NMT 1

இந்த அந்தாதியின் உட்பொருளைக் கொள்க

2382 நான்முகனை நாராயணன்படைத்தான் * நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத்தான்படைத்தான் * - யான்முகமாய்
அந்தாதிமேலிட்டு அறிவித்தேனாழ்பொருளை *
சிந்தாமல்கொண்மிநீர்தேர்ந்து. (2)
2382 ## nāṉmukaṉai * nārāyaṇaṉ paṭaittāṉ * nāṉmukaṉum
tāṉ mukamāyc * caṅkaraṉait tāṉ paṭaittāṉ ** - yāṉ mukamāy
antāti meliṭṭu * aṟivitteṉ āzh pŏrul̤ai *
cintāmal kŏl̤miṉ nīr terntu -1

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

2382. Nārāyanan created Nānmuhan and Nānmuhan created the five-faced Sankaran. I composed andadi poems praising him. Learn and understand the deep meaning of each of these pāsurams without omission.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாராயணன் நாராயணன்; நான்முகனை நான்கு முகமுடைய பிரமனை; படைத்தான் படைத்தான்; நான்முகனும் அந்த பிரமனும்; தான் முகமாய் தானே முன்னின்று; சங்கரனை சங்கரனை; தான் படைத்தான் படைத்தான்; ஆழ் நான் அறிந்த இந்த ஆழ்ந்த; பொருளை அர்த்தத்தை; யான்முகமாய் நான் முக்யமாக; அந்தாதி இத்திருவந்தாதி; மேலிட்டு மூலமாக உங்களுக்கு; அறிவித்தேன் உபதேசிக்கிறேன்; நீர் தேர்ந்து நீங்கள் தெளிந்து; சிந்தாமல் விட்டு விடாமல்; கொள்மின் மனதில் கொள்ளுங்கள்
nārāyaṇan ṣrīman nārāyaṇa (nārāyaṇa, consort of ṣrī mahālakshmi); nānmuganai padaiththān created brahmā who has four faces; nānmuganum that brahmā too; thāṇ mugamāy keeping himself as the primary entity; sankaranai rudhra; thān padaiththān created himself; yān mugamāy ī, keeping myself as primary entity; āzh porul̤ai these meanings which are difficult to know; andhādhi mĕlittu in the form of andhādhi (antha + ādhi; aṛiviththĕn instructed; nīr you (who are listening to this); thĕrndhu analysing; sindhāmal ensuring that these meanings do not slip out; kol̤min retain in your mind