PT 4.3.8

வேங்கடவாணனே இக்கோயிலில் உள்ளான்

1275 அன்றியவாணனாயிரம்தோளும்
துணிய அன்றுஆழிதொட்டானை *
மின்திகழ்குடுமிவேங்கடமலைமேல்
மேவியவேதநல்விளக்கை *
தென்திசைத்திலதமனையவர்நாங்கைச்
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
மன்றதுபொலியமகிழ்ந்துநின்றானை
வணங்கிநான்வாழ்ந்தொழிந்தேனே.
1275 ## aṉṟiya vāṇaṉ āyiram tol̤um
tuṇiya * aṉṟu āzhi tŏṭṭāṉai *
miṉ tikazh kuṭumi veṅkaṭa malaimel *
meviya veta nal vil̤akkai **
tĕṉ ticait tilatam aṉaiyavar nāṅkaic *
cĕm pŏṉ cĕy koyiliṉul̤l̤e *
maṉṟu-atu pŏliya makizhntu niṉṟāṉai *
vaṇaṅki nāṉ vāzhntŏzhinteṉe-8

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1275. The lord, the light of the Vedās, who shines like lightning at the top of the Thriuvenkatam hills, and threw his discus and destroyed the thousand arms of the angry Bānasuran stays in the mandram happily in the Chemponseykoyil in Nāngai where Vediyars, the reciters of the Vedās, are like a thilagam for the southern land. I worshiped him and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்றிய கோபத்துடன் வந்த; வாணன் பாணாஸுரனின்; ஆயிரம் தோளும் ஆயிரம் தோள்களையும்; துணிய அன்று அன்று வெட்டி வீழ்த்திய; ஆழி சக்கரத்தை; தொட்டானை பிரயோகித்தவனும்; மின் திகழ் குடுமி ஒளிமிக்க சிகரத்தையுடைய; வேங்கட திருவேங்கடமலையின்; மலைமேல் மேவிய மேலிருப்பவனும்; வேத ஸ்வயம் பிரகாசமான வேதவிளக்காக; நல்விளக்கை இருப்பவனும்; தென் திசை தென்திசைக்கு; திலதம் திலகம் போன்ற; அனையவர் மஹான்கள் வாழ்கிற; நாங்கை திருநாங்கூரின்; செம்பொன்செய் செம்பொன் செய் என்னும்; கோயிலின்உள்ளே கோயிலின் உள்ளே; மன்று அது பாகவத கோஷ்டி; பொலிய பொலிவு பெறுவதைப்பார்த்து; மகிழ்ந்து நின்றானை மகிழ்ந்து நின்றானை; வணங்கி நான் வணங்கி தாஸனான நான்; வாழ்ந்தொழிந்தேனே வாழ்ந்து உய்ந்தேன்
anṛiya one who became angry (and fought); vāṇan bāṇāsuran-s; āyiram thŏl̤um thousand shoulders; thuṇiya to be severed and to fall on the ground; anṛu at that time; āzhi sudharṣana chakra; thottānai being the one who touched and launched; min radiance; thigazh shining; kudumi having peaks; vĕngada malai mĕl on thirumalā which is known as thiruvĕngadam; mĕviya one who eternally resides; vĕdham being the one who is revealed in vĕdham; nal distinguished; vil̤akkai one who is self-illuminous like a lamp; manṛu in the assembly (of bhāgavathas); adhu that assembly; poliya to become abundant; magizhndhu became joyful; ninṛānai one who is mercifully present; then thisai for the southern direction; thiladham anaiyavar the best among the brāhmaṇas who are shining like the thilak (vertical symbol) on the forehead; nāngai in thirunāngūr; sem pon sey kŏyilin ul̤l̤ĕ in the dhivyadhĕṣam named sembonsey kŏyil; vaṇangi surrendered; nān vāzhndhu ozhindhĕn ī became enlivened.