PT 1.4.5

கண்ணபிரானே பதரியில் உள்ளான்

982 பேயிடைக்கிருந்துவந்தமற்றவள்தன் *
பெருமுலைசுவைத்திட *
பெற்ற தாயிடைக்கிருத்தலஞ்சுவனென்று தளர்ந்திட * வளர்ந்தஎன்தலைவன் **
சேய்முகட்டுச்சியண்டமும்சுமந்த *
செம்பொன்செய்விலங்கலிலிலங்கு *
வாய்முகட்டிழிந்தகங்கையின்கரைமேல் *
வதரியாச்சிராமத்துள்ளானே
PT.1.4.5
982 pey iṭaikku iruntu vanta maṟṟu aval̤ taṉ * pĕru mulai cuvaittiṭa * pĕṟṟa
tāy iṭaikku iruttal añcuvaṉ ĕṉṟu tal̤arntiṭa * val̤arnta ĕṉ talaivaṉ **
cey mukaṭṭu ucci aṇṭamum cumanta * cĕmpŏṉ cĕy vilaṅkalil ilaṅku *
vāy mukaṭṭu izhinta kaṅkaiyiṉ karaimel * vatari āccirāmattu ul̤l̤āṉe (5)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

982. Once, He drank from the breast of Pūthanā, the demoness who came disguised as a mother. Seeing this, Yaśodā, His real mother, trembled in fear and said, “I won’t let Him sit on anyone’s lap again.” That Lord, who grew up with such tender care, now stands atop golden Mount Meru, from where the vast Ganga flows down. He lives there still, at Badarikāśramam, on her sacred banks.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வந்த பேய் தாய் போல் வந்த பூதனையின்; இடைக்கு இருந்து இடுப்பிலிருந்து கொண்டு; மற்று அவள் தன் அவளுடைய; பெரு முலை பெரிய மார்பகத்தை; சுவைத்திட பெற்ற சுவைத்திட; தாய் அதைக்கண்ட யசோதையானவள்; இடைக்கு நான் இனி இவனை இடுப்பிலே; இருத்தல் எடுத்துக் கொள்ள; அஞ்சுவன் என்று அஞ்சுகிறேன் என்று; தளர்ந்திட வளர்ந்த பரிந்து வளர்ந்தவனான; என் தலைவன் எம்பெருமான்; சேய் முகட்டு உயர்ந்த சிகரத்தின்; உச்சி உச்சியிலே; அண்டமும் சுமந்த அண்டத்தைச் சுமக்கிற; செம்பொன் செய் செம்பொன்னாலான; விலங்கலில் மேரு பர்வதத்திலே; இலங்கு விளங்குகின்ற; வாய் விசாலமான; முகட்டு சிகரத்தில் நின்று; இழிந்த ப்ரவஹிக்கின்ற; கங்கையின் கரை மேல் கங்கையின் கரை மேல்; வதரி ஆச்சிரமத்து பதரிகாச்ரமத்திலே; உள்ளானே உள்ளான்
vandha one who arrived like mother; pĕy pūthanā-s; idaikku irundhu staying on her lap; maṝu further; aval̤ than her; peru mulai large bosoms; suvaiththida consumed;; peṝa thāy yaṣŏdhāp pirātti who is his real mother; idaikku on (pūthanā-s) lap; iruththal staying firmly; anjuvan ī am scared; enṛu saying in this manner; thal̤arndhida feeling ashamed; val̤arndha one who mercifully grew; en thalaivan my lord; sĕy mugadu tall peak-s; uchchi atop; aṇdam oval shaped universe; sumandha holding; sem pon sey vilangalil on the mĕru mountain which is made of reddish gold; ilangu shining; vāy spacious; mugadu from the peak; izhindhu falling down; gangaiyin karaimĕl on the banks of gangā; vadhariyāchchirāmaththu ul̤l̤ānĕ one who is residing in ṣrī badharikāṣramam