Removal of Ailments by the Protection of the Primal Lord on the Serpent Couch: O Diseases! Flee!
அரவணையாதியான் காப்பாற் பிணிபோக்கல் நோய்களே! ஓடி விடுங்கள்
443 நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து * எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள்! காலம்பெறஉய்யப்போமின் *
மெய்க்கொண்டுவந்துபுகுந்து வேதப்பிரானார்கிடந்தார் *
பைக்கொண்டபாம்பணையோடும் பண்டன்றுபட்டினம்காப்பே. (2)