Chapter 9

The love of a girl for Kannan - (சிந்துரச் செம்பொடி

திருமாலிருஞ்சோலைப் பிரானை வழிபடல்
The love of a girl for Kannan - (சிந்துரச் செம்பொடி
"Andal is captivated by the beauty of Thirumaliruncholai and the divine form of Azhagar. The dark clouds spread across the sky and poured rain generously. Flowers, which bloom during the rainy season, adorned the hills of Thirumaliruncholai. These sights intensified Andal's pangs of separation. Her heart longed for the Lord of Thirumaliruncholai.

(In + Read more
ஆண்டாள் திருமாலிருஞ்சோலையின் அழகிலும், அழகரின் திருமேனி சவுந்தர்யத்திலும் ஈடுபடுகிறாள். வானில் படர்ந்து விளங்கிய கார்முகில் மழையை நன்றாகப் பொழிந்தது. மழை காலத்திற்கு உரிய பூக்கள் திருமாலிருஞ்சோலை மலையில் பூத்துப் பரவி இருந்தன. இவை ஆண்டாள் பிரிவுத் துன்பத்தை அதிகமாக்கின. திருமாலிருஞ்சோலை + Read more
Verses: 587 to 596
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Recital benefits: Will join the feet of Thirumāl
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 9.1

587 சிந்துரச்செம்பொடிப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும் *
இந்திரகோபங்களே எழுந்தும்பரந்திட்டனவால் *
மந்தரம்நாட்டியன்று மதுரக்கொழுஞ்சாறுகொண்ட
சுந்தரத்தோளுடையான் சுழலையில்நின்றுய்துங்கொலோ? (2)
587 ## சிந்துரச் செம்பொடிப் போல் * திருமாலிருஞ்சோலை எங்கும் *
இந்திர கோபங்களே * எழுந்தும் பரந்திட்டனவால் **
மந்தரம் நாட்டி அன்று * மதுரக் கொழுஞ்சாறு கொண்ட *
சுந்தரத் தோளுடையான் * சுழலையில் நின்று உய்துங்கொலோ? (1)
587 ## cinturac cĕmpŏṭip pol * tirumāliruñcolai ĕṅkum *
intira kopaṅkal̤e * ĕzhuntum parantiṭṭaṉavāl **
mantaram nāṭṭi aṉṟu * maturak kŏzhuñcāṟu kŏṇṭa *
cuntarat tol̤uṭaiyāṉ * cuzhalaiyil niṉṟu uytuṅkŏlo? (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

587. O velvet mites colored like red sinduram powder, and flying everywhere in the groves of Thirumālirunjolai, I am caught in my love for the one with handsome arms who churned the milky ocean with Mandara mountain and took its sweet nectar. It is like a net. Will I survive this sorrow?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
திருமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; எங்கும் எல்லா இடங்களிலும்; இந்திர கோபங்களே பட்டுப் பூச்சிகளானவை; சிந்துர சிந்தூர; செம்பொடிப் போல் சிவந்த பொடி போல; எழுந்தும் மேலெழுந்து; பரந்திட்டனவால் பரவிக்கிடக்கின்றன; மந்தரம் மந்தரமலையைக் கடலில்; நாட்டி அன்று மத்தாக நாட்டி; மதுர மதுரமான; கொழுஞ்சாறு அமிர்தம் போன்ற சாரான; கொண்ட பிராட்டியைச் சுவீகரித்த; சுந்தர அழகிய; தோளுடையான் தோளுடைய பிரான்; சுழலையினின்று வீசும் வலையிலிருந்து; உய்துங் கொலோ? பிழைப்போமோ?
tirumāliruñcolai in Thirumalirunjolai; intira kopaṅkal̤e silk-like insects; ĕṅkum seen everywhere; cintura like red; cĕmpŏṭip pol powder; ĕḻuntum rise up; parantiṭṭaṉavāl and spread everywhere; tol̤uṭaiyāṉ the Lord with shoulder; cuntara that is beautiful; kŏṇṭa who accepted the divine consort; kŏḻuñcāṟu who came as a nectar; matura that is sweet; mantaram when mount mount Madara was; nāṭṭi aṉṟu used to churn it; cuḻalaiyiṉiṉṟu when he casts the net; uytuṅ kŏlo? can we ever escape?

