PAT 4.6.6

தாமோதரா என்று சொல்ல விரும்பு

386 நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு *
கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்காதே *
சாடிறப்பாய்ந்ததலைவா! தாமோதரா! என்று *
நாடுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள்.
386
nādum n^aharum_aRiya * mānida pErittu *
koodiyazhuNGgi * kuzhiyil veezhndhu vazhukkadhE *
sādiRap pāyndha thalaivā! * dhāmOdharā! enRu-
nādumin * nāraNan_ * tham annai n^araham puhāL. 6.

Ragam

மோஹன

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

386. Do not give human names to your children like others joining with the people of your country and town and celebrating with them the name ceremony for their children. Do not fall in the ditch like them. If you approach the god and worship him saying, “O Nārana, you destroyed the Asuran when he came as a cart. You are our chief, O Damodara!” he will not send the mothers of your children to hell.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாடும் நகரும் கிராமத்திலும் நகரத்திலுமுள்ளவர்கள்; அறிய அறிவதற்காக; மானிடப் பேர் இட்டு மானிடப் பெயரை இட்டு; கூடி அழுங்கி அவர்களோடு கூடி மதிமயங்கி; குழியில் வீழ்ந்து அவர்கள் விழுந்த குழியிலே விழுந்து; வழுக்காதே தவறிப்போகாமல்; சாடு இறப் பாய்ந்த சகடாசுரன் முறியும்படி உதைத்த; தலைவா! தாமோதரா! பெரியோனே! தாமோதரனே!; என்று என்று; நாடுமின் நாடினீர்களாகில்; நாரணன் தம் நாராயணன் பெயரைக் கொண்ட; அன்னை பிள்ளையின் தாய்மார்கள்; நரகம் புகாள் நரகத்தை அடைய மாட்டார்கள்