Chapter 2
The Rākshasas sing, dance and praise Lord Rama - (இரக்கம் இன்றி)
This section is about Lord Rama, the son of Emperor Dasaratha. (Just as a dance is performed to the rhythm of a defeat) It is an honor for the devotees of the Lord to sing of His victories: It is a greater honor for those who consider the Lord their enemy to sing of His victories. The demons defeated in battle sing of Lord Rama's victory and seek refuge + Read more
சக்கரவர்த்தி திருமகன் விஷயம். (தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்து) பகவானின் அடியார்கள் அவனது வெற்றியைப் பாடுவது சிறப்பு: பகவானைத் தமக்கு எதிரியாக நினைப்பவர்கள் அவனது வெற்றியைப் பாடுவது பெருஞ் சிறப்பு. போர்க் களத்தில் தோல்வியுற்ற அரக்கர்கள் இராமபிரானின் வெற்றியைப் பாடி அபயம் வேண்டுதல்போல் அமைந்தது இப்பகுதி). தோற்ற ராக்ஷஸர் பாசுரத்தாலே ராம விஜயத்தைப் பேசி அனுபவிக்கிறார்-என்றார் பெரியவாச்சான் பிள்ளை.
Verses: 1858 to 1867
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not get affected by the results of karma and go to Vaikuṇṭam
- PT 10.2.1
1858 ## இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை *
இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர் *
பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன் *
பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்? **
குரக்கு நாயகர்காள் இளங்கோவே *
கோல வல் வில் இராமபிரானே *
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை * நாங்கள்
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 1 - PT 10.2.2
1859 பத்து நீள் முடியும் அவற்று இரட்டிப் *
பாழித் தோளும் படைத்தவன் செல்வம் *
சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் *
செய்வது ஒன்று அறியா அடியோங்கள் **
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் *
ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் *
அத்த எம் பெருமான் எம்மைக் கொல்லேல் *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 2 - PT 10.2.3
1860 தண்டகாரணியம் புகுந்து * அன்று
தையலைத் தகவிலி எம் கோமான் *
கொண்டுபோந்து கெட்டான் * எமக்கு இங்கு ஓர்
குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே **
பெண்டிரால் கெடும் இக் குடி தன்னைப் *
பேசுகின்றது என்? தாசரதீ * உன்
அண்டவாணர் உகப்பதே செய்தாய் *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 3 - PT 10.2.4
1861 எஞ்சல் இல் இலங்கைக்கு இறை * எம் கோன்
தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே *
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று *
நங்கையை அவன் தம்பியே சொன்னான் **
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் *
வேரி வார் பொழில் மா மயில் அன்ன *
அஞ்சு அல் ஓதியைக் கொண்டு நடமின் *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 4 - PT 10.2.5
1862 செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் *
சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து *
வம்பு உலாம் கடி காவில் சிறையா
வைத்ததே * குற்றம் ஆயிற்றுக் காணீர் **
கும்பனோடு நிகும்பனும் பட்டான் *
கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி *
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 5 - PT 10.2.6
1863 ஓத மா கடலைக் கடந்து ஏறி *
உயர்கொள் மாக் கடி காவை இறுத்து *
காதல் மக்களும் சுற்றமும் கொன்று *
கடி இலங்கை மலங்க எரித்து **
தூது வந்த குரங்குக்கே * உங்கள்
தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே *
ஆதர் நின்று படுகின்றது அந்தோ *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 6 - PT 10.2.7
1864 தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று *
தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல் *
மாழை மான் மட நோக்கியை விட்டு *
வாழகில்லா மதி இல் மனத்தானை **
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை *
எங்களை ஒழியக் கொலையவனை *
சூழுமா நினை மா மணி வண்ணா *
சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 7 - PT 10.2.8
1865 மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா *
அம் கயல் கண்ணினார்கள் இருப்ப *
தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து *
தஞ்சமே சில தாபதர் என்று **
புனம்கொள் மென் மயிலைச் சிறைவைத்த *
புன்மையாளன் நெஞ்சில் புக எய்த *
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 8 - PT 10.2.9
1866 புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில் *
பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின் *
சரங்களே கொடிது ஆய் அடுகின்ற *
சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம் **
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே *
இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா *
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் *
கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 9 - PT 10.2.10
1867 ## அங்கு அவ் வானவர்க்கு ஆகுலம் தீர *
அணி இலங்கை அழித்தவன் தன்னை *
பொங்கு மா வலவன் கலிகன்றி *
புகன்ற பொங்கத்தம் கொண்டு ** இவ் உலகில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் *
இம்மையே இடர் இல்லை * இறந்தால்
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்மின் *
சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 10