NAT 9.2

588 போர்களிறுபொரும் மாலிருஞ்சோலையம்பூம்புறவில் *
தார்க்கொடிமுல்லைகளும் தவளநகைகாட்டுகின்ற *
கார்க்கொள்பிடாக்கள்நின்று கழறிச்சிரிக்கத்தரியேன் *
ஆர்க்கிடுகோ? தோழி! அவன்தார்ச்செய்தபூசலையே.
588 போர்க்களிறு பொரும் * மாலிருஞ்சோலை அம் பூம்புறவில் *
தார்க்கொடி முல்லைகளும் * தவள நகை காட்டுகின்ற **
கார்க்கொள் பிடாக்கள் நின்று * கழறிச் சிரிக்கத் தரியேன் *
ஆர்க்கு இடுகோ? தோழீ * அவன் தார் செய்த பூசலையே (2)
588 porkkal̤iṟu pŏrum * māliruñcolai am pūmpuṟavil *
tārkkŏṭi mullaikal̤um * taval̤a nakai kāṭṭukiṉṟa **
kārkkŏl̤ piṭākkal̤ niṉṟu * kazhaṟic cirikkat tariyeṉ *
ārkku iṭuko? tozhī * avaṉ tār cĕyta pūcalaiye (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

588. O friend! In Thirumālirunjolai where elephants fight with each other and play, the blossoming mullai flowers on the vines in the forest laugh at me i The vines that grow in the rainy season bloom as if to say, “You will not survive!” To whom can I tell the pain that his garland gives me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
போர்க்களிறு போர் யானைகள்; பொரும் விளையாடுமிடமான; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையின்; அம் பூம் மிக அழகிய தாழ்ந்த; புறவில் பகுதியில்; தார்க்கொடி அரும்புகளையுடைய; முல்லைகளும் கொடி முல்லைகளும்; தவள அழகரின் வெளுத்த; நகை காட்டுகின்ற புன்சிரிப்பை; கார்க்கொள் நினைவூட்டும் வகையில்; படாக்கள் படா என்னுங் கொடிகள்; நின்று பூத்து நின்று; கழறி சிரிப்பது போல; சிரிக்க விகசித்திடுவதை; தரியேன் தாங்க முடியவில்லை; தோழீ! எனது உயிர்த்தோழியே!; அவன் நாம் ஆசைப்பட்ட அவன்; தார் மாலையானது; செய்த உண்டுபண்ணின; பூசலையே துயரை; ஆர்க்கு யாரிடம்; இடுகோ? முறையிடுவேன்?
porkkal̤iṟu the war elephants; pŏrum roam and play in; māliruñcolai Thirumalirunjolai; am pūm in the beautiful low lying; puṟavil areas; mullaikal̤um creeping jasmine; tārkkŏṭi with buds; kārkkŏl̤ reminds me of; nakai kāṭṭukiṉṟa the gentle smile of; taval̤a Azhagar (Lord Vishnu); paṭākkal̤ and vines called pada; niṉṟu bloom; kaḻaṟi as if they smile; cirikka and make fun of; tariyeṉ i cant bear that anymore; toḻī! o my dear friend!; pūcalaiye if the sorrow is; cĕyta caused by; tār the mountain of the Lord; avaṉ whom we desidered; ārkku to whom; iṭuko? can I go and complain?

