Chapter 1

Praise of eighteen Thiruppathis - (ஒரு நல்)

பதினென் திருப்பதிகள்
Praise of eighteen Thiruppathis - (ஒரு நல்)
Once, the āzhvār had a desire to attain Paramapadam (the eternal abode). At that time, the Lord directed his attention to several Divya Desams in this world, encouraging him to experience them. After visiting many holy places and performing Mangalasasanam, the āzhvār's desire for Paramapadam resurfaced. Now, as if telling her friends she is leaving + Read more
முன் ஒருகால் இவ்வாழ்வாருக்குப் பரமபதம் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அப்போது பகவான் இவ்வுலகில் உள்ள சில திவ்வியதேசங்களைக் காட்டி அவற்றை அனுபவிக்கும்படி ஆழ்வாரின் எண்ணத்தைத் திருப்பினான். அதன் பிறகு பல திருப்பதிகளுக்கு எழுந்தருளி ஆழ்வார் மங்களாசாஸனம் செய்து முடித்தார். இப்போது + Read more
Verses: 1848 to 1857
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become happy
  • PT 10.1.1
    1848 ## ஒரு நல் சுற்றம் * எனக்கு உயிர் ஒண் பொருள் *
    வரும் நல் தொல் கதி * ஆகிய மைந்தனை **
    நெருநல் கண்டது * நீர்மலை இன்று போய் *
    கரு நெல் சூழ் * கண்ணமங்கையுள் காண்டுமே 1
  • PT 10.1.2
    1849 ## பொன்னை மா மணியை * அணி ஆர்ந்தது ஓர்
    மின்னை * வேங்கடத்து உச்சியில் கண்டு போய் **
    என்னை ஆளுடை ஈசனை * எம்பிரான்
    தன்னை * யாம் சென்று காண்டும் * தண்காவிலே 2
  • PT 10.1.3
    1850 வேலை ஆல் இலைப் * பள்ளி விரும்பிய *
    பாலை ஆர் அமுதத்தினைப் * பைந் துழாய் **
    மாலை ஆலியில் * கண்டு மகிழ்ந்து போய் *
    ஞாலம் உன்னியைக் காண்டும் * நாங்கூரிலே 3
  • PT 10.1.4
    1851 துளக்கம் இல் சுடரை * அவுணன் உடல்
    பிளக்கும் மைந்தனைப் * பேரில் வணங்கிப் போய் **
    அளப்பு இல் ஆர் அமுதை * அமரர்க்கு அருள்
    விளக்கினை * சென்று வெள்ளறைக் காண்டுமே 4
  • PT 10.1.5
    1852 சுடலையில் * சுடு நீறன் அமர்ந்தது ஓர் *
    நடலை தீர்த்தவனை * நறையூர்க் கண்டு ** என்
    உடலையுள் புகுந்து * உள்ளம் உருக்கி உண் *
    விடலையைச் சென்று காண்டும் * மெய்யத்துள்ளே 5
  • PT 10.1.6
    1853 வானை ஆர் அமுதம் * தந்த வள்ளலை *
    தேனை நீள் வயல் * சேறையில் கண்டு போய் **
    ஆனை வாட்டி அருளும் * அமரர் தம்
    கோனை * யாம் குடந்தைச் சென்று காண்டுமே 6
  • PT 10.1.7
    1854 கூந்தலார் மகிழ் * கோவலன் ஆய் * வெண்ணெய்
    மாந்து அழுந்தையில் * கண்டு மகிழ்ந்து போய் **
    பாந்தள் பாழியில் * பள்ளி விரும்பிய *
    வேந்தனைச் சென்று காண்டும் * வெஃகாவுளே 7
  • PT 10.1.8
    1855 பத்தர் ஆவியைப் * பால் மதியை * அணித்
    தொத்தை * மாலிருஞ்சோலைத் தொழுது போய் **
    முத்தினை மணியை * மணி மாணிக்க
    வித்தினை * சென்று விண்ணகர்க் காண்டுமே 8
  • PT 10.1.9
    1856 கம்ப மா களிறு * அஞ்சிக் கலங்க * ஓர்
    கொம்பு கொண்ட * குரை கழல் கூத்தனை **
    கொம்பு உலாம் பொழில் * கோட்டியூர்க் கண்டு போய் *
    நம்பனைச் சென்று காண்டும் நாவாயுளே 9
  • PT 10.1.10
    1857 ## பெற்ற மாளியைப் * பேரில் மணாளனை *
    கற்ற நூல் * கலிகன்றி உரைசெய்த **
    சொல் திறம் * இவை சொல்லிய தொண்டர்கட்கு *
    அற்றம் இல்லை * அண்டம் அவர்க்கு ஆட்சியே 10