Chapter 3

Thirunāngur Thiruchempponseykoyil - (பேர் அணிந்து)

திருநாங்கூர்ச் செம்பொன்செய்கோயில்
Thirunāngur Thiruchempponseykoyil - (பேர் அணிந்து)
This is one of the Thirunangur Divya Desams. It is known as Sembonrangar Kovil. The Lord residing in this temple is known by several divine names, including Sembonrangar and Perarulalan.
இது திருநாங்கூர்த் திவ்விய தேசங்களுள் ஒன்று. செம்பொனரங்கர் கோயில் என்று இதனைக் கூறுவார்கள். இக்கோயிலில் இருக்கும் எம்பெருமானுக்குச் செம்பொனரங்கர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள் உள்ளன.
Verses: 1268 to 1277
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will rule the world surrounded by sounding oceans under a white umbrella and become gods.
  • PT 4.3.1
    1268 ## பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் *
    பேர் அருளாளன் எம் பிரானை *
    வார் அணி முலையாள் மலர் மகளோடு *
    மண் மகளும் உடன் நிற்ப **
    சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள் *
    செம்பொன்செய்கோயிலினுள்ளே *
    கார் அணி மேகம் நின்றது ஒப்பானைக் *
    கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே 1
  • PT 4.3.2
    1269 பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னைப் *
    பேதியா இன்ப வெள்ளத்தை *
    இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை *
    ஏழ் இசையின் சுவை தன்னை **
    சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள் *
    செம்பொன்செய்கோயிலினுள்ளே *
    மறைப் பெரும் பொருளை வானவர் கோனை *
    கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே 2
  • PT 4.3.3
    1270 திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும் *
    செழு நிலத்து உயிர்களும் மற்றும் *
    படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை *
    பங்கயத்து அயன் அவன் அனைய **
    திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள் *
    செம்பொன்செய்கோயிலினுள்ளே *
    கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன் *
    கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே 3
  • PT 4.3.4
    1271 வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி *
    மண் அளவிட்டவன் தன்னை *
    அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க *
    அலை கடல் துயின்ற அம்மானை *
    திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள் *
    செம்பொன்செய்கோயிலினுள்ளே *
    உயர் மணி மகுடம் சூடி நின்றானைக் *
    கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே 4
  • PT 4.3.5
    1272 தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே
    என்று * சென்று அடைந்தவர் தமக்கு *
    தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும் *
    தயரதன் மதலையை சயமே **
    தே மலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள் *
    செம் பொன் செய் கோயிலினுள்ளே *
    காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன் *
    கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே 5
  • PT 4.3.6
    1273 மல்லை மா முந்நீர் அதர்பட * மலையால்
    அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை *
    கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை
    கலங்க * ஓர் வாளி தொட்டானை **
    செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் *
    செம் பொன் செய் கோயிலினுள்ளே *
    அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன் *
    கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே 6
  • PT 4.3.7
    1274 வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும் *
    வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை *
    கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானைக் *
    கரு முகில் திரு நிறத்தவனை **
    செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் *
    செம் பொன் செய் கோயிலினுள்ளே *
    அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் *
    கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே 7
  • PT 4.3.8
    1275 ## அன்றிய வாணன் ஆயிரம் தோளும்
    துணிய * அன்று ஆழி தொட்டானை *
    மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல் *
    மேவிய வேத நல் விளக்கை **
    தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச் *
    செம் பொன் செய் கோயிலினுள்ளே *
    மன்று அது பொலிய மகிழ்ந்து நின்றானை *
    வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே 8
  • PT 4.3.9
    1276 களங்கனி வண்ணா கண்ணனே என் தன் *
    கார் முகிலே என நினைந்திட்டு *
    உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள் *
    உள்ளத்துள் ஊறிய தேனை **
    தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள் *
    செம் பொன் செய் கோயிலினுள்ளே *
    வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை *
    வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே 9
  • PT 4.3.10
    1277 ## தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள் *
    செம் பொன் செய் கோயிலினுள்ளே *
    வானவர் கோனைக் கண்டமை சொல்லும் *
    மங்கையார் வாள் கலிகன்றி *
    ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும் *
    ஒழிவு இன்றிக் கற்று வல்லார்கள் *
    மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு *
    வானவர் ஆகுவர் மகிழ்ந்தே 10