NAT 9.3

589 கருவிளையொண்மலர்காள்! காயாமலர்காள்! * திருமால்
உருவொளிகாட்டுகின்றீர் எனக்குய்வழக்கொன்றுரையீர் *
திருவிளையாடுதிண்தோள் திருமாலிருஞ்சோலைநம்பி *
வரிவளையில்புகுந்து வந்திபற்றும்வழக்குளதே.
589 கருவிளை ஒண்மலர்காள் * காயா மலர்காள் * திருமால்
உரு ஒளி காட்டுகின்றீர் * எனக்கு உய் வழக்கு ஒன்று உரையீர் **
திரு விளையாடு திண் தோள் * திருமாலிருஞ்சோலை நம்பி *
வரிவளை இல் புகுந்து * வந்திபற்றும் வழக்கு உளதே? (3)
589 karuvil̤ai ŏṇmalarkāl̤ * kāyā malarkāl̤ * tirumāl
uru ŏl̤i kāṭṭukiṉṟīr * ĕṉakku uy vazhakku ŏṉṟu uraiyīr **
tiru vil̤aiyāṭu tiṇ tol̤ * tirumāliruñcolai nampi *
varival̤ai il pukuntu * vantipaṟṟum vazhakku ul̤ate? (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

589. O beautiful karuvilai flowers! Kāyām flowers! having the color of the lord Tell me how I can survive. He is the Nambi of Thirumālirunjolai on whose broad shoulders His consort rests Is it fair for Him to come into our house and steal my bangles?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஒண் அழகான; கருவிளை மலர்காள்! காக்கணாம் பூக்களே!; காயாமலர்காள்! காயாமலர்களே!; திருமால் திருமாலின்; உரு ஒளி மேனி நிறத்தை; காட்டுகின்றீர் காட்டுகின்றீர்; எனக்கு எனக்கு; உய் வழக்கு பிழைக்கும்; ஒன்று வகையொன்றை; உரையீர் சொல்லுங்கள்; திரு பெரியபிராட்டியார்; விளையாடு விளையாடும்; திண் தோள் திண் தோள்களை உடைய; திருமாலிருஞ்சோலைநம்பி அழகர்; வரிவளை இல் வீட்டினுள் புகுந்து; புகுந்து எனது என் கை வளைகளை; வந்தி பலாத்காரமாக; பற்றும் பற்றிக் கொண்டு; வழக்கு செல்வது; உளதே? நியாயமோ?
ŏṇ o beautiful; karuvil̤ai malarkāl̤! kākkanaam flowers!; kāyāmalarkāl̤! and kāyā flowers!; kāṭṭukiṉṟīr you display; uru ŏl̤i the color of the divine body; tirumāl of the Lord; uraiyīr please tell; ĕṉakku me; ŏṉṟu a method; uy vaḻakku to survive; tirumāliruñcolainampi Azhagar with; tiṇ tol̤ sturdy shoulders; tiru where Goddess Lakshmi; vil̤aiyāṭu plays joyfully; varival̤ai il entered the house; paṟṟum grabbed and took; pukuntu ĕṉatu my bangles; vanti forcefully; vaḻakku and walked away; ul̤ate? is that fair?

NAT 9.4

590 பைம்பொழில்வாழ்குயில்காள்! மயில்காள்! ஒண்கருவிளைகாள் *
வம்பக்களங்கனிகாள்! வண்ணப்பூவை நறுமலர்காள்! *
ஐம்பெரும்பாதகர்காள்! அணிமாலிருஞ்சோலைநின்ற *
எம்பெருமானுடையநிறம் உங்களுக்கெஞ்செய்வதே?
590 பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் * ஒண் கருவிளைகாள் *
வம்பக் களங்கனிகாள் * வண்ணப் பூவை நறுமலர்காள் **
ஐம் பெரும் பாதகர்காள் * அணி மாலிருஞ்சோலை நின்ற *
எம்பெருமானுடைய நிறம் * உங்களுக்கு என் செய்வதே? (4)
590 paimpŏzhil vāzh kuyilkāl̤ mayilkāl̤ * ŏṇ karuvil̤aikāl̤ *
vampak kal̤aṅkaṉikāl̤ * vaṇṇap pūvai naṟumalarkāl̤ **
aim pĕrum pātakarkāl̤ * aṇi māliruñcolai niṉṟa *
ĕmpĕrumāṉuṭaiya niṟam * uṅkal̤ukku ĕṉ cĕyvate? (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

