எதிரிகள் சதுரங்கம் பொரப் பொருவீரோ என்று அழைக்க இவர் சொல்லும்படி -எனக்கு தொழில் புராணனான சர்வேஸ்வரனை ஏத்துவதே-
அப்பிள்ளை உரை அவதாரிகை நாளும் தொழக் காதல் பூண்ட -நித்தியமாக இருந்தாலும் எங்களைப் போலே ஒரு போது -பகவத் விஷயமும் இல்லாத போது – லௌகிக வியாபாரமுமாய் இருக்கப் பார்த்தாலோ என்ன என் நெஞ்சிலே நிரந்தர வாசம் பண்ணும் சக்ரவர்த்தி திருமகன் உடைய வீர சரிதம் அனுசந்திக்கைக்கு காலம்