Chapter 4

Thiruvadariyāchiramam (Badrinath) - (ஏனம் முன்)

திருவதரி ஆச்சிரமம்
Thiruvadariyāchiramam (Badrinath) - (ஏனம் முன்)
Badrikashram is referred to as Vadarikashram by the āzhvār. Previously, he praised the mountain; in this, he speaks of the greatness of Nara-Narayana Perumal. Our Lord incarnated as Nara and Narayana. Badrikashram is the place where Narayana, the Guru, taught the sacred Thirumantra to Nara, the disciple, for his well-being.
பதரிகாச்சிரமம் என்பதை வதரியாச்சிரமம் என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார். முன்பு மலையை வணங்கினார்; இதில் நரநாரயணப் பெருமானின் பெருமைகளைக் கூறுகிறார். எம் பெருமான் நர நாராயணணாக அவதரித்தான். நாராயணனாகிய குரு நரனென்னும் சிஷ்யனுக்கு நலம் தரும் சொல்லாகிய திருமந்திரத்தை உபதேசித்த இடம் பதரிகாச்சிரமம்.
Verses: 978 to 987
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: தக்கராகம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
  • PT 1.4.1
    978 ## ஏனம் முன் ஆகி இரு நிலம் இடந்து * அன்று இணை அடி இமையவர் வணங்க *
    தானவன் ஆகம் தரணியில் புரளத் * தடஞ் சிலை குனித்த என் தலைவன் **
    தேன் அமர் சோலைக் கற்பகம் பயந்த * தெய்வ நல் நறு மலர் கொணர்ந்து *
    வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே (1) *
  • PT 1.4.2
    979 கானிடை உருவைச் சுடு சரம் துரந்து * கண்டு முன் கொடுந் தொழில் உரவோன் *
    ஊன் உடை அகலத்து அடு கணை குளிப்ப * உயிர் கவர்ந்து உகந்த எம் ஒருவன் **
    தேன் உடைக் கமலத்து அயனொடு தேவர் * சென்று சென்று இறைஞ்சிட * பெருகு
    வானிடை முது நீர்க் கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே (2)
  • PT 1.4.3
    980 இலங்கையும் கடலும் அடல் அரும் துப்பின் * இரு நிதிக்கு இறைவனும் * அரக்கர்
    குலங்களும் கெட முன் கொடுந் தொழில் புரிந்த கொற்றவன் * கொழுஞ் சுடர் சுழன்ற **
    விலங்கலில் உரிஞ்சி மேல்நின்ற விசும்பில் * வெண் துகில் கொடி என விரிந்து *
    வலம் தரு மணி நீர்க் கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே (3)
  • PT 1.4.4
    981 துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே! * தொழுது எழு தொண்டர்கள் தமக்கு *
    பிணி ஒழித்து அமரர் பெரு விசும்பு அருளும் * பேர் அருளாளன் எம் பெருமான் **
    அணி மலர்க் குழலார் அரம்பையர் துகிலும் * ஆரமும் வாரி வந்து * அணி நீர்
    மணி கொழித்து இழிந்த கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிரமத்து உள்ளானே (4)
  • PT 1.4.5
    982 பேய் இடைக்கு இருந்து வந்த மற்று அவள் தன் * பெரு முலை சுவைத்திட * பெற்ற
    தாய் இடைக்கு இருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட * வளர்ந்த என் தலைவன் **
    சேய் முகட்டு உச்சி அண்டமும் சுமந்த * செம்பொன் செய் விலங்கலில் இலங்கு *
    வாய் முகட்டு இழிந்த கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே (5)
  • PT 1.4.6
    983 தேர் அணங்கு அல்குல் செழுங் கயல் கண்ணி * திறத்து ஒரு மறத் தொழில் புரிந்து *
    பார் அணங்கு இமில் ஏறு ஏழும் முன் அடர்த்த * பனி முகில் வண்ணன் எம் பெருமான் **
    காரணம் தன்னால் கடும் புனல் கயத்த * கரு வரை பிளவு எழக் குத்தி *
    வாரணம் கொணர்ந்த கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே 6 **
  • PT 1.4.7
    984 வெம் திறல் களிறும் வேலைவாய் அமுதும் * விண்ணொடு விண்ணவர்க்கு அரசும் *
    இந்திரற்கு அருளி எமக்கும் ஈந்தருளும் * எந்தை எம் அடிகள் எம் பெருமான் **
    அந்தரத்து அமரர் அடி இணை வணங்க * ஆயிரம் முகத்தினால் அருளி *
    மந்தரத்து இழிந்த கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே 7 **
  • PT 1.4.8
    985 மான் முனிந்து ஒரு கால் வரி சிலை வளைத்த மன்னவன் * பொன் நிறத்து உரவோன் *
    ஊன் முனிந்து அவனது உடல் இரு பிளவா * உகிர் நுதி மடுத்து ** அயன் அரனைத்
    தான் முனிந்து இட்ட * வெம் திறல் சாபம் தவிர்த்தவன் * தவம்புரிந்து உயர்ந்த
    மா முனி கொணர்ந்த கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே 8 **
  • PT 1.4.9
    986 கொண்டல் மாருதங்கள் குல வரை தொகு நீர்க் * குரை கடல் உலகு உடன் அனைத்தும் *
    உண்ட மா வயிற்றோன் ஒண் சுடர் ஏய்ந்த * உம்பரும் ஊழியும் ஆனான் **
    அண்டம் ஊடு அறுத்து அன்று அந்தரத்து இழிந்து * அங்கு அவனியாள் அலமர * பெருகும்
    மண்டு மா மணி நீர்க் கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிராமத்து உள்ளானே 9 **
  • PT 1.4.10
    987 ## வரும் திரை மணி நீர்க் கங்கையின் கரைமேல் * வதரி ஆச்சிரமத்து உள்ளானை *
    கருங் கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் * கலியன் வாய் ஒலிசெய்த பனுவல் **
    வரம்செய்த ஐந்தும் ஐந்தும் வல்லார்கள் * வானவர் உலகு உடன் மருவி *
    இருங் கடல் உலகம் ஆண்டு வெண் குடைக் கீழ் * இமையவர் ஆகுவர் தாமே 10 **