PT 4.3.2

This Temple is the Abode of the King of the Celestials

வானவர்கோன் வாழ்விடம் இக்கோயில்

1269 பிறப்பொடுமூப்பொன்றில்லவன்தன்னைப்

பேதியாஇன்பவெள்ளத்தை *

இறப்பெதிர்காலக்கழிவுமானானை

ஏழிசையின்சுவைதன்னை *

சிறப்புடைமறையோர்நாங்கைநன்னடுவுள்

செம்பொன்செய்கோயிலினுள்ளே *

மறைப்பெரும்பொருளைவானவர்கோனைக்

கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.

Text size