PT 4.3.6

கடலில் அணைகட்டியவனைக் கண்டேன்

1273 மல்லைமாமுந்நீரதர்படமலையால்
அணைசெய்துமகிழ்ந்தவன்தன்னை *
கல்லின்மீதியன்றகடிமதிளிலங்கை
கலங்க ஓர்வாளிதொட்டானை *
செல்வநான்மறையோர்நாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
அல்லிமாமலராள்தன்னொடும்அடியேன்
கண்டுகொண்டல்லல்தீர்ந்தேனே.
1273 mallai mā munnīr atarpaṭa * malaiyāl
aṇaicĕytu makizhntavaṉ-taṉṉai *
kalliṉmītu iyaṉṟa kaṭi matil̤ ilaṅkai
kalaṅka * or vāl̤i tŏṭṭāṉai **
cĕlva nāṉmaṟaiyor nāṅkai nal naṭuvul̤ *
cĕm pŏṉ cĕy koyiliṉul̤l̤e *
alli mā malarāl̤-taṉṉŏṭum aṭiyeṉ *
kaṇṭukŏṇṭu allal tīrnteṉe-6

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1273. Thirumāl who as Rāma built a bridge with stones, easily made a way over the wide ocean, went to Lankā, shot his arrows and destroyed the strong walls that surrounded it stays in Chemponseykoyil in Nāngai with his beloved Lakshmi where Vediyars recite the four rich Vedās. I, his slave, saw and worshiped him in that temple and all my troubles have gone away.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மல்லை மா செல்வம் மிக்க; முந்நீர் பெரிய கடலில்; அதர்பட பாதை உண்டாகும்படி; மலையால் மலையால்; அணைசெய்து அணைகட்டி; மகிழ்ந்தவன் தன்னை மகிழ்ந்தவனும்; கல்லின்மீது மலையின் மேலே; இயன்ற கட்டப்பட்ட; கடி மதிள் அரணான மதிளை உடைய; இலங்கை இலங்கை; கலங்க ஓர் வாளி சிதறும்படி ஒரு அம்பை; தொட்டானை எய்தவனுமான எம்பெருமானை; நான் நான்கு வேதங்களை; செல்வ செல்வமாகவுடைய; மறையோர் அந்தணர் வாழ்கிற; நாங்கை நல் திருநாங்கூரின்; நடுவுள் நடுவிலே; செம்பொன்செய் செம்பொன் செய் என்னும்; கோயிலின்உள்ளே கோயிலின் உள்ளே; அல்லி மா மலராள் தாமரையிலிருக்கும்; தன்னொடும் திருமகளோடு கூட; அடியேன் அடியேனான நான்; கண்டு அவனைப் பார்த்து; கொண்டு அனுபவித்து; அல்லல் தீர்ந்தேனே துயர் தீர்ந்து உய்ந்தேன்
mallai abundant; having wealth; munnīr ocean; adharpada to worship; malaiyāl by rocks; aṇai seydhu building a bridge; magizhndhavan thannai being the one who became joyful; kallin mīdhu on the mountain named thrikūtam; iyanṛa built; kadi protection; madhil̤ having fort; ilangai lankā; kalanga to become agitated; ŏr distinguished; vāl̤i arrow; thottānai one who touched and shot; selvam having wealth; nālmaṛaiyŏr brāhmaṇas who are learned in four vĕdhams, their; nāngai in thirunāngūr; nal naduvul̤ present in the good central location; sem pon sey kŏyilin ul̤l̤ĕ in the dhivyadhĕṣam named sembonsey kŏyil; alli having petals; best; malarāl̤ thannodum along with periya pirāttiyār who is residing on the lotus flower; adiyĕn ī, the servitor; kaṇdu koṇdu enjoyed with my eyes; allal sorrow; thīrndhĕn got to eliminate.