I Saw Tirumāl in the Golden Temple
திருமாலைச் செம்பொன்செய் கோயிலில் கண்டேன்
1268 பேரணிந்துஉலகத்தவர்தொழுதேத்தும்
பேரருளாளன்எம்பிரானை *
வாரணிமுலையாள்மலர்மகளோடு
மண்மகளும்உடன்நிற்ப *
சீரணிமாடநாங்கைநன்னடுவுள்
செம்பொன்செய்கோயிலினுள்ளே *
காரணிமேகம்நின்றதொப்பானைக்
கண்டுகொண்டுஉய்ந்தொழிந்தேனே. (2)