590. O cuckoo birds in the flourishing groves! Peacocks! Beautiful karuvilai blossoms! Fresh kala fruits! Colorful fragrant kāyām flowers! You are my five most powerful enemies. Why must you have the color of the dear lord of beautiful Thirumālirunjolai? Is it to make me sad with love and hurt me?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பைம்பொழில் பரந்த சோலையில்; வாழ் வாழ்கின்ற; குயில்காள்! குயில்களே!; மயில்காள்! மயில்களே!; ஒண் அழகிய; கருவிளைகாள்! காக்கணம் பூக்களே!; வம்ப புதிய; களங்கனிகாள்! களாப்பழங்களே!; வண்ண வண்ணமும்; பூவை நறுமலர்காள்! மணமுள்ள பூக்களே!; ஐம் பெரும் பஞ்சமகா; பாதகர்காள்! பாதகர்கள் போன்றவர்களே!; அணிமாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையிலுள்ள; நின்ற எம்பெருமானுடைய எம்பெருமானின்; நிறம் என் செய்வதே மேனி நிறத்தை; உங்களுக்கு எதுக்காக ஏற்று நீங்கள் எதற்காக ஏற்று; கொண்டது கொண்டுள்ளீர்கள் நான் துன்பப்படவா?
kuyilkāl̤! o cuckoos!; mayilkāl̤! and peacocks!; vāḻ living; paimpŏḻil in the vast grove; ŏṇ o beautiful; karuvil̤aikāl̤! gloriosa flowers!; vampa fresh; kal̤aṅkaṉikāl̤! kala fruits; pūvai naṟumalarkāl̤! flowers with fragrance and; vaṇṇa colors; aim pĕrum you are all my five; pātakarkāl̤! enemies; uṅkal̤ukku ĕtukkāka eṟṟu as you have all taken upon; niṟam ĕṉ cĕyvate the body color of; niṉṟa ĕmpĕrumāṉuṭaiya the Lord of; aṇimāliruñcolai Thirumaliruncholai; kŏṇṭatu is it to make me suffer?

NAT 9.5

591 துங்கமலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ்சோலைநின்ற *
செங்கட்கருமுகிலின் திருவுருப்போல் * மலர்மேல்
தொங்கியவண்டினங்காள்! தொகுபூஞ்சுனைகாள்! * சுனையில்
தங்குசெந்தாமரைகாள்! எனக்கோர்சரண்சாற்றுமினே.
591 துங்க மலர்ப் பொழில் சூழ் * திருமாலிருஞ்சோலை நின்ற *
செங்கண் கருமுகிலின் * திருவுருப் போல் ** மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் * தொகு பூஞ்சுனைகாள் * சுனையில்
தங்கு செந்தாமரைகாள் * எனக்கு ஓர் சரண் சாற்றுமினே (5)
591 tuṅka malarp pŏzhil cūzh * tirumāliruñcolai niṉṟa *
cĕṅkaṇ karumukiliṉ * tiruvurup pol ** malarmel
tŏṅkiya vaṇṭiṉaṅkāl̤ * tŏku pūñcuṉaikāl̤ * cuṉaiyil
taṅku cĕntāmaraikāl̤ * ĕṉakku or caraṇ cāṟṟumiṉe (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

