PT 10.1.8

திருமாலிருஞ்சோலையும் திருவிண்ணகரும்

1855 பத்தராவியைப் பால்மதியை * அணித்
தொத்தை மாலிருஞ்சோலைத்தொழுதுபோய் *
முத்தினைமணியை மணிமாணிக்க
வித்தினை * சென்று விண்ணகர்க்காண்டுமே. (2)
1855 pattar āviyaip * pāl matiyai * aṇit
tŏttai * māliruñcolait tŏzhutu poy **
muttiṉai maṇiyai * maṇi māṇikka
vittiṉai * cĕṉṟu viṇṇakark kāṇṭume-8

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1855. He, life for all his devotees, shines like the white moon. I will go and worship the god of Thirumālirunjolai, the seed of all creatures who is adorned with precious jewels, a pearl, a diamond and a ruby. He stays in Thiruvinnagar and I will go there and see him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பத்தர் ஆவியை பக்தர்களுக்கு ஆத்மாவாய்; பால் களங்கமற்ற; மதியை சந்திரனை போன்றவனாய்; அணி தொத்தை பூ மாலை அணிந்தவனாய்; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; தொழுது போய் சென்று பணிந்து வணங்கினோம்; முத்தினை முத்துப்போன்றவனாய்; மணியை நீலமணிபோன்றவனாய்; மணி சிறந்த; மாணிக்க மாணிக்கம் போன்றவனாய்; வித்தினை ஜகத்காரண பூதனுமானவனை; விண்ணகர்ச் சென்று திருவிண்ணகர்ச் சென்று; காண்டுமே வணங்குவோம்