தனியன் / Taniyan
நான்முகன் திருவந்தாதி தனியன்கள் / Nānmuhan Thiruvandāthi taṉiyaṉkal̤
நாராயணன் படைத்தான் நான்முகனை * நான்முகனுக்கு
ஏரார் சிவன் பிறந்தானென்னுஞ் சொல் -
சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே! *
மொய்பூ மழிசைப் பரனடியே வாழ்த்து
nārāyaṇan paḍaittān nānmuganai⋆ nānmuganu -
kērār śivan piṟandān ennum śol ⋆ -
śīrār moziśeppi vāzalām neñjamē ! ⋆
moypū maziśai pparan aḍiyē vāzttu
சீராமப்பிள்ளை / cīrāmappil̤l̤ai