591. O swarm of bees, you have the divine color of the dark cloud-colored lord with beautiful eyes who stays in Thirumālirunjolai surrounded with flourishing flowers. O abundant, beautiful mountain springs! O lovely lotus flowers! Tell me, who can be my refuge?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
துங்க மலர் ஓங்கின மலர்; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருமாலிருஞ்சோலையில் திருமாலிருஞ்சோலையில்; நின்று இருக்கும் நின்று இருக்கும்; செங்கண் சிவந்த கண்களையும்; கருமுகிலின் கரிய மேகம் போன்றவனின்; திருவுருப் போல் அழகிய வடிவம்போலே; மலர்மேல் மலர்மேல்; தொங்கிய தங்கியிருக்கிற; வண்டினங்காள்! வண்டுக் கூட்டங்களே!; தொகு அருகிலிருக்கிற; பூஞ்சுனைகாள்! அழகிய சுனைகளே!; சுனையில் தங்கு சுனைகளில் உள்ள; செந்தாமரைகாள்! செந்தாமரை மலர்களே!; எனக்கு ஓர் எனக்கு ஒரு; சரண் சாற்றுமினே அடைக்கலம் கூறுங்கள்
vaṇṭiṉaṅkāl̤! oh swarms of bees!; tŏṅkiya that rest on; malarmel the flowers; tiruvurup pol and have the beautiful form; karumukiliṉ of the Lord who is like dark clouds; cĕṅkaṇ with red eys; niṉṟu irukkum and is standing still; tirumāliruñcolaiyil in Thirumaliruncholai; pŏḻil cūḻ surrounded by groves of; tuṅka malar towering flowers; pūñcuṉaikāl̤! oh lovely springs; tŏku thats nearby; cĕntāmaraikāl̤! oh red lotus flowers; cuṉaiyil taṅku in those springs; ĕṉakku or please offer me; caraṇ cāṟṟumiṉe a refuge

NAT 9.6

592 நாறுநறும்பொழில் மாலிருஞ்சோலைநம்பிக்கு * நான்
நூறுதடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்துபராவிவைத்தேன் *
நூறுதடாநிறைந்த அக்காரவடிசில்சொன்னேன் *
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவைகொள்ளுங்கொலோ. (2)
592 ## நாறு நறும் பொழில் * மாலிருஞ்சோலை நம்பிக்கு * நான்
நூறு தடாவில் வெண்ணெய் * வாய்நேர்ந்து பராவி வைத்தேன் **
நூறு தடா நிறைந்த * அக்கார அடிசில் சொன்னேன் *
ஏறு திருவுடையான் * இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ? (6)
592 ## nāṟu naṟum pŏzhil * māliruñcolai nampikku * nāṉ
nūṟu taṭāvil vĕṇṇĕy * vāynerntu parāvi vaitteṉ **
nūṟu taṭā niṟainta * akkāra aṭicil cŏṉṉeṉ *
eṟu tiruvuṭaiyāṉ * iṉṟu vantu ivai kŏl̤l̤uṅ kŏlo? (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

592. I made a hundred pots of butter for Nambi of Thirumālirunjolai surrounded with fragrant groves. I told him I will fill all the hundred pots with sweet Pongal for him. He who enshrines Lakshmi on His chest, grows more and more beautiful. Do you think He will come and eat?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நறு பொழில் பரிமளம் மிக்க பொழில்; நாறும் மணக்கும்; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையின்; நம்பிக்கு எம்பிரானுக்கு; நான் நூறு தடாவில் நான் நூறு அண்டாக்களில்; வெண்ணெய் வெண்ணெயை; வாய் நேர்ந்து வாயாலே கூறி; பராவி வைத்தேன் சமர்ப்பித்தேன்; நூறு தடா நிறைந்த நூறு அண்டாக்கள் நிறைந்த; அக்கார அடிசில் அக்கார அடிசில்; சொன்னேன் சமர்ப்பித்தேன்; ஏறு மார்பில் அமர்ந்த; திருவுடையான் திருமகளின் நாதன்; இன்று வந்து இவை இன்று இங்கு வந்து; கொள்ளுங் இவற்றைத் திருவுள்ளம்; கொலோ? பற்றுவாரோ?
nampikku for the Lord of; māliruñcolai Thirumaliruncholai; nāṟum that has fragrant; naṟu pŏḻil groves; nāṉ nūṟu taṭāvil I kept hundred pots; vĕṇṇĕy of butter; vāy nerntu and by word of mouth; parāvi vaitteṉ I offered them; cŏṉṉeṉ I also offered Him; nūṟu taṭā niṟainta hundred pots of; akkāra aṭicil sweet pongal; tiruvuṭaiyāṉ the Lord with Lakshmi; eṟu on His chest; iṉṟu vantu ivai will He come here today; kŏlo? and accept; kŏl̤l̤uṅ my offerings

