Your browser does not support the audio element.
audio
1438 தீதறுநிலத்தொடுஎரிகாலினொடு நீர்க்கெழுவிசும்புமவையாய் *
மாசறுமனத்தினொடுஉறக்கமொடிறக்கை யவையாயபெருமான் *
தாய்செறஉளைந்துதயிருண்டுகுடமாடு தடமார்வர், தகைசேர் *
நாதன்உறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம்நண்ணுமனமே! (2)
1439 உய்யும்வகையுண்டுசொனசெய்யில்உலககேழும்ஒழியாமைமுனநாள் *
மெய்யினளவேஅமுதுசெய்யவல ஐயனவன்மேவுநகர்தான் *
மையவரிவண்டுமதுவுண்டுகிளையோடு மலர்கிண்டி, அதன்மேல் *
நைவளம்நவிற்றுபொழில் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
1440 உம்பருலகேழுகடலேழுமலையேழும் ஒழியாமைமுனநாள் *
தம்பொன்வயிறாரளவுமுண்டு அவையுமிழ்ந்ததடமார்வர், தகைசேர் *
வம்புமலர்கின்றபொழில்பைம்பொன்வருதும்பிமணி கங்குல்வயல்சூழ் *
நம்பனுறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
1441 பிறையினொளியெயிறிலகமுறுகியெதிர்பொருதுமென வந்தஅசுரர் *
இறைகளவைநெறுநெறெனவெறியஅவர்வயிறழல நின்றபெருமான் *
சிறைகொள்மயில்குயில்பயிலமலர்களுகஅளிமுரல அடிகொள்நெடுமா *
நறைசெய்பொழில்மழைதவழும் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
1442 மூளஎரிசிந்திமுனிவெய்திஅமர்செய்துமென வந்தஅசுரர் *
தோளும்அவர்தாளுமுடியோடுபொடியாக நொடியாமளவெய்தான் *
வாளும்வரிவில்லும்வளையாழிகதைசங்கமிவை அங்கையுடையான் *
நாளும்உறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
1443 தம்பியொடுதாமொருவர்தன்துணைவி காதல்துணையாகமுனநாள் *
வெம்பியெரிகானகம்உலாவுமவர்தாம் இனிதுமேவுநகர்தான் *
கொம்புகுதிகொண்டுகுயில்கூவமயிலாலும் எழிலார்புறவுசேர் *
நம்பிஉறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
1444 தந்தைமனமுந்துதுயர்நந்தஇருள்வந்த விறல்நந்தன்மதலை *
எந்தையிவனென்றுஅமரர்கந்தமலர்கொண்டுதொழ நின்றநகர்தான் *
மந்தமுழவோசைமழையாகவெழுகார் மயில்களாடுபொழில்சூழ் *
நந்திபணிசெய்தநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
1445 எண்ணில்நினைவெய்தியினியில்லையிறையென்று முனியாளர்திருவார் *
பண்ணில்மலிகீதமொடுபாடிஅவராடலொடு கூடஎழிலார் *
மண்ணிலிதுபோலநகரில்லையென வானவர்கள்தாம்மலர்கள்தூய் *
நண்ணியுறைகின்றநகர் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
1446 வங்கமலிபௌவமதுமாமுகடினுச்சிபுக மிக்கபெருநீர் *
அங்கமழியாரவனதாணைதலைசூடும் அடியார்அறிதியேல் *
பொங்குபுனலுந்துமணிகங்குலிருள்சீறுமொளி எங்குமுளதால் *
நங்கள்பெருமானுறையும் நந்திபுரவிண்ணகரம் நண்ணுமனமே!
1447 நறைசெய்பொழில்மழைதவழும்நந்திபுரவிண்ணகரம் நண்ணியுறையும் *
உறைகொள்புகராழிசுரிசங்கமவை அங்கையுடையானை * ஒளிசேர்
கறைவளரும்வேல்வல்ல கலியனொலிமாலையிவை ஐந்துமைந்தும் *
முறையிலிவைபயிலவல அடியவர்கள்கொடுவினைகள் முழுதகலுமே. (2)