PT 1.4.6

ஏழு காளைகளை அழித்தவன் வாழுமிடம் பதரி

983 தேரணங்கல்குல்செழுங்கையற்கண்ணி
திறத்துஒருமறத்தொழில் புரிந்து *
பாரணங்கிமிலேறேழுமுன்னடர்த்த
பனிமுகில்வண்ணன் எம்பெருமான் *
காரணந்தன்னால்கடும்புனல்கயத்த
கருவரைபிளவெழக்குத்தி *
வாரணங்கொணர்ந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
PT.1.4.6
983 ter aṇaṅku alkul cĕzhuṅ kayal kaṇṇi * tiṟattu ŏru maṟat tŏzhil purintu *
pār aṇaṅku imil eṟu ezhum muṉ aṭartta * paṉi mukil vaṇṇaṉ ĕm pĕrumāṉ **
kāraṇam- taṉṉāl kaṭum puṉal kayatta * karu varai pil̤avu ĕzhak kutti *
vāraṇam kŏṇarnta kaṅkaiyiṉ karaimel * vatari āccirāmattu ul̤l̤āṉe-6 **

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

983. Once, to win Nappinnai, the lady with a slender waist and fish-like eyes, He tamed seven fierce bulls in one bold act, frightening all who watched. My Lord, who is cloud-dark in form, now lives in Badarikāśramam, on the banks of the sacred Ganga, who splits the mountains and brings even elephants in her wild course because of Bhagiratha’s penance.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேர் அணங்கு தேர்போன்று அழகிய; அல்குல் இடையையுடையவளும்; செழுங் கயல் அழகிய கயல்விழியாளான; கண்ணி நப்பின்னைக்காக; திறத்து ஒரு கோபம் மிக்க; மற தொழில் புரிந்து செயலைச்செய்து; பாரணங்கு அனைவரும் பயப்படும்படியான; இமில் முசுப்பையுடைய; ஏறு எழும் ஏழு எருதுகளையும்; முன் அடர்த்த அடக்கின அழித்த; பனி முகில் குளிர்ந்த மேகம்போன்ற; வண்ணன் நிறத்தையுடைய; எம் பெருமான் எம் பெருமான்; காரணம் தன்னால் பகீரதப்ரயத்தினத்தால்; கடும் புனல் கயத்த வேகமாக ஓடிவரும் பாகீரதி; கரு வரை பிளவு மலைகள் பிளவுபட; வாரணம் யானைகளை; கொணர்ந்த தள்ளிக் கொண்டு; கங்கையின் கரை மேல் கங்கையின் கரை மேல்; வதரி ஆச்சிரமத்து உள்ளானே பதரிகாச்ரமத்திலே உள்ளான்
mun Previously; thĕr chariot wheel; aṇangu will be a match if tried very hard; algul a girl having waist region; sezhu beautiful; kayal like a kayal fish; kaṇṇi thiṛaththu for nappinnaip pirātti who is having eyes; maṛam angry; oru thozhil an action; purindhu did; pār residents of earth; aṇangu to suffer; imil having humps; ĕṛu ĕzhum the seven bulls; adarththa one who killed; pani cool; mugil like a cloud; vaṇṇan having divine complexion; emperumān my lord; kāraṇam thannāl due to bhagīratha-s penance; kadu having great speed; punal kayaththa stopping the water; karu varai huge mountain; pil̤avu ezha to blast; kuththi piercing; vāraṇam the elephants (which are present there); koṇarndha which brought along and falling; gangaiyin karai mĕl on the banks of gangā; vadhariyāchchirāmaththu ul̤l̤ānĕ one who is residing in ṣrī badharikāṣramam