NAT 9.7

593 இன்றுவந்தித்தனையும் அமுதுசெய்திடப்பெறில் * நான்
ஒன்றுநூறாயிரமாக்கொடுத்துப் பின்னும்ஆளும்செய்வன் *
தென்றல்மணங்கமழும் திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் * அடியேன்மனத்தே வந்துநேர்படிலே.
593 இன்று வந்து இத்தனையும் * அமுது செய்திடப் பெறில் * நான்
ஒன்று நூறாயிரமாக் கொடுத்துப் * பின்னும் ஆளும் செய்வன் **
தென்றல் மணம் கமழும் * திருமாலிருஞ்சோலை தன்னுள்
நின்றபிரான் * அடியேன் மனத்தே வந்து நேர்படிலே (7)
593 iṉṟu vantu ittaṉaiyum * amutu cĕytiṭap pĕṟil * nāṉ
ŏṉṟu nūṟāyiramāk kŏṭuttup * piṉṉum āl̤um cĕyvaṉ **
tĕṉṟal maṇam kamazhum * tirumāliruñcolai taṉṉul̤
niṉṟapirāṉ * aṭiyeṉ maṉatte vantu nerpaṭile (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

593. If the dear lord of Thirumālirunjolai with its fragrant breeze, enters my heart and stays there, I will make a hundred thousand pots of butter and sweet Pongal and give them to Him. If He comes today and eats, I will give him all these pots and serve Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மணம் கமழும் மணம் கமழும்; தென்றல் தென்றல் வீசும்; திருமாலிருஞ்சோலை தன்னுள் திருமாலிருஞ்சோலையில்; நின்ற பிரான் எழுந்தருளியிருக்கும் அழகர்; இன்று வந்து இன்று வந்து; இத்தனையும் எல்லாவற்றையும்; அமுது செய்திடப் பெறில் அமுது செய்தால்; அடியேன் மனத்தே மேலும் என் மனதிலே; வந்து நேர்படிலே வந்து வாசம் பண்ணினால்; நான் ஒன்று நான் ஒன்றை; நூறாயிரமா நூறாயிரமாக; கொடுத்து கொடுத்துவிடுவேன்; பின்னும் அதற்கு மேலும்; ஆளும் செய்வன் இன்னும் கைங்கர்யங்கள் செய்வேன்
niṉṟa pirāṉ the Lord of; tirumāliruñcolai taṉṉul̤ Thirumalirunjolai; tĕṉṟal where gentle breeze blows; maṇam kamaḻum with fragrance; iṉṟu vantu if He comes; amutu cĕytiṭap pĕṟil and taste; ittaṉaiyum everything; aṭiyeṉ maṉatte and further, if He comes; vantu nerpaṭile and dwells in my heart; nāṉ ŏṉṟu then for each one; kŏṭuttu I will give; nūṟāyiramā hundred thousand; piṉṉum even more than that; āl̤um cĕyvaṉ i will do servive

NAT 9.8

594 காலையெழுந்திருந்து கரியகுருவிக்கணங்கள் *
மாலின்வரவுசொல்லி மருள்பாடுதல்மெய்ம்மைகொலோ? *
சோலைமலைப்பெருமான் துவராபதியெம்பெருமான் *
ஆலினிலைப்பெருமான் அவன்வார்த்தையுரைக்கின்றதே.
594 காலை எழுந்திருந்து * கரிய குருவிக் கணங்கள் *
மாலின் வரவு சொல்லி * மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ? **
சோலைமலைப் பெருமான் * துவாராபதி எம்பெருமான் *
ஆலின் இலைப் பெருமான் * அவன் வார்த்தை உரைக்கின்றதே (8)
594 kālai ĕzhuntiruntu * kariya kuruvik kaṇaṅkal̤ *
māliṉ varavu cŏlli * marul̤ pāṭutal mĕymmai kŏlo? **
colaimalaip pĕrumāṉ * tuvārāpati ĕmpĕrumāṉ *
āliṉ ilaip pĕrumāṉ * avaṉ vārttai uraikkiṉṟate (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

