Your browser does not support the audio element.
audio
1268 பேரணிந்துஉலகத்தவர்தொழுதேத்தும்
பேரருளாளன்எம்பிரானை *
வாரணிமுலையாள்மலர்மகளோடு
மண்மகளும்உடன்நிற்ப *
சீரணிமாடநாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
காரணிமேகம்நின்றதொப்பானைக்
கண்டுகொண்டுஉய்ந்தொழிந்தேனே. (2)
1269 பிறப்பொடுமூப்பொன்றில்லவன்தன்னைப்
பேதியாஇன்பவெள்ளத்தை *
இறப்பெதிர்காலக்கழிவுமானானை
ஏழிசையின்சுவைதன்னை *
சிறப்புடைமறையோர்நாங்கைநன்னடுவுள்
மறைப்பெரும்பொருளைவானவர்கோனைக்
கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.
1270 திடவிசும்பெரிநீர்திங்களும்சுடரும்
செழுநிலத்துயிர்களும்மற்றும் *
படர்பொருள்களுமாய்நின்றவன்றன்னை *
பங்கயத்தயனவனனைய *
திடமொழிமறையோர்நாங்கைநன்னடுவுள்
கடல்நிறவண்ணன்றன்னைநானடியேன்
கண்டுகொண்டுஉய்ந்தொழிந்தேனே.
1271 வசையறுகுறளாய்மாவலிவேள்வி
மண்ணளவிட்டவன்தன்னை *
அசைவறுஅமரரடியிணைவணங்க
அலைகடல்துயின்றஅம்மானை *
திசைமுகனனையோர்நாங்கைநன்னடுவுள்
உயர்மணிமகுடம்சூடிநின்றானைக்
கண்டுகொண்டுய்ந்தொழிந்தேனே.
1272 தீமனத்தரக்கர்திறலழித்தவனே!
என்று சென்றடைந்தவர்தமக்கு *
தாய்மனத்திரங்கிஅருளினைக்கொடுக்கும்
தயரதன்மதலையை, சயமே *
தேமலர்ப்பொழில்சூழ்நாங்கைநன்னடுவுள்
காமனைப்பயந்தான்தன்னைநானடியேன்
1273 மல்லைமாமுந்நீரதர்படமலையால்
அணைசெய்துமகிழ்ந்தவன்தன்னை *
கல்லின்மீதியன்றகடிமதிளிலங்கை
கலங்க ஓர்வாளிதொட்டானை *
செல்வநான்மறையோர்நாங்கைநன்னடுவுள்
அல்லிமாமலராள்தன்னொடும்அடியேன்
கண்டுகொண்டல்லல்தீர்ந்தேனே.
1274 வெஞ்சினக்களிறும்வில்லொடுமல்லும்
வெகுண்டிறுத்தடர்த்தவன்தன்னை *
கஞ்சனைக்காய்ந்தகாளையம்மானைக்
கருமுகில்திருநிறத்தவனை *
செஞ்சொல்நான்மறையோர்நாங்கைநன்னடுவுள்
அஞ்சனக்குன்றம்நின்றதொப்பானைக்
1275 அன்றியவாணனாயிரம்தோளும்
துணிய அன்றுஆழிதொட்டானை *
மின்திகழ்குடுமிவேங்கடமலைமேல்
மேவியவேதநல்விளக்கை *
தென்திசைத்திலதமனையவர்நாங்கைச்
மன்றதுபொலியமகிழ்ந்துநின்றானை
வணங்கிநான்வாழ்ந்தொழிந்தேனே.
1276 களங்கனிவண்ணா! கண்ணணே! என்தன்
கார்முகிலே! எனநினைந்திட்டு *
உளங்கனிந்திருக்கும்அடியவர்தங்கள்
உள்ளத்துள்ஊறியதேனை *
தெளிந்தநான்மறையோர்நாங்கைநன்னடுவுள்
வளங்கொள்பேரின்பம்மன்னிநின்றானை
1277 தேனமர்சோலைநாங்கைநன்னடுவுள்
வானவர்கோனைக்கண்டமைசொல்லும்
மங்கையார்வாட்கலிகன்றி *
ஊனமில்பாடல்ஒன்பதோடொன்றும்
ஒழிவின்றிக்கற்றுவல்லார்கள் *
மானவெண்குடைக்கீழ்வையகம்ஆண்டு
வானவராகுவர்மகிழ்ந்தே.