PAT 3.5.6

நெடுந்தோள் கொடுத்துத் தூக்கிப் பிடித்த மலை

269 செப்பாடுடையதிருமாலவன் தன்
செந்தாமரைக்கைவிரலைந்தினையும் *
கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்
காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை *
எப்பாடும்பரந்திழிதெள்ளருவி
இலங்குமணிமுத்துவடம்பிறழ *
குப்பாயமெனநின்றுகாட்சிதரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே.
269 cĕppāṭu uṭaiya tirumāl avaṉ taṉ * cĕntāmaraik kaiviral aintiṉaiyum *
kappu āka maṭuttu maṇi nĕṭuntol̤ * kāmpu ākak kŏṭuttuk kavitta malai **
ĕppāṭum parantu izhi tĕl̤ aruvi * ilaṅku maṇi muttuvaṭam piṟazha *
kuppāyam ĕṉa niṉṟu kāṭcitarum * kovarttaṉam ĕṉṉum kŏṟṟak kuṭaiye (6)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

269. The victorious umbrella-like mountain that our wonderful Thirumāvalavan carried, putting all the five fingers of his lovely lotus hand at its base and lifting it with his large, beautiful arms is Govardhanā (Madhura) where the water of the white waterfall flows everywhere as it carries lovely glistening beautiful pearls and makes the hill look like a treasure of pearl garlands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செப்பாடு உடைய செவ்வையான குணமுடைய; திருமால் அவன் தன் கண்ணபிரான் தன்னுடைய; செந்தாமரைக் சிவந்த தாமரைப் போன்ற; கை விரல் கை விரல்கள்; ஐந்தினையும் ஐந்தையும்; கப்பாக மடுத்து வளைத்து அமைத்து; மணி நெடுந்தோள் அழகிய தன் தோள்களை; காம்பாகக் குடை போன்ற மலைக்குக் காம்பாக; கொடுத்து கொடுத்து; கவித்த மலை தலைகீழாகக் கவிழ்த்த மலையாவது; எப்பாடும் பரந்து எல்லாப் பக்கங்களிலும் பரந்து; இழி தெள் அருவி பெருகும் தெளிந்த சுனைஅருவிகள்; இலங்கு மணி பிரகாசமாக விளங்கும் அழகிய; முத்து வடம் பிறழ முத்து மாலைப் போல் அசைய; குப்பாயம் கண்ணன் முத்துச்சட்டை; என நின்று அணிந்திருப்பதுபோல்; காட்சி தரும் தோன்றும் மலை; கோவர்த்தனம் என்னும் கோவர்த்தனம் என்னும்; கொற்றக் குடையே வெற்றிக் குடையே
tirumāl avaṉ taṉ Lord Kannan with; cĕppāṭu uṭaiya great qualities; cĕntāmaraik using His red lotus-like; kappāka maṭuttu folded; aintiṉaiyum five; kai viral fingers; maṇi nĕṭuntol̤ and using His shoulder; kŏṭuttu He lifted; kāmpākak the umbrella-like mountain; kavitta malai after rotating it upside down; iḻi tĕl̤ aruvi where clear water from water falls; ĕppāṭum parantu spreads to all places; kāṭci tarum the mountain appears; ĕṉa niṉṟu as though; kuppāyam Lord Krishna is wearing a; muttu vaṭam piṟaḻa pearl garland that sway; ilaṅku maṇi and sparkles; kovarttaṉam ĕṉṉum Govardhanam mountain; kŏṟṟak kuṭaiye is indeed a victorious umbrella