594. A flock of black sparrows wakes up in the morning, welcomes Thirumāl and sings the raga marul. Is it true that they sing that raga to wake him up? They sing as if they are repeating the names of Him who stays in Thirumālirunjolai, He who is the lord of Dwaraka, He who sleeps on a banyan leaf, does not come to me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கரிய குருவி கரிய குருவி; கணங்கள் கூட்டங்கள்; காலை விடிகாலையில்; எழுந்திருந்து எழுந்து; சோலை மலை திருமாலிருஞ்சோலை மலை; பெருமான் தலைவனாயும்; துவராபதி துவாரகையின்; எம்பெருமான் பிரானாயும் உள்ள; ஆலின் இலை ஆலிலைமேல் துயின்ற; பெருமான் எம்பெருமான்; அவன் வார்த்தை வார்த்தைகளை; உரைக்கின்றதே சொல்லும்; மாலின் எம்பெருமானின்; வரவு வருகையை; சொல்லி சொல்லிக் கொண்டு; மருள் மருள் என்ற பண்ணைப்; பாடுதல் பாடுவதானது; மெய்ம்மைகொலோ? உண்மைதானோ?
kaṇaṅkal̤ the flock of; kariya kuruvi dark sparrows; ĕḻuntiruntu wake up; kālai in the early morning; mĕymmaikŏlo? is it true; pāṭutal that they sing; marul̤ marul' melody; cŏlli announcing; varavu the arrival; māliṉ of the Lord; avaṉ vārttai and also recite; uraikkiṉṟate the words; pĕrumāṉ the Lord of; colai malai Thirumalirunjolai; ĕmpĕrumāṉ who is also the Lord of; tuvarāpati Dwaraka; pĕrumāṉ and is the One who; āliṉ ilai slept on a banyan tree

NAT 9.9

595 கோங்கலரும்பொழில் மாலிருஞ்சோலயில் கொன்றைகள்மேல் *
தூங்குபொன்மாலைகளோடு உடனாய்நின்றுதூங்குகின்றேன் *
பூங்கொள்திருமுகத்து மடுத்தூதியசங்கொலியும் *
சார்ங்கவில்நாணொலியும் தலைப்பெய்வதெஞ்ஞான்று கொலோ?
595 கோங்கு அலரும் பொழில் * மாலிருஞ்சோலையில் கொன்றைகள்மேல் *
தூங்கு பொன் மாலைகளோடு * உடனாய் நின்று தூங்குகின்றேன் **
பூங்கொள் திருமுகத்து * மடுத்து ஊதிய சங்கு ஒலியும் *
சார்ங்க வில் நாண் ஒலியும் * தலைப்பெய்வது எஞ்ஞான்று கொலோ? (9)
595 koṅku alarum pŏzhil * māliruñcolaiyil kŏṉṟaikal̤mel *
tūṅku pŏṉ mālaikal̤oṭu * uṭaṉāy niṉṟu tūṅkukiṉṟeṉ **
pūṅkŏl̤ tirumukattu * maṭuttu ūtiya caṅku ŏliyum *
cārṅka vil nāṇ-ŏliyum * talaippĕyvatu ĕññāṉṟu kŏlo? (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

595. I seem to hang down like the golden flowers that sway on the branches of kondrai trees in Thirumālirunjolai surrounded by groves where kongu flowers bloom. When will I hear the sound of the conch that he blows in His lotus mouth, and the sound of his Sārangam bow that shoots arrows?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கோங்கு கோங்கு மரங்கள்; அலரும் பூத்திருக்கும்; பொழில் சோலை மிக்க; மாலிருஞ்சோலயில் திருமாலிருஞ்சோலயில்; கொன்றைகள் கொன்றை; மேல் மரங்களின் மேல்; தூங்கு பொன் தொங்கும் பொன்; மாலைகளோடு பூமாலைகளுக்கு; உடனாய் நின்று சமமாக நின்று; தூங்குகின்றேன் தூங்குகிறேன்; பூங்கொள் திருமுகத்து அழகிய வாயில்; மடுத்து ஊதிய வைத்து ஊதப்படுகின்ற; சங்கு ஒலியும் சங்கின் ஒலியும்; சார்ங்க வில் சார்ங்க வில்லின்; நாண் ஒலியும் நாண் ஒலியும்; தலைப்பெய்வது கேட்கப் பெறுவது; எஞ்ஞான்று கொலோ? என்றைக்கோ?
māliruñcolayil Thirumalirunjolai; pŏḻil is filled with groves; koṅku containing kongu trees; alarum with blossomed flowers; mālaikal̤oṭu the flowers; tūṅku pŏṉ that are golden hang; kŏṉṟaikal̤ from the top of kondrai; mel trees; tūṅkukiṉṟeṉ I too hang and wait; uṭaṉāy niṉṟu like them; ĕññāṉṟu kŏlo? when will I; talaippĕyvatu hear; caṅku ŏliyum the sound of the conch; maṭuttu ūtiya blown; pūṅkŏl̤ tirumukattu by His beauitifil mouth; nāṇ ŏliyum and the twang; cārṅka vil of His sharana bow

