கீழே வேதாந்த பிரகிரியையால் பரத்வ நிர்ணயம் இதிஹாச ப்ரக்ரியையால் இதில்
தேருங்கால் தேவன் ஒருவனே என்று உரைப்பர் ஆரும் அறியார் அவன் பெருமை -ஒரும் பொருள் முடிவும் இத்தனையே எத் தவம் செய்தார்க்கும் அருள் முடிவது ஆழியான் பால் –2
பதவுரை
தேருங்கால்–“ஆராயுமிடத்து. தேவன் ஒருவனே என்று–பர தெய்வமாக வுள்ளவன் ஸ்ரீமந் நாராயணனொருவனே“ என்று உரைப்பர்–(வியாஸர் முதலிய மஹர்ஷிகள்)