Your browser does not support the audio element.
audio
443 நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து * எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள்! காலம்பெறஉய்யப்போமின் *
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் *
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2)
444 சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றி *
வைத்தஇலச்சினைமாற்றித் தூதுவர்ஓடியொளித்தார் *
முத்துத்திரைக்கடற்சேர்ப்பன் மூதறிவாளர்முதல்வன் *
பத்தர்க்கமுதன்அடியேன் பண்டன்றுபட்டினம்காப்பே.
445 வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கி *
கயிற்றும்அக்காணிகழித்துக் காலிடைப்பாசம்கழற்றி *
எயிற்றிடைமண்கொண்டஎந்தை இராப்பகல்ஓதுவித்து * என்னைப்
பயிற்றிப்பணிசெய்யக்கொண்டான் பண்டன்றுபட்டினம்காப்பே.
446 மங்கியவல்வினைநோய்காள்! உமக்கும்ஓர்வல்வினைகண்டீர் *
இங்குப்புகேன்மின்புகேன்மின் எளிதன்றுகண்டீர்புகேன்மின் *
சிங்கப்பிரானவன்எம்மான் சேரும்திருக்கோயில்கண்டீர் *
பங்கப்படாதுஉய்யப்போமின் பண்டன்றுபட்டினம்காப்பே.
447 மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளே *
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன் பிறிதின்றி *
மாணிக்கப்பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர்!
பாணிக்கவேண்டாநடமின் பண்டன்றுபட்டினம்காப்பே.
448 உற்றவுறுபிணிநோய்காள்! உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின் *
பெற்றங்கள்மேய்க்கும்பிரானார் பேணும்திருக்கோயில்கண்டீர் *
அற்றமுரைக்கின்றேன் இன்னம்ஆழ்வினைகாள்! * உமக்குஇங்குஓர்
பற்றில்லைகண்டீர்நடமின் பண்டன்றுபட்டினம்காப்பே.
449 கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி *
அங்கோர்முழையினில்புக்கிட்டு அழுந்திக்கிடந்துழல்வேனை *
வங்கக்கடல்வண்ணன்அம்மான் வல்வினையாயினமாற்றி *
பங்கப்படாவண்ணம்செய்தான் பண்டன்றுபட்டினம்காப்பே.
450 ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து * என்னுள்ளே
பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகிவந்து *
போதில்கமலவன்னெஞ்சம் புகுந்துஎன்சென்னித்திடரில் *
பாதவிலச்சினைவைத்தார் பண்டன்றுபட்டினம்காப்பே.
451 உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே! சங்கே! *
அறவெறிநாந்தகவாளே! அழகியசார்ங்கமே! தண்டே! *
இறவுபடாமலிருந்த எண்மர்உலோகபாலீர்காள்! *
பறவையரையா! உறகல் பள்ளியறைகுறிக்கொண்மின். (2)
452 அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் *
அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து *
பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை *
பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. (2)