PAT 3.5.7

தாமோதரன் தாங்கிய தடவரை

270 படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல் *
தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத்
தாமோதரன்தாங்குதடவரைதான் *
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை *
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
270
padaNGgaL palavum udai pāmbaraiyan *
padar boomiyai thāNGgi kidappavan pOl *
thadaNGgai viralaindhum malara vaiththu *
dhāmOdharan thāNGgu thadavaraithān *
adaNGgachchenRu ilaNGgaiyai eedazhiththa *
anuman puhazh pādi tham kuttan_kaLai *
kudaNGgai koNdu mandhihaL kaN vaLarththum *
gOvarththanam ennum koRRakkudaiyE. * 7.

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

270. The victorious umbrella-like mountain that our Damodaran carried using the five fingers of his wide hands just as the thousand-headed Adishesha carries the earth is Govardhanā (Madhura) where the monkeys live and put their small children to sleep holding them in their hands and singing the fame of Hanuman who went to Lankā and destroyed its pride.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
படங்கள் பலவும் உடை பல படங்களையுடைய; பாம்பு அரையன் பாம்புகட்கு அரசனான ஆதிசேஷன்; படர் பூமியை பரந்த பூமியை; தாங்கிக் கிடப்பவன் போல் தாங்கி இருப்பவன் போல; தடங் கை தன் பெரிய கையிலுள்ள; விரல் ஐந்தும் ஐந்து விரல்களையும்; மலர வைத்து பிரித்து வைத்து; தாமோதரன் தாங்கு கண்ணபிரான் தாங்கின; தடவரைதான் மலை தான் கோவர்த்தன மலை; இலங்கையை இலங்கையை; அடங்கச் சென்று முழுவதையும்; ஈடு அழித்த முழுமையாக அழித்த; அனுமன் புகழ் ஆஞ்சனேயனின் புகழ்; பாடி பாடி கொண்டு; தம் குட்டன்களை தம் குட்டிகளை; குடங்கைக் கொண்டு உள்ளங்கையிலேந்தி; மந்திகள் குரங்குகள்; கண் வளர்த்தும் தூங்கச்செய்யும்; கோவர்த்தனம் என்னும் கோவர்த்தனம் என்னும்; கொற்றக் குடையே வெற்றிக் குடையே