This Body is the Abode of the Reclining Lord
பள்ளி கொள்கிற பிரான் உரையும் இடம் இச்சரீரம்
452 அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும் *
அரவிந்தப்பாவையும்தானும் அகம்படிவந்துபுகுந்து *
பரவைத்திரைபலமோதப் பள்ளிகொள்கின்றபிரானை *
பரவுகின்றான்விட்டுசித்தன் பட்டினம்காவற்பொருட்டே. (2)