Your browser does not support the audio element.
audio
433 வாக்குத்தூய்மையிலாமையினாலே
மாதவா! உன்னைவாய்க்கொள்ளமாட்டேன் *
நாக்குநின்னையல்லால்அறியாது
நானதஞ்சுவன்என்வசமன்று *
மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன் *
காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
காரணா! கருளக்கொடியானே. (2)
434 சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
சங்குசக்கரமேந்துகையானே! *
பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
பொறுப்பது பெரியோர்கடனன்றே *
விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
வேறொருவரோடுஎன்மனம்பற்றாது *
உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே!
435 நன்மைதீமைகளொன்றும்அறியேன்
நாரணா! என்னும்இத்தனையல்லால் *
புன்மையால்உன்னைப்புள்ளுவம்பேசிப்
புகழ்வானன்றுகண்டாய்திருமாலே! *
உன்னுமாறுஉன்னைஒன்றும்அறியேன்
ஓவாதேநமோநாரணா! என்பன் *
வன்மையாவதுஉன்கோயிலில்வாழும்
வைட்டணவனென்னும்வன்மைகண்டாயே.
436 நெடுமையால்உலகேழுமளந்தாய்!
நின்மலா! நெடியாய்! * அடியேனைக்
குடிமைகொள்வதற்குஐயுறவேண்டா
கூறைசோறுஇவைவேண்டுவதில்லை *
அடிமையென்னுமக்கோயின்மையாலே
அங்கங்கேஅவைபோதரும்கண்டாய் *
கொடுமைக்கஞ்சனைக்கொன்று நின்தாதை
கோத்தவன்தளைகோள்விடுத்தானே!
437 தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடை
துடவையும்கிணறும்இவையெல்லாம் *
வாட்டமின்றிஉன்பொன்னடிக்கீழே
வளைப்பகம்வகுத்துக்கொண்டிருந்தேன் *
நாட்டுமானிடத்தோடுஎனக்குஅரிது
நச்சுவார்பலர்கேழலொன்றாகி *
கோட்டுமண்கொண்டகொள்கையினானே!
குஞ்சரம்வீழக்கொம்பொசித்தானே!
438 கண்ணா! நான்முகனைப்படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன்நான் *
உண்ணாநாள்பசியாவதொன்றில்லை
ஓவாதேநமோநாரணாவென்று *
எண்ணாநாளும்இருக்கெசுச்சாம
வேதநாண்மலர்கொண்டுஉன்பாதம்
நண்ணாநாள் * அவைதத்துறுமாகில்
அன்றுஎனக்குஅவைபட்டினிநாளே.
439 வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பை
மெத்தையாகவிரித்து * அதன்மேலே
கள்ளநித்திரைகொள்கின்றமார்க்கம்
காணலாங்கொல் என்றாசையினாலே *
உள்ளம்சோரஉகந்தெதிர்விம்மி
உரோமகூபங்களாய் * கண்ணநீர்கள்
துள்ளம்சோரத்துயிலணைகொள்ளேன்
சொல்லாய்யான்உன்னைத்தத்துறுமாறே.
440 வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே! மதுசூதா! *
கண்ணனே! கரிகோள்விடுத்தானே!
காரணா! களிறட்டபிரானே! *
எண்ணுவாரிடரைக்களைவானே!
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே! *
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே!
441 நம்பனே! நவின்றேத்தவல்லார்கள்
நாதனே! நரசிங்கமதானாய்! *
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய்! ஆழிமுன்னேந்தி *
கம்பமாகரிகோள்விடுத்தானே.
காரணா! கடலைக்கடைந்தானே! *
எம்பிரான். என்னையாளுடைத்தேனே!
ஏழையேனிடரைக்களையாயே.
442 காமர்தாதைகருதலர்சிங்கம்
காணவினியகருங்குழல்குட்டன் *
வாமனன்என்மரதகவண்ணன்
மாதவன்மதுசூதனன்தன்னை *
சேமநன்கமரும்புதுவையர்கோன்
விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும் *
நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே. (2)