PT 4.3.9

The Honey that Springs Forth in the Hearts of Devotees

அடியவரின் உள்ளத்தில் ஊறும் தேன்

1276 களங்கனிவண்ணா! கண்ணணே! என்தன்

கார்முகிலே! எனநினைந்திட்டு *

உளங்கனிந்திருக்கும்அடியவர்தங்கள்

உள்ளத்துள்ஊறியதேனை *

தெளிந்தநான்மறையோர்நாங்கைநன்னடுவுள்

செம்பொன்செய்கோயிலினுள்ளே *

வளங்கொள்பேரின்பம்மன்னிநின்றானை

வணங்கிநான்வாழ்ந்தொழிந்தேனே.

Text size