Your browser does not support the audio element.
audio
1298 தாவளந்துஉலகமுற்றும் தடமலர்ப்பொய்கைபுக்கு *
நாவளம்நவின்றிங்கேத்த நாகத்தின்நடுக்கந்தீர்த்தாய் *
மாவளம்பெருகி மன்னும்மறையவர்வாழும்நாங்கை *
காவளம்பாடிமேய கண்ணனே! களைகண்நீயே. (2)
1299 மண்ணிடந்துஏனமாகி மாவலிவலிதொலைப்பான் *
விண்ணவர்வேண்டச்சென்று வேள்வியில் குறையிரந்தாய் *
துண்ணெனமாற்றார்தம்மைத் தொலைத்தவர் நாங்கைமேய *
கண்ணனே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1300 உருத்தெழுவாலிமார்வில் ஓருகணை உருவவோட்டி *
கருத்துடைத்தம்பிக்கு இன்பக்கதிர்முடியரசு அளித்தாய் *
பருத்தெழுபலவும்மாவும் பழம்விழுந்தொழுகும்நாங்கை *
கருத்தனே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1301 முனைமுகத்துஅரக்கன்மாள முடிகள்பத்தறுத்துவீழ்த்து * ஆங்கு
அனையவற்கிளையவற்கே அரசளித்தருளினானே! *
சுனைகளில்கயல்கள்பாயச் சுரும்புதேன்நுகரும்நாங்கை *
கனைகழல்காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1302 படவரவுச்சிதன்மேல் பாய்ந்துபன்னடங்கள்செய்து *
மடவரல்மங்கைதன்னை மார்வகத்திருத்தினானே *
தடவரைதங்குமாடத் தகுபுகழ்நாங்கைமேய *
கடவுளே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1303 மல்லரையட்டுமாளக் கஞ்சனைமலைந்துகொன்று *
பல்லரசுஅவிந்துவீழப் பாரதப்போர்முடித்தாய்! *
நல்லரண்காவின்நீழல் நறைகமழ்நாங்கைமேய *
கல்லரண்காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1304 மூத்தவற்குஅரசுவேண்டி முன்புதூதெழுந்தருளி *
மாத்தமர்பாகன்வீழ மதகரிமருப்புஒசித்தாய் *
பூத்தமர்சோலையோங்கிப் புனல்பரந்தொழுகும்நாங்கை *
காத்தனே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1305 ஏவிளங்கன்னிக்காகி இமையவர்கோனைச்செற்று *
காவளம்கடிதிறுத்துக் கற்பகம்கொண்டுபோந்தாய்! *
பூவளம்பொழில்கள்சூழ்ந்த புரந்தரன்செய்தநாங்கை *
காவளம்பாடிமேய கண்ணனே! களைகண்நீயே.
1306 சந்தமாய்ச்சமயமாகிச் சமயவைம்பூதமாகி *
அந்தமாய்ஆதியாகி அருமறையவையும் ஆனாய்! *
மந்தமார்பொழில்கள்தோறும் மடமயிலாலும்நாங்கை *
கந்தமார்காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1307 மாவளம்பெருகி மன்னும்மறையவர்வாழும்நாங்கைக் *
காவளம்பாடிமேயகண்ணணைக்கலியன்சொன்ன *
பாவளம்பத்தும்வல்லார் பார்மிசைஅரசராகி *
கோவிளமன்னர்தாழக் குடைநிழல்பொலிவர்தாமே. (2)