எங்ஙனம் உன்னை எப்படி; நான் மறக்கேனே நான் மறப்பேன்

PT 7.1.10

1557 வண்டார்பொழில்சூழ் நறையூர்நம்பிக்கு * என்றும்
தொண்டாய்கலியன் ஒலிசெய்தமிழ்மாலை *
தொண்டீர்! இவைபாடுமின் பாடிநின்றாட *
உண்டேவிசும்பு உந்தமக்கு இல்லைதுயரே (2)
1557 ## வண்டு ஆர் பொழில் சூழ் * நறையூர் நம்பிக்கு * என்றும்
தொண்டு ஆய் * கலியன் ஒலிசெய் தமிழ் மாலை *
தொண்டீர் இவை பாடுமின் * பாடி நின்று ஆட *
உண்டே விசும்பு * உம் தமக்கு இல்லை துயரே 10
1557 ## vaṇṭu ār pŏzhil cūzh * naṟaiyūr nampikku * ĕṉṟum
tŏṇṭu āy * kaliyaṉ ŏlicĕy tamizh-mālai *
tŏṇṭīr ivai pāṭumiṉ * pāṭi niṉṟu āṭa *
uṇṭe vicumpu * um-tamakku illai tuyare-10

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1557. Kaliyan, the devotee of the god, composed a garland of musical Tamil pāsurams on him, the god of Thirunaraiyur surrounded by groves swarming with bees. O devotees, if you sing these pāsurams and dance, you will go to the spiritual world and your troubles will disappear.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டீர்! தொண்டர்களே!; வண்டு ஆர் வண்டுகள் நிறைந்த; பொழில் சூழ் சோலைகளால் சூழந்த; நறையூர் திருநறையூரிலிருக்கும்; நம்பிக்கு பெருமானுக்கு; என்றும் தொண்டு ஆய் என்றும் அடிமைபூண்டு; கலியன் திருமங்கையாழ்வார்; ஒலிசெய் அருளிச் செய்த; தமிழ் மாலை தமிழ்ப் பாசுரங்கள்; இவை பாடுமின் இவை பத்தும் பாடுங்கள்; பாடி நின்று ஆட அப்படி நின்று பாடி ஆட; உம் தமக்கு உங்களுக்கு; துயரே இல்லை துயரே இல்லை; உண்டே விசும்பு பரமபதம் நிச்சயம்