Your browser does not support the audio element.
audio
453 துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்து *
புக்கினில்புக்குன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே? *
மக்களறுவரைக்கல்லிடைமோத இழந்தவள்தன்வயிற்றில் *
சிக்கெனவந்துபிறந்துநின்றாய். திருமாலிருஞ்சோலையெந்தாய். (2)
454 வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால் *
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை *
அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று *
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய்!
455 உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன்
தனக்குப்பணிந்து * கடைத்தலைநிற்கை நின்சாயையழிவுகண்டாய் *
புனத்தினைகிள்ளிப்புதுவவிகாட்டி உன்பொன்னடிவாழ்கவென்று *
இனக்குறவர்புதியதுண்ணும் எழில்திருமாலிருஞ்சோலையெந்தாய்! (2)
456 காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரும்மில்லை * உன்
பாதநிழலல்லால்மற்றோருயிர்ப்பிடம் நான்எங்கும்காண்கின்றிலேன் *
தூதுசென்றாய்! குருபாண்டவர்க்காய் அங்கோர்பொய்சுற்றம்பேசிச்சென்று *
பேதஞ்செய்துஎங்கும்பிணம்படுத்தாய்! திருமாலிருஞ்சோலையெந்தாய்!
457 காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி * குரல்
மேலுமெழாமயிர்க்கூச்சுமறா எனதோள்களும்வீழ்வொழியா *
மாலுகளாநிற்கும்என்மனனே! உன்னைவாழத்தலைப்பெய்திட்டேன் *
சேலுகளாநிற்கும்நீள்சுனைசூழ் திருமாலிருஞ்சோலையெந்தாய்!
458 எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் * மற்றும்
ஒருத்தரும்இப்பிறவியென்னும்நோய்க்கு மருந்தறிவாருமில்லை *
மருத்துவனாய்நின்றமாமணிவண்ணா! மறுபிறவிதவிரத்
திருத்தி * உங்கோயிற்கடைப்புகப்பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய்!
459 அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி * உன்பேரருளால்
இக்கரையேறியிளைத்திருந்தேனை அஞ்சேலென்றுகைகவியாய் *
சக்கரமும்தடக்கைகளும் கண்களும்பீதகவாடையொடும் *
செக்கர்நிறத்துச்சிவப்புடையாய்! திருமாலிருஞ்சோலையெந்தாய்!
460 எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றே *
இத்தனைகாலமும்போய்க்கிறிப்பட்டேன் இனிஉன்னைப்போகலொட்டேன் *
மைத்துனன்மார்களைவாழ்வித்து மாற்றலர்நூற்றுவரைக்கெடுத்தாய்! *
சித்தம்நின்பாலதறிதியன்றே திருமாலிருஞ்சோலையெந்தாய்!
461 அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன் *
இன்றுவந்துஇங்குஉன்னைக்கண்டுகொண்டேன் இனிப்போகவிடுவதுண்டே? *
சென்றங்குவாணனைஆயிரந்தோளும் திருச்சக்கரமதனால் *
தென்றித்திசைதிசைவீழச்செற்றாய்! திருமாலிருஞ்சோலையெந்தாய்!
462 சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் * அடிமேல்அடிமைத்திறம் நேர்படவிண்ணப்பஞ்செய் *
பொன்திகழ்மாடம்பொலிந்துதோன்றும் புதுவைக்கோன்விட்டுசித்தன் *
ஒன்றினோடொன்பதும்பாடவல்லார் உலகமளந்தான்தமரே. (2)