PT 4.3.7

கஞ்சனைக் காய்ந்த காளையைக் காணலாம்

1274 வெஞ்சினக்களிறும்வில்லொடுமல்லும்
வெகுண்டிறுத்தடர்த்தவன்தன்னை *
கஞ்சனைக்காய்ந்தகாளையம்மானைக்
கருமுகில்திருநிறத்தவனை *
செஞ்சொல்நான்மறையோர்நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
அஞ்சனக்குன்றம்நின்றதொப்பானைக்
கண்டுகொண்டல்லல்தீர்ந்தேனே.
1274
VenchinakkaLiRum villodu mallum * VegundiRuththu adarththavaNn thannai *
kanchanaik kāyntha kāLaiyammānaik * karumugil thirun^iRaththavaNnai *
Chencholn^āNnmaRaiyOr nāngain^aNnNnaduvuL * ChemBoNnChey kOyiliNnuLLE *
anchanak kunRam ninRaThoppānaik * kaNduKoNdu_allaltheern^thEnE (4.3.7)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1274. Our dark cloud-colored lord, strong as a bull, who angrily destroyed the wresters and Kamsan with his arrows, and killed the cruel elephant Kuvalayābeedam, stays in Chemponseykoyil in Nāngai where reciters of the four eloquent Vedās live. I saw the divine one like a dark mountain in that temple and worshiped him and now all my troubles have gone away.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெம் சின கடும் கோபமுடைய குவலயாபீடம்; களிறும் என்னும் யானையை; வெகுண்டு சீறி முடித்தும்; வில்லொடு இறுத்து வில்லை முறித்தும்; மல்லும் மல்லர்களையும்; அடர்த்தவன் தன்னை முடித்தவனாய்; கஞ்சனை கம்ஸனை; காய்ந்த கோபித்து முடித்த; காளை அம்மானை யுவாவான எம்பெருமானை; கரு முகில் திரு கறுத்த காளமேகம் போன்ற; நிறத்தவனை நிறத்தவனை; செஞ்சொல் அழகிய இனிய சொற்களை உடைய; நான்மறையோர் வேதமோதும் வைதிகர்கள் வாழும்; நாங்கை நல் நடுவுள் திருநாங்கூரின் நடுவிலே; செம்பொன்செய் செம்பொன் செய் என்னும்; கோயிலின்உள்ளே கோயிலின் உள்ளே; அஞ்சனக் குன்றம் மையாலான ஒரு மலை; நின்றது ஒப்பானை போன்றுள்ளவனான பெருமானை; கண்டு கொண்டு பார்த்து அனுபவித்து; அல்லல் தீர்ந்தேனே துயர் தீர்ந்து உய்ந்தேன்
vem cruel; sinam having anger; kaLiRu kuvalayApeedam; veguNdum showing anger; vil bow; iRuththum broke; mallum wrestlers; adarththavan thannai one who tormented; kanjanai kamsan; kAyndha showing anger and killed; kALai young; ammAnai being the lord; karu blackish; mugil like a cloud; thiru niRaththavanai one who has the best divine form; anjanak kunRam a mountain of black pigment; ninRadhu oppAnai one who is shining as if it is standing; sem sol having beautiful (true) words; nAl maRaiyOr experts in four vEdhams; nAngai in thirunAngUr; nal naduvuL present in the good central location; sem pon sey kOyilin uLLE in the dhivyadhESam named sembonsey kOyil; kaNdu koNdu enjoyed with my eyes; allal sorrow; thIrndhEn eliminated