NAT 9.10

596 சந்தொடுகாரகிலும்சுமந்து தடங்கள்பொருது *
வந்திழியும்சிலம்பாறுடை மாலிருஞ்சோலைநின்ற
சுந்தரனை * சுரும்பார்குழல்கோதை தொகுத்துரைத்த *
செந்தமிழ்பத்தும்வல்லார் திருமாலடிசேர்வர்களே. (2)
596 ## சந்தொடு காரகிலும் சுமந்து * தடங்கள் பொருது *
வந்திழியும் சிலம்பாறு உடை * மாலிருஞ்சோலை நின்ற **
சுந்தரனைச் சுரும்பு ஆர் குழல் * கோதை தொகுத்து உரைத்த *
செந்தமிழ் பத்தும் வல்லார் * திருமாலடி சேர்வர்களே (10)
596 ## cantŏṭu kārakilum cumantu * taṭaṅkal̤ pŏrutu *
vantizhiyum cilampāṟu uṭai * māliruñcolai niṉṟa **
cuntaraṉaic curumpu ār kuzhal * kotai tŏkuttu uraitta *
cĕntamizh pattum vallār * tirumālaṭi cervarkal̤e (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

596. Vishnuchithan the chief of Villiputhur with a garland swarming with bees composed ten lovely Tamil pāsurams praising the beautiful lord of Thirumālirunjolai where the Silambāru river flows bringing sandalwood, akil wood and throwing them up on its banks. If devotees learn and recite these ten lovely pāsurams they will join the feet of Thirumāl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
சந்தொடு சந்தனக்கட்டையையம்; காரகிலும் அகில் கட்டையையும்; சுமந்து சுமந்து கொண்டு; தடங்கள் குளங்களையும்; பொருது அழித்துக்கொண்டு; வந்து வந்து; இழியும் பெருகுகின்ற; சிலம்பாறு உடை நூபுர கங்கையை உடைய; மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலையில்; நின்ற இருக்கும்; சுந்தரனை அழகனை; சுரும்பு ஆர் வண்டுகள் தங்கும்; குழல் கூந்தலை உடைய; கோதை ஆண்டாள்; தொகுத்து தொகுத்து; உரைத்த உரைத்திட்ட; செந்தமிழ் செந்தமிழ்ப் பாசுரங்களான; பத்தும் இப்பத்தையும்; வல்லார் அனுசந்திப்பவர்கள்; திருமால் திருமாலின்; அடிசேர்வர்களே திருவடிசேர்வார்
vallār those who recite; pattum these ten; cĕntamiḻ Tamil hymns; tŏkuttu composed and; uraitta sang; kotai by Andal; kuḻal who has hair; curumpu ār where honey bees can stay; cuntaraṉai about the Lord; niṉṟa who resides; māliruñcolai in Thirumalirunjolai; cilampāṟu uṭai where Noopuragangai; vantu comes; iḻiyum rushing; pŏrutu and destroying; taṭaṅkal̤ the ponds; cumantu and carry; cantŏṭu sandal wood; kārakilum and akil wood; aṭicervarkal̤e will reach the feet; tirumāl of the Lord